ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Saturday, January 16, 2010


ஈழத்தமிழரின் புதுவருட நம்பிக்கை


இப்பொழுதெல்லாம் இரவுகளில் மெய் மறந்து தூங்க முடிகின்றது. அப்படித்தான் அவர்கள் கூறுகின்றார்கள். அப்படியிருந்தும் தூங்காத இரவுகளின் கறைகள் அவர்களின் கண்களில் இன்னும் கறைகளாக வழிந்து கொண்டுதான் இருக்கின்றது. இப்போதேல்லாம் புலிகளால் நிரப்பப்பட்டிருந்த என்ணங்கள் யாரால் நிரப்பப்படக் கூடும் என்ற எதிர்பார்ப்புடன் நிரம்பாமையுடன் வெறித்துத் தழும்புகின்றது. டக்ளஸ் அந்த இடத்தைப் பிடிக்கும் பகீரதப் பிரயத்தனத்துடன் முயற்சிப்பதாக அறிகின்றேன்.

டக்ளஸும் அவர் அரசியலும் அதிகம் என் மனதைக் கவராது விட்டாலும் அனாதியாகி அவதிப்படும் மக்களைக் கவரும் வல்லமை அவருக்கு இருப்பதாகவே அங்கிருக்கும் மக்கள் கூறுகின்றார்கள். "ஆண்ட பரம்பரை"க்கதைகளை விட்டு வரமுடியாமலேயே இருக்கின்றார்கள் கூட்டணிக்கட்சியினர் என்பதே தமிழ் மக்கள் கருத்தாக இருக்கின்றது. கற்பனாவாதம் மிக்க குண்டுச்சட்டியின் குதிரையோட்டல்களில் நம்பிக்கை கொள்ள முடியாத நிலையை மக்கள் எட்டி விட்டார்கள் என்பதையே இன்னும் கூட்டணியினர் புரிந்து கொள்ள வில்லை.

இல்லாவிட்டால் புலிகளின் தகப்பனின் மரணச்சடங்கை மகாபெரிய வித்தையாக்கும் அற்பத்தனம் மகிந்தரைப் போலவே சிவாசிலிங்கத்திற்கும் எப்படி வந்திருக்கக் கூடும். ஐந்து இலட்சம் மக்கள் இறப்பை விட மேலான காரியமாக பிரபாகரனின் தந்தையின் மரணத்தைப்பார்க்கும் அல்பத்தனம் எவ்வாறு வந்தது என்பத்தை சிவாசிலிங்கம் இனி வருங்காலத்தில் கூற வேண்டிய தேவை அவருக்கு மட்டுமே இருக்கின்றது.

புலிகளைக்கொல்லுவதில் நண்பர்களாக இருந்தவர்கள் அதன் பயன்களை எடுப்பதில் மட்டும் எதிரிகளாகப் போனது விசித்திரமே. அதன் பலாபலன்கள் இப்போது ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுப்பதில் மும்முரம் காட்டுகின்றது. ஐ.நாடுகள் போர்க்குற்றங்கள் பற்றிக் கருத்து எடுப்பதில் நேர விரயம் செய்யத் தேவையில்லை. ஒருவரை ஒருவர் எதிர்த்து விடும் அறிக்கைகளையே ஆவணமாக வெளிப்படுத்த முடியும். போர்க்காலங்களில் கனரக ஆயுதங்கள் பாவிக்கப்படவில்லை என்ற அரசின் பொய் முகத்தை மங்கள சமரவீர அம்பலப்பட்த்தியுள்ளார். அதே பொய்க்காரணத்திற்காகவே நம்ம கண்ணாநிதியும் மூணே முக்கால் மணி நேர உண்ணா விரதம் இருந்து உலகப்பிரசித்தம் பெற்றதும் நடந்திருக்கின்றது.

தமிழரின் மனங்களை மட்டுமன்றி மண்களையும் புண்படுத்தும் வேலைகளில் சிங்களவர் ஈடுபடுகின்றார்கள். என்ன இருந்தாலும் வெற்றி கொண்ட மமதையில் அவர்கள் மிதப்பது தெளிவாகவே தெரிகின்றது. அதற்கான பதிலைக்கொடுக்க வேண்டிய தெரிவில் நம்மைப்போன்ற எத்தனையோ பேர் கறுவிக்கொண்டிருக்கின்றார்கள்.கொடுத்தே தீருவோம். அதே போல இந்த நிலைமையை நமக்குக்கொடுத்த இந்தியாவையும் எம் பார்வையில் எப்போதும் கொன்று போடும் கொலை வெறியில் வைத்துப்பாது காப்போம் என்பதே என் புதுவருட ரெஷலூஷன் கூட.

உலகம் ஒரு சுற்றுப்பாதையில் என்பதில் எனக்கு எப்போதும் அசையாத நம்பிக்கை இருக்கின்றது.இந்தியாவும் என் காலடியில் வந்து பிச்சை கேட்கும் நாள் வரும் என்ற அசையாத நம்பிக்கையில் ஈழத் தமிழன் ஒவ்வொருவரும் நிமிர்ந்து நிற்கவேண்டும். ஏன் ? எப்படி என்பதை கண்டு பிடிக்க வேண்டியது நாங்களே.. ஏனென்பது எங்கள் எல்லோருக்கும் தெரிந்ததே...

தலைவர் சொல்லிச் சென்றதும் அதுவே... ஆகவே புதுவருடம் எங்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்கட்டும்...

1 comment:

Anonymous said...

பெயரலி அண்ணை அருமை

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil