ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Thursday, December 10, 2009


வெறி நாய்களும் நியூட்டனும்


வெறிநாய்கள் பற்றிக் கோபமாக எழுதியிருந்தேன். ஒன்றல்ல இரண்டல்ல ஐந்து வெறிநாய்கள் பற்றி. மனிதரைத்... தன் இனத்தவரை... தன் இருப்பு ஒன்றிற்காகவே கடித்துக் குதற முயலும் அவர்களின் நிணத்தையும் எலும்பையும் சுவைக்க முயலும் ஆசையை நினைத்தால் இப்போது பரிதாபமாகவே இருக்கின்றது.

தன் இருப்பை நியாய வழியில் காட்ட முடியாத கோழைகளே இவ்வாறு காட்டிக்கொடுக்கவும் கால் நக்கவும் முன் வருவார்கள். ஊரில் கள்வனைத் துரத்திப் போகும் போது முன்னால் குரைத்துக் கொண்டு ஓடும் தெருநாயைப் போன்றவர்கள் இவர்கள். கள்வன் அகப்படுகின்றானோ இல்லையோ கையில் வைத்திருக்கும் கம்பினால் அடியோ கல்லினால் எறியோ வாங்குபவர்கள் இவர்களே.

எத்தனைதான் எஜமான விசுவாசம் காட்டினாலும் எஜமானின் கால் உதையும் கல்லெறியும் தான் இவர்களுக்கு விதித்த விதியாகும். இவர்களைப் போல் இன்று எமது சமூகத்தில் புதிய புதிய நாய்கள் புதிய புதிய தொனியில் குரைத்துக் கொண்டே இருக்கின்றன.

புலிப்பாசிசம் என்று கூறிக்கொண்டே எலிப்பாசாணம் வைத்தவர்கள் இவர்கள். புலிகளைப் புறம் சொல்லிக்கொண்டே தமது இயக்கங்களில் அறம் அழித்தவர்கள். இனியொரு அசோக்கும் தமிழரங்கம் இராயாகரனும் இப்போதும் அதைத்தான் செய்து கொண்டிருக்கின்றார்கள். தங்கள் தங்கள் பொட்டுக்கேட்டைப் புழுதி தட்டி கடை பரப்புக்கின்றார்கள். இடையிடையே மாக்ஸிஸம், கட்டுடைப்பு, கால் தடக்கல் என்று வார்த்தை ஜாலங்களை இடையிடையே தூவி விட்டாலும் நாற்றம் என்னவோ குடலைப் பிரட்டுகின்றது.

கூவத்தைக் கூட தூய்மையாக்கிவிடலாம். இவர்கள் கொள்கைகளையும் கூவல்களையும் கழுவிக் காயப்போடவே முடியாது . அத்தனை அழுக்கு. இதில் குளுவனுக்கு குத்திய கொம்பு சாட்சி என்பது போல அவரவர் அடிவருடிகள் அஜால் குஜால் வாதங்களுடன் வம்பு மடம் களைகட்டியிருக்கின்றது. ஈழ மக்கள் போராட்டம் என்பது சந்தைக் குத்தகை போல நான் அது செய்தேன்..இது செய்தேன்..நீ என்ன செய்தாய்? அப்போது எங்கே இருந்தாய்? இப்போது ஏன் வந்தாய்? என்று கேள்விகள்..கேள்விகள்.. கேள்விகள் மட்டுமே.

விட்டேனா பார் என்ற தொடைதட்டலும் காட்டுக் கூச்சலுமே தவிர வேறொன்றும் இல்லை. இடையிடையே நழுவி ஓடும் விலாங்குகளாக அந்தப் பக்கம் இந்தப்பக்கம் என்று இருந்தவர்களும் இப்போது விலைக்கு சோரம் போகும் விபச்சாரப் பட்டியலில். சுண்ணாம்பு சுகன் , அ.மார்க்ஸ் என்று ஒரு நீண்ட பட்டியலே ஈழத்தமிழ் மக்களுக்கு எதிராக மகிந்தவின் வால் பிடி பட்டியலில் எண்ணிக்கைகளைக் கூட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.

போனது போனது தான். அது காலம் எனிலும் மானம் எனிலும் ..ஒரே விதிதான்.

மகிந்தவோ புலிகளோ அல்ல, ஈழத்தமிழரின் தலை விதி. மகிந்தவுடனோ புலிகளுடனோ முடிந்து போவதோ தீர்க்கப்பட்டுப்போவதோ அற்ற அந்தரத்தில் தான் தமிழ் மக்களின் நிலையும் இடரும் தொங்கிக் கொண்டிருக்கின்றது.

அதைப்பற்றி யாருக்கும் கவலையும் இல்லை. அக்கறையும் இல்லை.
தன் சோறு, தன் பொண்டாட்டி,தன் பிள்ளை ..அவ்வளவு சுயநலம்.ஊரான் காசிற்கு ஆசைப்படும் ஊதாரிக்கூட்டம்.

இடையில் குரைக்கும் தெருநாய்களும் குதறும் வெறிநாய்களுக்கும் சமாந்தரமாக தெருவில் திரியும் சொறிநாய்களும். யுத்தத்தின் பின்னான காலம் இப்படித்தான் போய்க்கொண்டு இருக்கின்றது.

புழுதி கிளம்ப குரைத்தும் குதறியும் திரியும் இந்த நாய்களை அடித்து விரட்ட ஒரு சிறு கல் போதும். அது மக்களிடம் இருந்து தான் வர வேண்டும்.

விதிகளிலேயே எனக்கு மிகவும் பிடித்த ஒரு விதி. அது நியூட்டனின் மூன்றாவது விதி.

"ஒவ்வொரு தாக்கத்திற்கும் அதற்குச் சமமானது எதிரானதுமான மறுதாக்கம் உண்டு"

அது சிங்கள சிறிலங்காவிடமிருந்து வந்தாலென்ன? இந்தியாவிடமிருந்து வந்தாலென்ன? ஈழத் தமிழினம் சமமான எதிர்த் தாக்கத்தைக் கொடுக்க ஒரு நாள் வந்தே சேரும். அப்போது முகத்தைக் காட்டிப் புண்னாக்கிக் கொள்வதைத் தவிர அவர்களுக்கு வேறுவழி இருக்காது.

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil