ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Wednesday, January 6, 2010


கருணாநிதிக்கொரு கடைசித் துடைப்பம்


இன்று தன் 96 ஆறாவது வயதில் சேடமிழுத்துக் கொண்டிருக்கும் ஜோதி பாசுவின் நிலை தான் தலைப்புச் செய்தியாயிருக்கின்றது. எத்தனைதான் பெரீய்ய தலைவராயிருந்தாலும் கட்சியின், மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாய் இருந்தாலும் இறப்பு என்பது எல்லோருக்கும் பொதுவானது தான். அதே நேரம் தனிமையாய் எதிர்கொள்ள வேண்டியதும் பயம் நிறைந்ததும் கூட.

யாரும் விரும்பி வரவேற்க முடியாததும் அதிக பயங்கொள்ள வைப்பதுவும் இறப்புத் தான். எந்த உலக உதவிகளும் உறுதுணையாக இல்லாது கையை விரித்து விடக் கூடியதும் கடுமையாகப் பழி வாங்கக் கூடியதும் நமக்கும் இறப்பு வரும் என்ற எண்ணமும் அதைச் சுற்றி நிற்கும் டாக்டர்கள் உட்பட யாராலும் தடுக்க முடியாது என்ற எண்ணமும் சித்திரவதை செய்தே நம்மைக்கொன்றுபோடக் கூடும்.

இன்று ஜோதி பாசிற்கு வந்திருக்கும் நிலை நாளை நம் கருப்புக் கண்ணாடிக்கும் வரும். 86 வயதில் துள்ளி விளையாடும் கருப்புக் கண்ணாடிக்கு நாளையோ நாளை மறுநாளோ அல்லது இன்னுமொரு ஆகக் கூடியது 10 வருடங்களுக்குள் வரக்கூடுமான ஒரு பிராணாவஸ்தையே இந்த இறப்பு. எனக்கும் இன்னும் முன்னாலோ பின்னாலோ வரக்கூடியதே. அதை எதிர்கொள்ளும் மனநிலையோ எதிர்பார்ப்போ எனக்கில்லாது இருக்கக் கூடும்.

ஆனாலும் எனக்குக் கற்பிக்கப்பட்ட என்னால் பகுத்துணரப்பட்ட எனது பாவ புண்ணிய விகிதாசாரப்படி அது அவ்வளவு கடுமையானதாக இருக்கப்போவதில்லை. அது எப்படியெனில் சனல்4 இல் காட்டப்பட்ட நிர்வாணமாக கண்கட்டப்பட்ட இளைஞர்களின் தலையின் பின்னால் சீறிப்பாய்ந்த துப்பாக்கிக் குண்டுகளைப்போல் நிகழப் போவதில்லை. பெரிய பாவங்கள் செய்த சுமைகளையும் தோளில் சுமந்து கொண்டிருக்கும் பாவியாகவும் நான் தவித்துப் போய் இருக்கவில்லை.

ஆனாலும் உலகிலுள்ள அனைவராலும் அறியப்பட்ட ஐந்து இலட்சம் தமிழ் மக்களின் இறப்பிற்கும் அடித்தளமும் அதற்கான காரியங்களையும் சாத்தியங்களையும் தனது கடிதங்களாலும் தந்திகளாலும் கூட்டிக்கொடுத்த கருணாநிதிக்கு இறைவனின் தீர்ப்பு நெருங்கிக் கொண்டிருக்கின்றது.இன்னும் 10 வருடங்களிலோ அல்லது அதனிலும் மேலாக ஒரு ஐந்து வருடங்களைக் கூட்டி 100 ஆவது வயதிலோ அது நிச்சயம் சாத்தியமாகியே தீரும்.

மரணத்திற்கு அஞ்சாத மாவீரன் இன்னும் உலகில்ப் பிறக்கவில்லை. மனதளவில் பலமுறை இறக்க வைக்கும் கோடூரம் மரண பயத்திற்கே உண்டு.அது வயது சார்ந்து கருணாநிதியை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. அதே போன்ற ஒரு மரண பயமே தனிக்காட்டு ராஜாவாகச் சுழன்று வந்த சதாமை மண்கூட்டுக்குள் புழுவாகச் சுருக்கி வைத்திருந்தது.வாழ்க்கை என்பதை புரிந்து கொள்ள முடியாத ஒரு விரக்தியில் முடிவாய் இறந்து போனதே சதாமின் அனுபவம். இன்னுமொரு தொடர்ந்த வாழ்வு சதாமுக்கு நல்கப்பட்டிருந்தால் காந்தியையும் விட மேலான தலைவனாக சதாம் மிளிர்ந்திருக்கக் கூடும்.

காசு பணமோ கூடிச் சுகித்திருந்த பெண்டிரோ சுற்றி நின்று கோஷம் போட்ட தொண்டரோ அறியாது கொண்டு போகும் கொடூரம் அந்த மரணத்திற்கே உரியது. அது சுற்றிக் குதூகலிக்கும் அடுத்த தலைவர் வயது காரணமாக நம்ம கருணாநிதியாக இருக்கக் கூடும். அப்போது சோனியாவோ அடுத்து காலன் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பிரணாப் முகர்ஜியோ எந்த இந்தியாவின் அக்னி ஏவுகணையையும் ஏவித் தடுத்து விட முடியாதது.

இது சிரிப்பாயில்லையா? தெரிந்திருந்தும் தவறு செய்த கருணாநிதி தானே தேடிக்கொண்டது தான் ஆங்காரம் கொண்ட ஐந்து இலட்சம் பிசாசுகளுடன் வாழும் வரம். ஈழ மண்ணில் குற்றுயிரும் கொலையுயிருமாகக் கொல்லப்பட்டவர்களின் ஆவிகள் அவருக்காகக் காத்திருக்கின்றன.

ஆவிகளை அடித்து விரட்ட ஹலோவீன் டேயில் மேலைத் தேயத்தவர்கள் ஒரு வித துடைப்பத்தைப் பாவிப்பார்கள். ரகுலாவின் தேசமாகிய ரோமானியாவில் வீட்டுக்கதவின் முன்னால் பூண்டுக்கொடியைக் கட்டியிருப்பார்கள். கருணாநிதியின் தனித்த புத்தி சொல்வதைப் போலவே அந்த ஆவிகளுடன் போராடட்டும். அல்லது அந்த ஆவிகளுடனான பயங்கர வாழ்வைப்பற்றி "முரசில்" உடன் பிறப்புகளுக்காக விரிவாக எழுதினால் வெரி சிம்பிளாக உலகில் மனிதாபிமானம் மலரத் தொடங்கி விடும்.

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil