ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல
ஈர ஈழம்
Tuesday, December 1, 2009
வயதாகியும் ஓயாத வாழ்க்கைப் போராட்டம்
பேரன் பேத்திகளை காக்க காய்கறி விற்கும் மூதாட்டி
ஓய்வே வாழ்க்கையாகி பேரன் பேத்திகளுடன் இன்புற்றிருக்க வேண்டிய வயதில், தங்கள் வயிற்றுப்பாட்டிற்காக உழைத்துக் கொண்டிருக்கும் சென்னை மாநகர் வாழ் மூத்த குடிகளின் துயரம் கலந்த வாழ்வைச் சித்தரிக்கும் புகைப்படக் கண்காட்சி இன்று சென்னையில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
கல்லுடைத்து பசியாறும் முதிய பெண்
வீட்டில் வைத்துக் காப்பாற்றக் குடும்பத்தாரின்றி, தங்கள் கையை நம்பியே வாழ்ந்துவரும் இந்த மூத்தக் குடிகள், தங்கள் உடல் உழைப்பால் சென்னை மாநகரின் தேவைகளை நிறைவேற்றி வருவதையும், அவர்களின் பொருளாதாரப் பங்களிப்பு என்ன என்பதையும் இந்தப் புகைப்படக் கண்காட்சி சித்தரிக்கின்றது.
பேரன் பேத்திகளைக் காக்க அரசியல் செய்யும் 86 வயது சக்கர நாற்காலி முதியவர்
சென்னை மாநகரமோ மக்களோ இவர்களைக் கண்டு கொள்ளவில்லை, ஆனால், இவர்களின் உழைப்பைப் பெரிதும் சார்ந்தே குடும்பங்கள் உள்ளது என்பதை - செருப்பு தைத்து தரும் வயதான பெண்மணி, தள்ளாத வயதிலும் சைக்கிள் ரிக்சா மிதிக்கும் பெரியவர், பேரன் பேத்திகளை காக்க காய்கறி விற்கும், இட்லி கடை நடத்தும் மூதாட்டிகள்,86 வயதிலும் பேரன் பேத்தியைக் காப்பார்ற சக்கரவண்டியில் அலையும் முதியவர் என்று குடும்பப் பொறுப்பு மறந்த சமூகத்தின் பொறுப்பின்மையின் விளைவை காட்டும் புகைப்படங்கள் ஏராளம் இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
தள்ளாத வயதிலும் சைக்கிள் ரிக்சா மிதிக்கும் பெரியவர்
70 வயதைத் தாண்டியும் சுமை வண்டி இழுத்துப் பிழைக்கும் பெரியவரின் புகைப்படம் மூத்தக் குடிமக்களுக்கு நமது நாட்டு அரசுகள் அளித்துள்ள ‘சிறப்பான’ இடத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
கும்பிக்கு கஞ்சி இல்லையென்பாருக்கும் கொண்டைக்கு பூ இல்லையென்பாருக்கும் வருத்தம் ஒன்றே! நிஜமாகவே முக போட்டோவும் இருந்த்தா? அப்படியென்றால் 21ம் நூற்றாண்டின் மிகப்பெரிய ஜோக் அதுவாகத்தான் இருக்கும்.
Post a Comment