ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல
ஈர ஈழம்
Sunday, December 20, 2009
தமிழீழமும் தமிழ் பதிவர்களும்
நீண்ட நாட்கள் பதிவு போடாது பார்வையாளர்களாக இருப்பதிலும் ஒரு நன்மை இருக்கின்றது. பதிவுகளை வாசிப்பதற்கு நேரம் கிடைக்கின்றது. வாசித்ததில் ஈழத்தமிழர்களின் எழுத்துக்களை மட்டும் விமர்சிக்கும் எண்ணம் எழுந்திருக்கின்றது.
தமிழன் தோற்றானா? இல்லையா ? என்ற கேள்வி நெருடிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் நமது கோழைப்பதிவர்கள் சிலர் இரை மீட்டுக்கொண்டிருக்கின்றார்கள். அரசியல் என்பதே எதிரிகளை அழிக்கும் அறம் என்பதைப் புரியாத அல்லது எதிரிகளால் அழிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ளாதவர்கள். எதற்கும் நாம் எம்மைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.
இதை விட எந்த அரசியலும் இந்த உலகில் இல்லை. அது பல காரணங்களைச் சுற்றி இருக்கலாம். ஆனால் எல்லாக் காரணங்களும் தேச விடுதலை தனி மனித, இன விடுதலை என்பதன் முன்னால் செயலிழந்து போய் விடும்.
இதை எல்லா அராஜக வாதிகளும் புரிந்தே வைத்திருக்கின்றார்கள். அதனாலேயே புதிது புதிதாக புதிய உத்திகளில் படுகொலைகளை நடாத்திக் காட்டுகின்றார்கள்.
ஈழப்போரிலும் இந்திய வல்லாதிக்கமும் சிங்களப் பாசிசமும் இதையே நடாத்திக் காட்டின. ஆனாலும் பேசும் குரல்களை அடைத்து விட முடியவில்லை. ஆனாலும் சில பயந்தாங்கொள்ளிகளை மூச்சடைக்க வைத்தேயிருக்கின்றன. வடலி சயந்தன் போன்ற சில பின்னடைவு வாதிகளை பின்வாங்க வைத்திருக்கின்றன. இவர்கள் வில்லங்கம் வேலுப்பிள்ளை போன்றவர்கள். வாய்ச்சவடால் அடிப்பது இல்லையேல் ஓடி ஒழிப்பது. என்ற ஒரு யுக்தியுடன் ஜீவித்திருப்பவர்கள். சமுதாயத்தைப் பின் நின்று இழுப்பவர்கள். ஒதுக்கப்பட வேண்டியவர்கள். இப்போது இவர்கள் செய்வது ஒழிப்பது கோழைகளாக. அதே நேரம் கோழைகளாக ஒழிப்பதற்கான தங்கள் வீரதீரப் பராக்கிரம(தங்களை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்காக) சாட்டுக்களைக் கூறுவது.
மற்ற ஒரு கன்னை. எப்போதும் குறை சொல்லுபவர்கள். தாங்கள் செய்ய வேண்டியதை எப்போதும் சொல்லாதவர்கள் என்பதற்கு அப்பால் அவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றே தெரியாதவர்கள். இராயாகரன், இனியொரு போன்றவர்கள். மற்றவர்கள் தமிழ் நதி , சகாரா போன்றவர்கள். இவர்களுடன் விவாதிக்க இன்னும் இடம் இருக்கின்றது. தமிழ் மக்கள் சார்ந்து சிந்திக்கும் தன்மை உள்ளவர்கள்.
இனி கிலுகிலுப்பை போன்று ஜல்லி அடிக்கும் ஷோபா சக்தி, சுகன் போன்ற ஈரூடக வாழ்வியல்புள்ளவர்கள். புலியும் புலியல்லாததுமான வாழ்வில்லையேல் உயிர் வாழ முடியாதவர்கள்.வெறும் சரவெடிகள், ஊசிப்போன பட்டாசுகள். இவர்கள் களைகள். எடுத்து எரிக்கப்பட வேண்டியவர்கள்.
அதே நேரம் கொழும்பில் இருந்து வெளுத்து வாங்கும் லோஷன் போன்றோர் விலாங்குகள் போன்றவர்கள். மீனுக்குத் தலையையும் பாம்புக்கு வாலையும் காட்டும் இரண்டும் கெட்டான்கள். அவர்கள் நிலை புரிந்து கொள்ளக் கூடியதே.
ஆனால் இடையில் இருந்து புலுடா அரசியல் செய்யும் சிறீரங்கன்,எஸ்.குகநாதன் போன்றவர்கள் அள்ளி எறியப்பட வேண்டியவர்கள். தமிழரைப் பிடித்த நச்சுக்கிருமிகள்.
ஈழத்து நிலமை இப்படியிருக்க இந்தியத் தமிழர் என்று மார்தட்டிக்கொள்ளும் சில மூதேவிகள் எழுதிக் குவிப்பதை எந்தச் சாக்கடையில் அள்ளிப்போடுவது என்றே தெரியவில்லை. ஈழப்பயங்கரவாதிகளிடமிருந்து மீண்டு வந்திருக்கும் மக்கள் என்ற ரேங்கில் எழுத வெளிக்கிட்டிருக்கின்றார்கள்.
நர்சிம், ஐரோவதம் போன்றவர்கள் ஏதோ தாங்கள் தான் ஈழப் போராட்டத்தின் நியாய வாதிகள் போன்று அபிப்பிராயம் கூறுகின்றார்கள். தங்கள் மனைவிகளிடமே அபிப்பிராயம் கூற முடியாத பேமானிகளிடம் ஈழத்தமிழனின் எதிர்காலம் அடங்கிக் கிடப்பது எவ்வளவு துர்ப்பாக்கியம். பிரபாகரன் பற்றியும் அவர் போராட்டம் பற்றியும் அதற்கும் அப்பால் ஈழத்தமிழ் மக்களின் போராட்டம் பற்றியும் இவர்களிடம் நாம் எந்தக் காலத்திலும் அடகு வைக்கவில்லையே.
நண்பர்கள் போல் வேஷம் போட்டு அராஜகம் செய்யும் இவர்களிடம் எம் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும். கருப்புக் கண்ணாடி கழட்டாத கருணாநிதியின் தொண்டரடிப் பொடியாழ்வார் போன்ற அபி அப்பாக்கள் எழுதுவதைக் கூடப் புரிந்து கொள்ளலாம். ஆனால் இவர்கள் அறிவு ஜீவிகள் போன்று போடும் வேடம் கலைக்கப்பட வேண்டியது.
உங்கள் தலைவன் ராஜீவ் உங்களுக்கு முக்கியமானதைப் போலவே எங்கள் பெண்களின் கற்பு எங்களுக்குப் பெரிதாகப் பட்டது. அதே இந்திய ஆமியினால் கற்பு பறி போன ஒரு ஏழைப் பெண்ணினாலேயே ராஜீவ் கொல்லப்பட்டான் என்பது ஏன் உங்களால் புரிந்து கொள்ளப்படவில்லை? உங்கள் வீட்டுப் பெண்டிரை நாங்கள் கற்பழிப்பதை ஏற்றுக்கொள்ளும் மனதிருந்தால் அந்தப் பெண் செய்தது தவறுதான்.
அவர்கள் இங்கு வந்து பதிவு போடுங்கள். உங்களுடன் எதிர்வாதம் செய்யாது தவிர்த்துக் கொள்கின்றோம். அகண்ட பாரதக் கனவு எங்கள் ஈழத்தின் எல்லைகளைக் கடந்து எப்போதும் விரிந்து செல்லப் போவதில்லை. அதைக் காலம் உணர்த்தும். ஏனெனில் எங்கள் உயிர் வாழ்தலுக்கான கடைசிப் போராட்டம் இதுவென்பதால் உயிரை மதியாத போராட்டம் தான் இங்கு எப்போதும் இருந்து கொண்டிருக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment