ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Wednesday, January 27, 2010


தேர்தல் 2010 - என்னத்த சொல்ல


சிறிலங்காவின் அதிபர் தேர்தல் நடந்து முடிந்திருக்கின்றது. அதிர அடிக்கும் பட்டாசு வெடிகளுக்கு அப்பால் அரசியல் அதிர்வுகள் உருவாகத் தொடங்கியிருக்கின்றது. மகிந்த தமிழ் மக்களை வெற்றி கொள்வது என்பது இருக்கட்டும் அதன் முன்னால் தமிழ் மக்களை தோற்கடிக்கவே அவரால் இதுவரைமுடிந்திருக்கவில்லை என்பதை தேர்தல் முடிவுகள் நிரூபித்திருக்கின்றது. தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளவே முடியாத அந்நிய நாட்டுத் தலைவராகவே மகிந்த தேர்தல் முடிவுகளிலிருந்து இனங்காட்டப்பட்டிருக்கின்றார். மகிந்தவின் வீரப்பிரதாபம் அனைத்தும் சிங்கள மக்களுக்கே வேண்டியிருக்கின்றது என்பதும் அவர்களால் மட்டுமே கொண்டாடப்படக் கூடியது என்பதுவும் மறுபடியும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
தமிழரின் எதிரியான துட்டகைமுனுவை எதிர்க்கும் அடையாள ஓட்டுக்களையே காமெடியனான சரத் அள்ளிக்கொண்டிருக்கின்றார். அதையெல்லாம் தனது ஆதரவு ஓட்டு என்று அவரால் எப்போதும் கொண்டாட முடியாது என்பதை அவரே அறிந்து வைத்திருக்கின்றார்.


தமிழரின் தமிழீழத் தாகம் எப்போதும் தீர்ந்து போய் விடாது என்பதையே தொடர்ந்த தமிழ்ப்பகுதிகளில் மினுங்கும் பச்சை வர்ணம் உணர்த்தி நிற்கின்றது. இவர்களுடன் இத்தனைகாலமும் தொண்டமான் வகையறாக்களின் அரசியல் தில்லுமுல்லுகளுக்குள் சிக்கித் தங்கள் அடையாளங்களை இழந்திருந்த மலையகத் தமிழர்களும் எதிர்த்து தடைகளை மீறி வந்து "நாம் தமிழர்" என்பதை உணர்த்தியிருப்பது கருத்துக்கெடுக்கப்பட வேண்டியது.

50 இற்கு 50சட்டத்தரணி மற்றும் சிங்களவர் இழுத்து வந்த தேர்வாணர்கள் இழைத்த மலையக மக்களுக்கெதிரான துரோகங்களை மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டிய தொலைநோக்கு விடயத்தை மலையக மக்களின் வாக்குகள் வடக்குகிழக்கு தமிழர்களுக்கு உணர்த்தி நிற்கின்றது.

வாழ்ந்தால் தமிழர்களாக வீழ்ந்தாலும் தமிழர்களாக வீழ வேண்டிய அவசியத்தை கிழக்கின் கருணா பிள்ளையான்களுக்கும் வடக்கின் தடக்கிள்ஸ்களுக்கும் தெளிவாகவே இத் தேர்தல் முடிவுகள் உணர்த்தியிருக்கின்றது.

எலும்புத்துண்டுகளைச் சுவைத்து வாலையாட்டும் நாய்கள் எஜமான்களின் குரைப்பை எதிர்கொள்வதை நினக்கும் போதே சிரிப்பு முட்டுகின்றது.

கொழும்பில் வாழும் சில ஒட்டுண்ணித் தமிழர்கள் "மக்கள் தலைவன் மகிந்த" போன்ற குருவிச்சைக் கோஷங்களைக் கிளப்பத் தொடங்கியிருக்கின்றார்கள். ஒட்டுண்ணி வாழ்க்கையில் குருதி குடிக்கும் வித்தை தெரிந்த இவர்களை அவர்களின் இயல்பு தெரிந்து புறந்தள்ளுவதே இப்போது செய்யக்கூடியது.

இவையெல்லாவற்றையும் மீறி சர்வதேசத்திற்கும் தமிழ் மக்களை நசுக்கிவிடத் துடிக்கும் இந்தியாவிற்கும் தெளிவான செய்தியையே தமிழ்மக்களின் வாக்குகள் உணர்த்தி நிற்கின்றன. வடக்குக்கிழக்கு தொடர்ந்த பிரதேசம் மற்றும் மலையகம் யாராலும் மறுதலிக்க முடியாத தமிழ் மக்களின் தாயகம். எத்தனை கொடிய யுத்தம் தமிழ் மக்களின் மீது பிரயோகிக்கப்பட்டாலும் மக்களின் இதய தாகத்தை அழித்து விட முடியாது என்பதுடன் தமிழீழத் தாகம் புலிகளின் மட்டுமானதல்ல ஒட்டு மொத்தமான தமிழ் மக்களின் தாகம் என்பதையும் உணர்த்தி நிற்கின்றது.

இல்லையென்பவர்களை எப்போதும் எதிர்கொள்ள தமிழீழமும் அதன் மண்ணின் மைந்தர்களும் எப்போதும் தயாராகவே இருக்கின்றார்கள் என்பதை எதிர்காலம் பொன்னெழுத்துக்களால் எழுதிச் செல்லும்.

2 comments:

Anonymous said...

aiyoo pavam

இட்டாலி வடை said...

என்னா அனானி!

எனக்கும் உங்களைப் பார்க்க அப்படித்தான் தோன்றுகின்றது.. ஐயோ அனானி பாவம்...

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil