ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Saturday, January 9, 2010


இந்தியர்களின் காய்ந்து போன செக்ஸ் பின்புத்தி


இது பொதுப்புத்தியில் விளைந்த தொடர் செயலாக இந்தியர்களைத் தொட்டு நிற்கின்றதோ என்ற அபாயக் குரல் என்னளவில் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கின்றது. அல்லது அதிக அக்கறை காட்டும் இந்தியச்செய்திகளில் கலந்து வந்து மோதுகின்றதோ என்ற கவலையும் தோன்றுகின்றது.மற்ற எந்த நாட்டிலும் அதிகம் பரப்புரை செய்யத் தேவைப்படாத கிரைம் ஆக பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள் இருக்கும் போது இந்தியத்தனமான இவ்வகைக் கிரைம் புத்தி இந்தியாவில் மட்டுமன்றி இந்தியர்கள் வாழும் உலகெங்கும் எடுத்துச் செல்லப்படுகின்றது.

பெண்களை மிக இழிந்த மலிவான உயிர்களாய்ப் பாவிக்கும் பொதுப்புத்தியினால் இத்தகைய தவறுகளுக்குள் இலகுவாக இந்திய ஆண்கள் தள்ளப்படுகின்றார்களோ என்ற கவலை ஏற்படுகின்றது. பெண்களுடன் வாழாத ஆண்கள் மட்டுமென்ற வேறுபாடின்றி பெண் சுகம் தெரிந்த தொடர் குடும்ப வாழ்க்கைக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்திய ஆண்களும் இச்செயல்களுக்குள் எத்தகைய சமூகவியல் சட்டவியல் பயங்களுமின்றி சர்வ சாதாரணமாக வீழ்ந்து விடுவது ஒரு வித மனநோயின் அறிகுறியா என்ற ஆதங்கத்தையும் ஏற்படுத்துகின்றது.

இல்லையெனில் தங்கள் வீட்டுப்பெண்களைப் பொத்திப் பொத்தி வளர்க்கும் ஆண்களால் பக்கத்து வீட்டுப் பெண்ணின் மாராப்பு விலகும் வேளைக்காக வக்கிரத்துடன் எப்படிக் காத்திருக்க முடிகின்றது. தன் வீட்டுப் பெண்களில் ஒரு நகத் தொடுகையையும் அனுமதிக்க முடியாத கற்பு நிலை பேசும் பண்பாட்டு மனோபான்மை பக்கத்து வீட்டுப் பெண்ணின் "அலைதல்" பற்றி எவ்வாறு சுவையான கதைகளைக் கட்டவிழ்த்து விடுகின்றது.

இது ஒரு சமூகப் பொது நோயாக இந்திய சமூகங்களுக்குள் அலையும் பெருவியாதியாக காலத்திற்குக் காலம் வெளிப்படுதலை எவ்வாறு விளங்கிக் கொள்வது. கவனர் முதல் கடைநிலைக் காவலர் வரை இதே வக்கரிப்புடன் வாழ முடிகின்ற ஒரு வகை மனநோய் கொண்ட சமூகமாக இந்திய ஆண்களை வளர்த்தெடுத்தது யார் குற்றம்? பாலினக் குற்றங்களுக்குள்ளும் அடிதடி சண்டைகளுக்குள்ளும் இலகுவான உணர்ச்சி வசப்படுதலில் வீழ்ந்து விட முடிகின்ற மனநிலை இந்திய சமூக ஆண்களின் சாபமா? இல்லை வரமா?

கோயில் குருக்கள் தேவநாதன் முதல் காவல் துறை அதிகாரி எஸ்பிஎஸ் ரத்தோர் அஷூ கிர்ஹோத்ரா,ஆந்திர ஆளுநராக இருந்த என்.டி.திவாரி போன்றோர் எந்தவித சட்ட பண்பாட்டு விழுமியங்களையும் மதியாது பயப்படாது இத்தகைய ஈனச் செயல்களைத் துணிந்து செய்வதற்கு இந்தியச் சமூகத்தைப் பீடித்திருக்கும் ஒரு வகை மனநோயன்றி வேறு ஏதாவது காரணம் இருக்க முடியுமா?

அண்மையில் ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவ சமூகத்தின் மீது இத்தகைய தொடர் தாக்குதல் நடாத்தப்படுவதற்கு இந்தியர்களின் இத்தகைய கட்டவிழ்ந்த மனநிலையில் பெண்களை நெருங்கும் இழிவு படுத்தும் ஒரு நோக்கும் ஏன் காரணமாக இருக்க முடியாது? பல் இன வெளிநாட்டு மாணவர்கள் உதாரணமாக பாகிஸ்தானியர், சீனர், ஈழத்தவர்,பர்மியர்,இந்தோனேசியர், ஐரோப்பியர் ,ஆப்ரிக்கர் என்று பலரும் கல்வி கற்கும் அவுஸ்திரேலியா போன்ற ஒரு நாட்டில் இந்திய மாணவர்கள் "மட்டுமே" இவ்வாறு "குறி" வைத்துத் தாக்கப்படுவதில் வேறு ஏதாவது வீசேட காரணத்தை நாம் கண்டறிந்து விட முடியுமா?



இல்லையெனில் 90 இல் ஆஸ்திரேலியாவில் குடியேறிய பல்ஜித் சிங்கிற்கு 2008 இல் 13 வயது பள்ளி மாணவியைக் கற்பழிக்கத் தோன்றியிருக்குமா? அதுவும் பெண் சுகம் என்பது ஒன்றும் கிடைக்க முடியாத வனாந்தரம் அல்லவே அவுஸ்திரேலியா. 18 வருடங்கள் வாழ்ந்து நன்கு அறிந்து கொண்டிருக்கும் அவுஸ்திரேலிய வாழ்வு பற்றிய விளக்கங்களுக்கு அப்பாலும் "குறி" வைத்து கற்பழிக்கும் புத்தி இந்திய கலாச்சாரம் தழுவிய மனநோய் என்பதற்கு அப்பால்
வேறு ஒரு காரணத்தைக் கண்டு பிடிக்க முடியுமா?

இந்த "உண்மைகள்" இந்தியர்கள் பலருக்கும் மன உளைச்சலைக் கொடுக்கக் கூடும். இத்தகைய ஒரு மனநிலைப் பிறழ்வுடனேயே இந்திய ஆண்சமூகம் உலகெங்கும் பரந்து வாழ்கின்றது என்பதுடன் அந்த அந்த நாட்டு மக்களால் ஜீரணிக்க முடியாத ஒட்டுண்ணிக் கும்பலாக மாறிவிட்டிருக்கின்றார்கள் என்பதுவுமே அவுஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் மீதான ஒட்டு மொத்தத் தாக்குதலுக்குமான காரணமாக இருக்கின்றது.

தேச ஒற்றுமை, நாம் இந்தியர்கள் என்ற கோஷங்களை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு நாம் பண்பட்ட மக்களாய் வாழ்வதன் முக்கியத்துவம் பற்றி எண்ணிப்பார்க்க வேண்டிய தருணம் இது.

இத்தகைய சமூக குடும்ப வாழ்க்கைக்குள் இருக்கும் ஆண்புத்தியே இவ்வகையில் செயற்படும் போது இறுக்கமான வெற்று வாழ்க்கைக்குள் இருக்கும் இந்திய இராணுவ ஆண்கள் கால் பதித்த ஈழம், காஸ்மீர் பெண்களின் நிலை எவ்வாறு இருந்திருக்கக் கூடும் என்பதையும் பொதுத் தராசில் வைத்து சீர் தூக்கிப் பார்க்க வேண்டும்.

அதை விட்டு "கல்தோன்றா மண்தோன்றாக் காலத்துக் கதைகள் " எப்போதும் பண்பட்ட சமூகத்தைத் தோற்றுவித்து விடாது.

2 comments:

Pragash said...

இந்த மனநோய் இந்தியர்களுக்கு மட்டுமல்ல. ஆசிய சமூகத்திலும் பரவலாக காணப்படுகின்றது.

இட்டாலி வடை said...

வாருங்கள் பிரகாஷ்!

உண்மை... பெயர் இந்தியர்களுக்குத்தான் கிடைக்கின்றது.. புகழும் கூட..

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil