ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Thursday, December 10, 2009


என் சார்பிலும் ஒரு கல்


பணம் புகழ் வந்து விட்டால் ஆசையும் அதிகரித்து விடும் போலும். ஆசை வெட்கமறியாது என்று சொல்வார்கள். அது தான் விஜய்க்கும் நடந்திருக்கின்றது. அரசியல் என்றால் என்னவென்றே தெரியாத அரை வேக்காடுதான் விஜய். இல்லையென்றால் அமுல் பேபி (பால் குடி) என்றுதான் சொல்ல நினைத்தேன். ஆனாலும் "அண்ணா" என்று விஜய் அடிக்கும் லூட்டிகளைப் பார்த்தால் பால் குடிக்கும் பிள்ளையைப் போல தெரியவில்லை. பிஞ்சில் பழுத்திருக்கும் பொறுப்பற்றதனம் தான் தெரிகின்றது.

விஜய்க்கு வந்திருக்கும் அரசியல் ஆசை(அப்பனே உண்டாக்கியதாக இருந்தாலும்) வேட்டிக்குள் விட்டுக்கொண்ட ஓணானைப் போலவே குத்துது குடையுது என்று விஜய் ஓடத்தான் போகின்றார்.இப்போதே ஓணானின் குடைச்சல் வெளிப்பட ஆரம்பித்து விட்டது. காங்கிரஸில் சேர்ந்து புரட்சி செய்யப்போனவருக்கு "இந்த மாங்கா புளிக்கும்.." என்ற அரசியல் பாடம் ஆரம்பமாககி விட்டது.

மாநில லெவலில் பதவி எதிர்பார்த்துப் போனவருக்கு இளைஞர் அணியில் கொ.ப.செ என்றவுடன் "சப்"பென்று போனது ஒன்றும் ஆச்சரியமல்ல. ஆனால் எதிர்ப்புகள் விசுவரூபமெடுத்தது தான் மிச்சம். திருட்டு முடிச்சுமாறிகள் கழகம் அல்லது அதி திருட்டு முடிச்சுமாறிகள் கழகம் என்பதற்கு அப்பால் தமிழக அரசியல் இல்லை என்ற பாலபாடத்தின் முதற்படிதான் "வேட்டைக்காரன்" இழுத்தடிப்பும் புகழ் சுருக்கலும் என்று பேச்சு அடிபடுகின்றது.

இது போதாதென்று ஈழத்தமிழர் மனம் கசக்கும் விடயமொன்றும் தானாகவே சேர்ந்து மிரட்டிக்கொண்டிருக்கின்றது. வேட்டைக்காரனுக்கு இசை அமைத்த விஜய் ஆண்டனியின் கூட்டாளி இராஜ் வியேரட்ணவே இப்போது விஜய்க்கு வில்ல த்தனமாக வாய்த்திருக்கின்றார்.

ஈழத்தமிழரைக் கொன்று குவித்த ஈவிரக்கமற்ற சிங்களப் பாசிஸப்படையை "எங்கள் கடவுள்கள்" என்று போற்றிப்பாடிய பாடலை வடிவமைத்தவர் இந்த இராஜ் வியேரட்ண.

நொந்து கிடக்கும் ஈழத்தமிழர்களின் கோபம் இராஜிலிருந்து தாவி விஜய் ஆண்டனிக்கு மாறி இப்போது வேட்டைக்காரன் விஜய் இடம் வந்து நிற்கின்றது.வேட்டைக்காரனைப் பகிஷ்கரிக்குமாறு புலம் பெயர்தேசங்கள் எங்கும் துண்டுப் பிரசுரங்கள்.

அரசியலில் தலையெடுக்க விடாது நடக்கும் பின்புலச் சதிகளில் சிக்கிச் சீரழிந்து கிடக்கும் விஜயிற்கு பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாக மூச்சு முட்டிக் கொண்டிருக்கின்றது.

ஈழத்தமிழ் மக்களின் கோபத்திலும் நியாயம் இல்லாமலில்லை. இப்போதெல்லாம் தமிழ்ப்படங்களின் இலாபம் கொட்டிக்கொடுக்கும் இடமாகப் புலம்பெயர் தேசங்களே விளங்குகின்றன. தமிழ்ப்படங்களுக்கு மட்டுமல்ல. பாலிவூட் படங்களுக்கும் தான். அந்த உண்மையைத் தான் கனடாவின் டோரண்டோ நகரத்தில் நடக்கவிருக்கும் "இண்டியன் fபில்ம் அக்கடாமி அவாட்ஸ் 2011" வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. எதிர் காலத்தில் இது தெற்கின் கோலிவூட்டிற்கும் பொருந்தக் கூடியதே.

ஈழத்தமிழருக்கு எதிராக இயங்கும் தென்னிந்திய அரசியற் பெருச்சாளிகளுடன் ஒப்பிடும் போது விஜய் ஒரு குட்டி நாய்தான். ஆனாலும் நாயின் குணம் கடிப்பதாக இருக்கும் வரை மனிதனின் குணம் அதை கல்லால் அடிப்பதாகத் தான் இருக்க வேண்டும். என் சார்பிலும் ஒரு கல்.

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil