ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Tuesday, January 5, 2010


பூமியில் இருந்து சந்திரனைப் பார்த்து கவிதை பாடும் - புத்தகக் கண்காட்சி


புது வருடம் பிறக்கும்போதே யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்று புத்தகக் கண்காட்சி பற்றிய விவரணங்கள் வரத் தொடங்கிவிடும். இந்தியாவை விட்டு வெளியில் வாழும் அனைவருக்கும் பூமியில் இருந்து சந்திரனைப் பார்த்து கவிதை பாடும் கவிஞனின் மனநிலையே புத்தகக் கண்காட்சி பற்றியுமிருக்கும். எட்டமுடியாத அங்கலாய்ப்பும் ஆவலாதியும் புத்தகக் கண்காட்சி பற்றி வரும் எழுத்துக்களைத் தேடிப்படிக்கத் தூண்டும். அந்தவகையில் பிச்சைப்பாத்திரம் இட்ட பிச்சை ஓரளவு வெளிச்சம் காட்டியுள்ளது. அனுபவங்களுடன் ஒரு பட்டியலையும் தந்திருக்கின்றார். சங்கர் போன்றவர்கள் தொட்டுக்கொள்ள சட்னி என்ற அளவிலேயே தம் விஜயங்களைப் பதிவு செய்துள்ளனர்.

யாராவது முழுப்பட்டியல் அல்லது முத்தான பட்டியல் என்ற அளவில் தந்தாலும் சில பல புத்தகங்களை வாங்க முடியுமே.

தாயகத்தில் இருப்பவர்கள் யாராவது உதவுவார்களா?

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil