ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Saturday, December 5, 2009


ஜோக்கர் ஜோக்கர்


தமிழக இலக்கியம் இத்தனை நாள் வரை சாருவைச் சுற்றியே வந்தது. குமுதத்தின் இருண்ட கணமொன்றில் சாருவின் புகழுக்கு அபகீர்த்தி ஒன்று நேர்ந்தது. அதனால் தமிழ் இலக்கிய உலகம் இப்போது தலை குனிந்து நிற்கின்றது. எத்தனை பெரிய இழப்பு. ஏற்கனவே தமிழில் விலை போகாத குறையால் மலையாளத்தில் வாந்தி எடுக்கப் போன சாருவை வில்லங்கத்தில் கட்டியிழுத்து வந்த பெருமை குமுதத்தின் அந்த "புத்திசாலி"க்கு மட்டுமே சேரட்டும்.

அதனால் சிண்டு முதல் நண்டு வரை தமிழ் இலக்கிய "புளொக்கிங்" பதிப்புகள் வரை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து மேய்ந்து கொண்டிருக்கின்றார்கள். எதைப் பற்றி? சாரு ஜோக்கரா? ஜோக்கருக்கெல்லாம் ஜோக்கராவென்று. என்ன ஒரு தேவைப்பட்ட விடயம். மனித குலத்தை ஈடேற்ற வந்த தேவ தேவனைத் தூக்கில் போட எப்போதும் ஒரு சிலுவையுடன் காத்திருக்கும் இரண்டாந்தர மனிதர்களை என்னவென்பது?

குமுதத்திற்கு எச்சரிக்கை, குமுதத்திற்கு ஒரு கடிதம்,குமுதத்துக்கு மற்றொரு வாசகர் கடிதம்
என்ற ஆபாசத்தின் உச்சக்கட்டம் தண்டோராவின் தண்டல். சொல்லி வெச்சு செய்ததைக் கூட ஒளிவு மறைவில்லாது ஒப்பிக்கும் அப்பாவி தண்டோரா கூறுவது இப்படி,

சாருவை நாம் ரசிக்க வேண்டும். விமர்சிக்க கூடாது. (தமாஷை எல்லாம் விமர்சிக்க முடியுமா?)

அதற்கெல்லாம் அவர் அப்பாற்பட்டவர்.(எதற்கு சீரியஸாக பேச இவரிடம் என்ன இருக்கின்றது? அதைத்தானே நாங்களும்(ஜெமோ வை இதற்குள் இழுத்து வராதீர்கள்) தலையால் அடித்துக் கூறுகின்றோம்)

குமுதம் சொன்னதெல்லாம் சும்மா..சென்சேஷனுக்காக சாருவிடம் சொல்லி விட்டே செய்திருப்பார்கள்..(தலைவரும் சும்மா எல்லாம் தலையாடியிருக்க மாட்டார்..)

சாரு.. போட்டோவை தாமதமாக போடுகிறேன்.. நீங்கள் அன்று சொன்னது போல் லிங்க் கொடுத்து விடுங்கள். (ஜோக்கருக்கு ஜோக்கரின் உதவி) உங்கள் புண்ணியத்தில் இன்றைய பொழுது ஓடட்டும்.. 12 ஆம் தேதி சந்திப்போம்..(பவுன்சர்லாம் வர்றாங்களாமே)

சாருவிற்காக தமாஷ் பண்ணும் ஜோக்கர்கள்.


உயர்திரு சார்,

வணக்கம்.

இலக்கிய உலகில் உங்களை ஒரு ஜோக்கராகத்தான் பார்க்கிறோம் என்று எழுதிய அந்த புத்திசாலிக்கு இந்த கடிதம் மூலம் என் எதிர்வினையை தெரியப்படுத்துகிறேன்.

(திரு. புத்திசாலி அவர்களே,

நீங்கள் சாருவின் எழுத்தை படித்துள்ளீர்களா?

அப்படி படித்தும் நீங்கள் அவரை ஜோக்கர் என்று சொன்னீர்கள் என்றால் உங்களை பார்க்க எனக்கு பரிதாபமாகத்தான் உள்ளது.ஏனென்றால் வாசிப்பு படிநிலையின் உச்சங்களில் இருப்பவரால் மட்டுமே சாருவின் எழுத்தை புரிந்து கொள்ளமுடியும். நீங்கள் வாசிப்பில் இன்னும் ஆரம்ப நிலையில் உள்ளவர் என்பதையே உங்களுடைய இந்த பேச்சு காட்டுகிறது. நான் கடந்த ஐந்து வருடங்களாக சாருவை படித்து வருகிறேன். இந்த ஐந்து வருடத்தில் சாருவின் எழுத்தை படித்ததன் மூலம் என் பண்பியல் தொகுப்பில் ஏற்பட்ட மாற்றத்தை என்னால் உணர முடிகிறது.

சொரணையுள்ள எழுத்து சாருவுடையது. அந்த சொரனையை தன் எழுத்தின் மூலம் என் உடம்பிலும் ஏற்றி விட்டு விட்டார் சாரு. எழுத்து என்பது நம்மைச் செழுமைபடுத்துவதாக அமைய வேண்டும். அந்த வகையில் சாருவின் எழுத்து என்னை செம்மை செய்துள்ளது. இன்னும் பற்பல மாற்றங்களை சாருவின் எழுத்தின் மூலம் நான் அடைந்துள்ளேன். இவ்வளவு பெரிய ஒரு எழுத்தாளரை ஒரு ஜோக்கர் என்று கூற எப்படி மனது வந்தது உங்களுக்கு? நீங்கள் சாருவை படித்திருக்கவில்லை அல்லது சாருவின் மீது ஏற்பட்ட பொறாமை உணர்வினால் அப்படி சொல்லியுள்ளீர்கள் என்று தெரிகிறது.

கோபத்துடன்
பெருமாள்
கரூர் )

தானே தானே தனதானா

இதனாலேயே சொல்கின்றோம். சாரு ஜோக்கருக்கெல்லாம் பெரிய ஜோக்கர்


அன்று சொன்னது போல் லிங்க் கொடுத்து விடுங்கள்.உங்கள் புண்ணியத்தில் இன்றைய பொழுது ஓடட்டும். ஹா..ஹா..

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil