யுத்தக் குற்ற விசாரணைக்கு உதவ நிபுணர் குழுவை ஜ.நா நியமிக்கும்: ஒளிநாடா உண்மை என்பதால் நடவடிக்கைக்கு வலியுறுத்து
- உங்களுக்கு இன்னுமாடா இந்த வலி உறுத்தல. பன்னாடைங்களா! அவன் ஒத்துக்கிட்டு ஆமாம் சாரின்னு கூட சொல்லப் போறதில்லை
பாமரன் பக்கத்தில் பாமரத்தனமாக இவ்வாறு உளரப்பட்டிருந்தது. இது "கேலி" என்ற கோதாவில் கூட எடுத்துக்கொள்ள முடியாதது. அவ்வளவு "வலி"யை அனுபவித்தவர்கள் தமிழ் மக்கள். இதை வாசிக்கும் போது கூட "வலி"க்கின்றது.
அவ்வளவு கொடுமைகளைச் செய்தவர்களைத் தட்டிக்கேட்க முன் வந்தவர்களையும் நக்கல் நளினம் என்ற போர்வையில் பின்னிழுப்பவர்கள் இவர்கள். தலையிடியும் காச்சலும் தனக்குத்தனக்கு வந்தால் தான் அதன் தீவிரம் தெரியும். கூனிக் கூனியே முகுது வளைந்து போனவர்கள்.
கற்பனை மட்டுமே நிறைந்த சினிமா அடிதடிகளையும் வெட்டுக்கொத்துக்களையும் வாழ்க்கையில் பார்த்தும் அதிராது அசராது அனுசரித்துப் போகக் கூடிய கீழ்மையானவர்கள். தன் வாலைப் பிடித்துத் திருகும் வரை சளைக்காது "தப்பித்து" ஓடும் கோழை மனதுடையவர்கள்.
சகட்டு மேனிக்கு கருத்துக் கூறி மற்றவரின் சோகத்தை கூறு போட்டு சிதிலமாக்குபவர்கள். பயங்கரவாதிப் பட்டம் கொடுத்து முழு இனத்தையும் புறமொதுக்குபவர்கள் பெரும் பத்திரிகைகள் என்றால் ஒன்றுக்குள் ஒன்றாகிப் புணர்ந்து எச்சம் போடும் எழுத்துக்காரர் இவர்கள்.
கடுமையாக மறுதலிக்கப்பட வேண்டியவர்கள். எழுத்துச் சிறுமை கொண்டவர்கள்.
அவன் ஆமான்னு ஒத்துக்கொள்ளாவிட்டால்.. அவன் செய்ததைச் சரி என்று சொல்லிவிட முடியுமா? அவன் சரி என்று ஒத்துக் கொள்ளாது விட்டால் அவன் துட்டன் என்பது இல்லாது போய்விடுமா?
இதில் ஏதாவது உள்குத்தும் இருக்கின்றதோ என்ற கவலையும் தொற்றிக் கொள்கின்றது. ஈழத்தமிழர்கள் மீது உண்மையிலேயே இருக்கக் கூடிய தமிழகத் தமிழர்களின் வெறும் அனுதாபத்தைக் கூட நீர்த்துப் போகச் செய்யும் இந்திய கயமை அரசின் கரங்கள் இணைந்திருக்கின்றதோ என்ற குற்றச்சாட்டை நீட்டிக்கக் கூடும்.
ஐயோ நான் பாமரனாச்சே ..குருவி தலையில் பனங்காயா என்று கண்ணைக்கசக்கலாம். ஆனாலும் எத்தனை பேரின் கண்களில் வடியும் கண்ணீரில் இத்தகையவர்களின் இது போன்ற செயல்கள் அமிலத்தைக் கலந்து விடுகின்றது. இந்து ராம்,துக்ளக் சோ, அல்லக்கை சாரு ,தினமலர் போன்ற எடுபிடிகளின் ஒத்தூதல் ஒரு தினுசென்றால் இத்தகையவர்களின் உட்டாலக்கடி உறவாடிக் கெடுக்கும் கேனைத் தனம் மறுவகை.
மேற்கு நாடுகளின் மனிதாபிமானம் எத்தனை அரசியல் பொருளாதார நலன்களை முன்வைத்திருந்தாலும் நடுவே ஊடுபாவியிருக்கும் மனிதாபிமானம் பற்றிச் சந்தேகம் கொள்ள முடியாது.அது அவர்களின் வாழ்க்கையுடன் தொடர்ந்து வருவது. இழக்கக் கூடாத இழப்புக்களைச் சந்தித்து "வாழ்வதற்காக" எழுந்து வந்திருப்பவர்கள். முதலாம் ,இரண்டாம் உலகப்போர்களின் ஊமை வலியை இன்னும் உணர்ந்து கொண்டிருப்பவர்கள்.
உண்மையிலேயே சொல்கின்றேன். இந்தியா என்ற பாழ்பட்ட தேசத்தின் அருகில் ஈழம் என்று ஒன்றிருக்காவிட்டால் அவர்களுக்கு இந்த இழப்பும் துயரமும் நேர்ந்திருக்காது என்பது மறுக்க முடியாத உண்மை. இத்தனை கொடுமைகளை மனித இனமே வெட்கித் தலை குனியும் வகையில் வேறு எந்த நாடும் புண்ணிய பாரதத்தைத் தவிர செய்திருக்க முடியாது. ஏனென்றால் குறைந்த பட்சம் அங்கே அந்த நாடுகளில் "மனிதர்கள்" வாழ்கின்றார்கள்.
புண்ணிய பாரதத்தில் எத்தகைய மனிதர்கள் வாழ்கின்றார்கள் என்பதற்கு இந்த வீடியோவைப் பாருங்கள்.
ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல
ஈர ஈழம்
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
வேகம் வேகம்...அய்யா தமிழினத்திற்கு முடிந்ததை செய்யுங்கள்..
11.01.2010 திங்கட்கிழமை - இலங்கையில் 255 தமிழர்கள் கொல்லப்படப்போகிறார்களா?
மூலம்:http://chinthani.blogspot.com/2010/01/11012010-255.html
Post a Comment