ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Friday, December 11, 2009


உண்மைத் தமிழன கண்டு பிடிக்க...

உண்மைத் தமிழன்னா ..என்னாய்யா? நம்ம மரிதிப்பட்டி சேகர் சொல்லியிருக்காப்ல... கண்டுக்கிறதிற்கு என்னா மெஸர்மெண்ட் வைச்சிருக்காக... கடா மீசை வெச்சவனா? நம்ம திருமா போல... இல்லே தமிழு தமிழுன்னு கூவிக்கினு திரியிறவனா நம்ம கருப்புக்கண்ணாடி போல... அல்லது ரெயிலு தண்டவாளத்தில படுத்துக்கிரவனா?(ரெயிலு வராத நேரம்பார்த்து)..
இல்லே மறதி வியாதி தெளிஞ்சிக்கிர போது அல்லது தேர்தல் வரும்னு தெரியிற போது தமிழு,ஈழத்தமிழர்னு ஸ்டேஜ் ஷோ காமிக்கிரதா?

எப்பிடிய்யா ..கண்டு பிடிக்கிரது... அல்லது நம்ம பதிவர் உண்மைத்தமிழன் போல ஐ.டில்லாம் போட்டு நிரூபிக்கிரதா..? எப்பிடிய்யா..?

தமிழு தமிழுன்னு கூவிக்கூவி... உலகத் தமிழினத் தலைவன்னு பீலா காட்டுனவனெல்லாம் இப்போ ...சாயம் வெளுத்துப்போயி மஞ்சத் துண்டு போர்த்திகின்னு அலையிரான்...ஏன்யா இந்த வயசிலயும் உயிரோடு இருந்து நம்ம பிராணனை எடுக்கிரேன்னு மிந்தியெல்லாம் கோபம் பொத்துக்கின்னு வரும்... இப்பிடி இருந்தது தான் நல்லதின்னு இப்போ தோணுது..

இல்லாங்காட்டியும் இவங்க மொள்ளைமாரித்தனமெல்லாம் நமக்கு புரியாமயே போயிருக்கும்... காயிதம்னா என்னா...எப்பிடி எழுதிரது....மூணு மணி நேரம் மட்டும் எப்பிடி (காலைச் நாஷ்டாவிற்கும் மத்தியானச் சாப்பாட்டிற்கும் இடையில்) உண்ணாவிரதமிருக்கிறது... இதயம் அழுவுறது.. மனம் அழுவுறது...கண்கள் பனிக்கிறது..இப்பிடி எந்த வெண்டையும் தெரியாத அப்பிராணிகளா..? காந்தி, எம் ஜி ஆர் ரேஞ்சுக்கு கோயில் கட்டி கும்பிட்டுத் தொலைச்சிர்ப்போம்....

அப்பாடா இப்போ ஒரு சூடம்,தேங்கா, பழம் பாக்கு எல்லாம் மிச்சமாயிட்டு... இது தான்யா பகுத்தறிவு ..வாழ்க்கைன்கிறது... தானே தன் மேல் இருக்கும் வெங்காயத் தோலெல்லாம் உரிச்சுக் காட்டி அம்மணமாய் நிக்கிரது.... பார்ர்யா... ஒண்ணுமேயில்லே... பெரிய பருப்பின்னு எம் பின்னாடி ஓடியாந்தீங்களே...முட்டாளுங்க...பத்தாம் பசலிங்க..போயி ..உங்க ஜோலியைப் பாருங்கன்னு... புரிய வெக்கிரது...

எத்தனை பெரியார் பொறந்திருந்தாலும் இதையெல்லாம் சாதிச்சிருக்க முடிஞ்சிருக்குமா? தமிழ்நாட்டுக் காரனுக்கெல்லாம் "காசிருந்தா தான் ஓட்டுன்னு" கராரா பேசி கறக்கக் கத்துக் கொடுத்தது ...சாதனையில்லையா?

பெரியார் என்னா பகுத்தறிவு பேசி என்னா பிரயோசனம்... இதுக்காண்டியாவது ஒரு போஸ்தகம் போடனும்..."தி ரைஸ் அன்ட் போல்ட் ஆவ் கருப்பு கண்ணாடி"ன்னு. அப்புரம் துக்கிப் போட்டுடனும் ரெண்டு பேத்தையும் கூவத்தில. அப்புரமாவது கூவத்தைக் கிளீன் பண்ணுராங்களான்னு பார்க்கணும்...

நம்ம மரிதிப்பட்டி சேகரு சொன்னாப்பல.. திருமா.. உண்மைத் தமிழனா? எப்பிடி சேகரு கண்டு பிடிக்கிரது.... எனக்கொண்னும் அப்பிடி தோணலையே.. இத்தோ.. நம்ம கனிமொழி அம்மாவுக்கு காவலா சிறிலங்கா போனாரு..(போன ஆளுங்களிலேயே பெரிய மீசை வெச்ச ஆளு.. அசல் தமிழன்(?).. ..

ராஜ பக்க்ஷ .."ஏண்டா பேமானி ...நீ மட்டும் பிரபா கூட இருந்திருந்தீன்னா.. பன்னியைச் சுடுறாப்போல சுட்டுப்போட்டிருப்பேன்னு..." செம டோஸ் விட்டபோது ..நீ என்னா செய்திருக்கோணும்....

"எலே ..நம்ம வயலில ஏர் பிடிச்சு உழுதாயா? நாட்டு நட்டாயா..? நம்ம குலப் பெண்டிருக்கு ஒரு கொடம் தண்ணி பிடிச்சுக் கொடுத்தாயா..? வாசல் பெருக்கி கோலம் போட்டாயா? சாணி தட்டி வெரட்டி போட்டுக்கொடுத்தாயா?ன்னு " ஏதாவது சொல்லியிருக்கணுமில்ல..

அதை விட்டிட்டு டவுசர் நனைச்சுக்கிட்டு வந்த நீயெல்லாம் உண்மைத் தமிழனாடா?

உனக்கென்னடா பயம்? தமிழ் நாட்டு குழுவில விருந்து சாப்பிடப் போறீங்க.. அவன் ஏதோ கேட்டான்..நீயும் ஏடாகூடமா .ஏதாவது சொல்லியிருக்கலாம்ல... பயம்... குஷ்பு போல டான்ஸ் ஆடிப் பொழைக்க வந்த பொண்ணுங்க பேரில தான் உன் வீரம் எல்லாம்...சிறுத்தையாம்.. தெண்டியாம்.. எதுக்கடா உனக்கு மீசை..?

"சொளகால புலி அடிச்சு வெரட்டின வீரப்பொண்ணுக்காடா...நீயெல்லாம் பொறந்திருக்கே..."



விக்கிராங்க ..ஒண்ணொண்ணு வாக்கிட்டுப் போங்கையா...


சின்னச்சின்ன பொண்ணுங்கள்லாம் ஹெலி அடிச்சுக்கிட்டிருந்த ஊருக்குப் போயி ..டவுசரு நனைச்சுக்கிட்டு வந்த நீயா "உண்மைத் தமிழன்"?

ஏம்பா சேகரு.. எதை வெச்சுய்யா..இவனுகள்ல ...உண்மைத் தமிழன கண்டு பிடிக்கிரது...

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil