ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Saturday, January 9, 2010


கருணாநிதியென்ற கசாப்புக்கடைக்காரனின் அமைச்சர்கள்

தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வாங்குவது இருக்கட்டும் ..முதலில் செந்நீரில் (இரத்தத்தில்) மிதக்கும் தமிழனுக்கு வாழ்வுரிமை கிடைக்கச் செய்யட்டும். இப்படித்தான் எண்ணத் தோன்றுகின்றது.

கருணாநிதி என்ற கசாப்புக்கடைக்காரணை நம்பி 5 இலட்சம் தமிழர்கள் குற்றுயிரும் கொலையுயிருமாக இறந்துண்டு போனபோது தந்தி,கடிதம்,மூண்டரை மணி நேர உண்ணாவிரதமென்று நாடகமாடியபோது தமிழகத்தமிழன் தனக்கொன்றும் குடி முழுகிப்போகவில்லை என்று வாளாவிருந்தான்.

20 மைல் கடந்து தானே நடக்கின்றது இந்தக் கொடுமையெல்லாம்..நானும் என் குடும்பமும் செளக்கியம் என்று வாளாவிருந்தான். நம்ம தலைவர் சொன்னா சரியாத் தானிருக்கும் என்று உடன் பரிப்புகள் எல்லாம் வரிந்து கட்டிக்கொண்டு ஜால்ரா போட்டார்கள்.

இதோ இன்று உன் வீட்டு முற்றத்திற்கு வந்திருக்கின்றது அதே இரத்தக்கோலம். உன் கண்முன்னாலேயே மக்களைக் காக்க வேண்டிய காவலரையே வெட்டிப்போட்டிருக்கும் போது மக்களால் மக்களுக்காகத் தெரிவு செய்யப்பட்ட மந்திரிகள் என்று தான் சொல்ல ஆசையாக இருக்கின்றது.

பணத்திற்காகவும் குவாட்டருக்காகவும் பல்லிளித்து நீங்கள் போட்ட வோட்டு இன்று ரெளடிகளை மந்திரிகளாக்கி வெள்ளையும் சொள்ளையுமாக யமகிங்கிரனின் தூதுவர்களாக உங்களின் முன்னால் நிறுத்தியுள்ளது.

இந்த யமகிங்கிரனின் தலைவன் என்று சொல்லும் அந்த கசாப்புக்கடைக்காரன் பதவி விலகுவது தானே தார்மீகம். மக்களைக்காக்கத் தவறியதால் நீதி வழுவியதால் அரசசபையிலேயே வழுவி விழுந்து உயிர் துறந்த பாண்டியன் வாழ்ந்திருந்த நாடுதானே இது.

"சப்-இன்ஸ்பெக்டரைக் காப்பாற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்காத 2 திமுக அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்' என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மட்டும் கோரியுள்ளார். மற்றைய அரசியல் புண்ணாக்குகளோ மத்திய அரசின் ஈனப்பிறவிகளோ இது வரை எந்தக் கருத்தும் கூறவில்லை. இரண்டு நாட்களாகின்றது. கண்ணுக்கு முன்னாலுள்ள இந்த பட்டவர்த்தனமான சாட்சியத்தை விட வேறு என்ன வேண்டி தேவுடு காக்கின்றார்கள்?

உலகமே பதைத்துக் கொண்டிருக்கும் இந்த விடயம் பற்றி இந்த கசாப்புக் கடைக்காரன் ஒரு வார்த்தை உதிர்க்கவில்லை.என்னே ஒரு தெனாவெட்டு. மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசா?அல்லது மன்னராட்சியா இங்கு நடை பெறுகின்றது? நீங்கள் யாரும் கேட்கவே மாட்டீர்களா? சோறு தான் சாப்பிடுகிறீர்களா? அல்லது... தூ..


No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil