ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Wednesday, January 27, 2010


டேட்டிங் போகும் பெண்களுக்கு என்ன மனத்தடை?


என்னவென்று தெரியவில்லை. என் மனத்தடை எந்த நுண்ணரசியலுக்கும் புலப்படாதது. டீ.ஜே எழுதியிருந்த "அவள்" (நெடுங்கதை)ஒருவளின் கதை என்னை இப்போதும் பிறாண்டிக்கொண்டிருக்கின்றது. என்னைப் போன்ற மடச்சாம்பிராணிகளால் புரிந்து கொள்ள முடியவில்லையோ தெரியவில்லை... காமண்ட்ஸ் யாரும் கொடுக்கவில்லை. அட டேட்டிங் போவதற்கு நம் தமிழ்ப் பெண்கள் இத்தனைமுண்டியடிக்கின்றார்களா? என்ன? "காண்டம்" நிறைப்பது மட்டும் வாழ்க்கையை நிறைவாக்கி விட முடியுமா? (ஏன் இப்படி நினைக்கின்றார்கள்)

என்னவென்று தெரியவில்லை? இப்போதைய தலைமுறை எங்கே போய்க்கொண்டிருக்கின்றது என்பது புரியவில்லை. பழையதெல்லாம் 100 % தள்ளுபடி என்ற மாயையிலிருந்து இவர்கள் விடுபடவேண்டும். முக்கி முனகும் செக்ஸ் இயக்கங்கள் தான் சமூக விடுதலை அல்லது விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையைப் புரிந்து கொள்ளல் என்பதை இவர்கள் தவறான உதாரணங்களாகக் கொண்டுள்ளார்கள் என்றே விளங்கிக்கொள்கின்றேன்.

பத்து இருபது வருடங்கள் கூடவே வந்த பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ள முடியாத அல்லது அவர்களுக்குச் சொல்லி விளங்கப்படுத்த முடியாத, ஆலோசனை பெறமுடியாத விடயங்கள் உலகில் இருக்கக் கூடும் என்பதை என் சின்ன மூளையால் எப்போதும் ஏற்றுக் கொள்ள முடியாது போய் விடுகின்றது.(பிள்ளைகளைத் தவிர வேறு உலகமே இல்லாத முட்டாள்ப்பெற்றோரின் வரிசையில் நானும் இருப்பதால் கூட அவ்வாறு தோன்றக் கூடும்) அதற்கான கம்பஸ் பார்ட்டிகளில் உங்கள் பண்பாட்டைப் புதைத்து விடும் உங்களின் விருப்பங்களை இடைமறிக்கும் என் பூர்சுவாத் தனத்துக்கான சாபங்களை எனக்காகவே ஒதுக்கி வைத்து விடுங்கள்.

நீங்கள் படிக்கும் சமூகவியலும் விஞ்ஞானமும் உங்களுக்கு முன்னால் சென்ற தலை முறையால் உங்களுக்காக சொல்லித்தரப்பட்ட விடயமாக ஏற்றுக்கொள்ள முடிந்த உங்களால் உங்களுக்கான பண்பாட்டை மட்டும் எப்படி அவர்களால் சொல்லித்தரப்பட முடியாது என்ற முடிவிற்கு வர முடிந்தது.

உங்களைப் பெத்து ஆளாக்கிய பெற்றோரால் உங்களுக்கான நல்வாழ்க்கை பற்றி முடிவு செய்ய முடியாது என்று எந்த சுவிசேஷத்தின் எத்தனையாம் அதிகாரம் கொண்டு நீங்கள் நிரூபிக்கின்றீர்கள் என்பதையாவது நீங்கள் சொல்ல வேண்டும். நவீனத்துவம் பின்நவீனத்துவம் என்று முனகுவது மட்டும் அறிவுடைச் செயல் அல்ல என்பதை டீ ஜே போன்ற அறிவுஜீவித்தனத்தின் முளைகள் போன்று காட்டிக்கொள்பவர்கள் உணரவேண்டும்.

தனிப்பட்ட முறையில் டீ.ஜே மீது எனக்கு எந்த குறையும் இல்லை. ஆனால் இது போன்ற அபத்தங்களை வியாக்கியானம் செய்யும் போது வருகின்ற சமூக தனிநபர் மனக்குழப்பங்களை விளங்கிக்கொண்டு உங்கள் பின்நவீனத்துவப்பாணியில் அலசி ஆராய்ந்து வெளியிடுவீர்கள் என்றால் என்னைப்போன்ற சமூகப் பொறுப்புடன் பெற்றோராயும் இருந்து தொலைக்க வேண்டிய அப்பாவி ஜனங்கள் விமோசனம் பெறுவார்கள்.

(அது சரி டீ.ஜே...கண்காணாத தூரத்தில் வன்கூவர் போன அந்தப் பெண்ணால் பக்கத்தில் இருந்து அன்பை மட்டும் கொடுத்த கொடுத்துக்கொண்டிருந்த .. கொடுத்துக் கொண்டிருக்கக் கூடிய பெற்றோரை மட்டும் காண முடியவில்லை என்பது எங்கள் வயிற்றெரிச்சலுடன் உங்கள் நெடுங்கதையையும் மிகவும் சுருக்கி விட்டது)

2 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//பிள்ளைகளைத் தவிர வேறு உலகமே இல்லாத முட்டாள்ப்பெற்றோரின் வரிசையில் நானும் இருப்பதால் கூட அவ்வாறு தோன்றக் கூடும்//

true..,

Anonymous said...

//பிள்ளைகளைத் தவிர வேறு உலகமே இல்லாத முட்டாள்ப்பெற்றோரின் வரிசையில் நானும் இருப்பதால் கூட அவ்வாறு தோன்றக் கூடும்//

உங்களின் தந்தை பாசம் என்னை நெகிழச்செய்கின்றது சார். ஆனா ஒன்னு உண்மையா புரியுது, தாங்கள் தங்களின் மகனிடம் வெளிபடையாக மனம்விட்டு பேசுவதில்லையோ என்று. அடிக்கடி பெசுவதுண்டேன்றால், எப்படி இந்த இடைவெளி வரும். தங்களின் ஊடகம் என்ன?
எதோ உரிமையோடு கேட்டுவிட்டேன், தவறென்றால் மன்னிக்கவும்.

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil