ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல
ஈர ஈழம்
Wednesday, December 23, 2009
இந்தியாவிற்கு எதிராகப் போர்க்கொடி?
நேபாள மாவோயிஸ்ட் தலைவர் பிரசண்டா
இந்தக் கேள்வி இப்போதெல்லாம் தூக்கலாகவே ஊறுத்திக் கொண்டிருக்கின்றது.
சின்ன வயதில் ஸ்கூலில் படிக்கும் போது இத்தகைய அனுபவம் உங்களுக்கும் ஏற்பட்டிருக்கும். ஒரு குழப்படி கார மாணவன் அடிக்கடி முறையிட்டுக்கொண்டிருப்பான். பக்கத்தில் இருந்தவன் அடித்து விட்டான். முன்னால் இருந்தவன் கிள்ளிவிட்டான். பின்னால் இருந்தவன் உதைத்து விட்டான் என்று. எங்களுக்கும் அவனைப்பற்றி தெரியாத வரைக்கும் பாவமாக இருக்கும். ஐயோ அவனைப் போட்டு தொந்தரவு செய்கின்றார்களே என்று பரிதாபமாக இருக்கும்.
சுற்றியுள்ள மாணவர்களைக் கோபமாகவும் வெறுப்பாகவும் பார்ப்போம். அவனுக்காக அனுதாபப் படுவோம். அது தான் விபரம் புரியாத மாணவர்களின் இயற்கையாக இருந்தது. எல்லாம் ஒரு கட்டம் வரை தான். ஆசிரியர் எடுத்துச் சொல்லும் வரை தான்.
அந்த மாணவனிடம் ஆசிரியர் கேட்டார். "அது ஏன் உன்னிடம் மட்டும் தான் எல்லோரும் வம்பு பண்ணுகின்றார்கள்? அதைப் பற்றி நீ யோசித்துப் பார்த்தாயா? ஏன் மற்றவர்களிடம் யாரும் வம்பு பண்னவில்லை? நீ அவர்களுடன் வம்பு பண்ணியதால் அவர்கள் உன்னோடு முரண்டு பிடிக்கின்றார்கள் என்று ஏன் உனக்கு விளங்கவில்லை? " என்று கேட்டார்.
அதன் பிறகு தான் மற்றவர்களின் முறைப்பாடுகளை காது கொடுத்துக் கேட்கத் தொடங்கினோம். ஒருவனின் அழி ரப்பரைத் திருடி வைத்திருக்கின்றான். ஒருவனின் பென்சிலை உடைத்துப் போட்டிருக்கின்றான். ஒருவனின் புத்தகத்தைக் கிழித்து எறிந்திருக்கின்றான். இவை எல்லாவற்றிலும் இருந்து தப்பிப்பதர்காக முன்னரே முறையிட்டு அழுகுணி ஆட்டம் ஆடியிருக்கின்றான்.
பின்னர் அவனை நாங்கள் வெறுத்து ஒதுக்கி வைக்கத் துவங்கி விட்டோம். துட்டனின் குணம் எப்போதோ ஒருநாள் வெளியில் வந்தே விடும்.
சரி இப்போது நிஜத்திற்கு வருவோம். கொஞ்சக் காலம் முதல் இந்திய பங்களாதேச எல்லையில் துப்பாக்கி வேட்டுக்கள் கேட்டு ஓய்ந்திருக்கின்றது. பங்களா தேச எல்லைக் காவலர்களின் திடீர் தாக்குதலை இந்தியப்படை வீரர்கள் வெற்றிகரமாக முறியடித்ததாக எமக்குக் கூறப்பட்டது. பின்னர் சியாச்சின் லடாக் பகுதியில் போடப்பட்ட வீதி வேலைகளை சீன இராணுவம் அத்துமீறி உள்நுழைந்து தடுத்ததாகக் கூறப்பட்டது. ஆனால் சீனாவின் பார்வை வேறாக இருக்கின்றது.கடந்த மாதத்தில் பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கிச் சூடும் பரஸ்பர குற்றச்சாட்டுகளும்.
இப்போது நேபாள உள்நாட்டு விடயங்களில் இந்தியா தலையிடுவதாக நேபாள மாவோயிஸ்ட் தலைவர் பிரசண்டா குற்றஞ்சாட்டுகின்றார். இந்த வருடத் தொடக்கத்தில் ஐந்து இலட்சம் ஈழத் தமிழரின் இழப்பிற்கு இந்தியாவே காரணம் என்ற கோபம் கொப்பளிக்கும் தீராத குற்றச்சாட்டு ஈழத்தமிழ் மக்களால் கூறப்படுகின்றது.
இப்போது அதே மாணவனுக்கு ஆசிரியர் சொன்ன அறிவுரையை நாமும் இங்கு கேட்டுப் பார்ப்போம். அதெப்படி இத்தனை நாடுகளும் இந்தியாவின் மீது மட்டும் குற்றஞ்சாட்டுகின்றன. பங்களாதேசம் தன்னைச் சூழ்ந்திருக்கும் மியார்மர் போன்ற நாடுகளக் குற்றஞ் சாட்டவில்லை. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானையோ மேலுள்ள நாடுகளையோ குற்றஞ்சாட்டவில்லை. நேபாளம் பூட்டானையோ தீபெத்தையோ இல்லை சீனாவையோ கூட குற்றஞ்சாட்டவில்லை. இலங்கை கூட பாகிஸ்தானையோ சீனாவையோ குற்றஞ் சாட்டவில்லை.
அப்போது இத்தனை குழப்பங்களுக்கும் இரத்தத்திற்கும் இந்தியாதான் காரணமா? அதன்
அஹிம்சை முகமூடி அதிகம் கிழிந்து தொங்கத் தொடங்கி விட்டதா?
ஈழத்தில் தடைசெய்யப்பட்ட இரசாயன உயிரியல் குண்டுகளைப் பாவித்தது தொடர்பான குற்றச்சாட்டு ஒன்று இருக்கின்றது. அதை வழங்கியது இந்தியாவே என்று சிறிலங்கா வாக்கு மூலம் கொடுத்துள்ளது. அதே நிலைமை பாகிஸ்தானிலோ பங்களாதேசத்திலோ நேபாளத்திலோ அல்லது ஆக்கிரமிக்கப்பட்ட காஸ்மீரிலோ இந்தியாவால் உருவாக்கப்பட்டிருக்கின்றதா? என்ற தகவல்களை மனித உரிமைகள் ஆர்வலர்கள் சேகரிக்க வேண்டும்.
அதை சர்வதேச சமூகத்தின் முன்னும் ஐ.நாடுகள் சபையின் முன்னிலையிலும் கொண்டு வரவேண்டும். இந்தியாவால் வழங்கப்பட்ட சர்வதேச சமூகத்தால் தடை செய்யப்பட்ட கண்ணிவெடிகளைப் பற்றிய ஆதாரங்களையும் அதனால் கால்களை அவயவங்களை இழந்த சாட்சியங்களையும் ஒருங்கு சேர்க்க வேண்டும். இவை இந்தியாவின் அரச பயங்கரவாத கோர முகத்தை வெளிக்கொண்டுவர அதிகம் துணை செய்யும். ஈராக்கில் நடந்தது போன்று தடைசெய்யப்பட்ட ஆயுதங்களின் பதுக்கல் தொடர்பாக இந்தியாவில் சோதனை செய்ய ஐ.நா வைக் கோர வேண்டும்.
இதனால் காஸ்மீரில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் இரத்தத்தையும் பாகிஸ்தான் பங்களாதேஸ் எல்லைக்கிராம மக்கள் தாக்கப்படுவதையும் தடுக்க முடியும்.
இக்குற்றச்சாட்டுகள் இந்தியாவிற்கு எதிராக நீளுவது இந்தியா அதிக பாவ காரியங்களைச் செய்யும் பயங்கரவாத நாடாக மாறிக்கொண்டிருக்கின்றது என்ற எண்ணத்தை உறுதிப்படுத்துகின்றது. இது ஒரு நாளில் பட்டவர்த்தனமாக வெளியில் வரும்.வரவேண்டும். அப்போது தென் ஆபிரிக்கா போன்று மனிதர்களால் ஒதுக்கப்படும் நாடாகிவிடும் என்று தான் எண்ணத் தோன்றுகின்றது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment