ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Tuesday, September 29, 2009


கிழிக்கிறான் உண்மைத் தமிழன் கலங்காது காக்கா பிடிக்கிறான் கருப்புக்கண்ணாடி கழட்டாத கயவன்



கொடுமையிலும் கொடுமையாக தமிழக முதல்வரே தான் கொடுக்க வேண்டிய விருதுகளில் ஒன்றை தானே உரிமையாக கையைவிட்டு எடுத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய 'உளியின் ஓசை'க்காக சிறந்த உரையாடல் ஆசிரியர் விருதாம்..

அவருடைய விளம்பர வெறியும், பதவி ஆசையும், கூச்ச நாச்சமில்லாத படுத்துக்கொண்டே பாராட்டை கேட்கும் மனோபாவமும் உலகமறிந்த விஷயம் என்றாலும், இவ்வளவு பக்குவப்பட்ட வயதிலும் இன்னமும் அப்படியே இருக்கிறாரே என்பதை நினைத்தால்தான் மனம் பகீரென்கிறது.

இன்னும் அடுத்தடுத்த வருடங்களில் எதையெல்லாம் தான் எடுத்துக் கொண்டு மிச்சத்தை தமிழ்ப் படைப்பாளிகளுக்கு எச்சில் இலை போல் அள்ளி வீசப் போகிறாரோ தெரியவில்லை.

முதல்வராகப் பதவி வகிப்பவர் இது போன்ற அரசு விருதுகளுக்கான போட்டிகளில் கலந்து கொள்ளாமல் தவிர்த்துவிட்டுச் செல்வதுதான் அந்தப் பதவிக்கு பெருமை சேர்க்கும் விஷயம். இங்கேதான் அந்தப் பெருமை சேர்ப்புகளையே குப்பைத் தொட்டிக்குக் கொண்டு போய் போட்டுவிட்டார்களே.. யார் கேட்பது..?

உண்மையில் 'உளியின் ஓசை' படைப்பு பரிசுக்குரியதா? சிறந்த உரையாடல் பரிசுப் போட்டியில் 'நான் கடவுளும்', 'பொம்மலாட்டமும்', 'அஞ்சாதே'யும், 'பூ'வும், 'சுப்ரமண்யபுரமும்' வரிந்து கட்டிக் கொண்டு வரிசையில் நிற்கின்றன. அவற்றைவிடவா ஐயா அற்புதமாக எழுதிக் குவித்துவிட்டார். கொடுமையடா சாமி..

'நான் கடவுளுக்கு' நிச்சயம் கொடுத்திருக்கலாம். அத்திரைப்படத்தின் வசனங்கள் தமிழ்த் திரையுலகத்துக்கு கிடைத்த புதுமை. பாவம் ஜெயமோகன்.. சாருநிவேதிதாவுக்கு பதிவு போடும் வேலையைக் கொடுக்க ஆசை, ஆசையாகத் தயாராகக் காத்திருந்தார். ஆப்படித்துவிட்டார் கோபாலபுரத்து ஐயா. சாருவுக்கு ஒரு வேலை மிச்சம்..

இந்த கேலிக்கூத்தான இரண்டு வருட பரிசு அறிவுப்புகளின் பின்னணிக்கு என்ன காரணம்? தான் ரிட்டையர்டுமெண்ட் பெற உள்ள இதே காலக்கட்டத்திலேயே கடைசியாக ஒரு முறை இரண்டு பெரும் நடிகர்களுக்கு நடுவில் அமர்ந்துவிடத் துடித்த ஒரு அல்பத்தனத்திற்கு அரசு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பது மகா கேவலமானது.

ஏன்? இப்படி? யாரும் யோசிக்க மாட்டார்களா? என்றெல்லாம் தேர்வுக் கமிட்டியினரிடம் விசாரித்ததில் அவர்களிடம் அரசு அதிகாரிகள் தெரிவித்த விஷயங்கள் ஒன்றுதானாம்..

“தலைவர் மனசு குளிர்ற மாதிரி செலக்ட் பண்ணுங்க. வீணா அவரை அப்செட்டாக்காதீங்க” என்று மட்டும் தேர்வுக் கமிட்டியினரின் காதில் ஓதப்பட்டதாம். அதன் விளைவினால்தான் ஐயா விருப்பப்படியே டாப் லிஸ்ட் தயார் செய்யப்பட்டதாம்.

ஐயாவின் மனம் குளிர வைக்க அடுத்த விழா ரெடி..

இதற்குப் பேசாமல் அவரும், அவருடைய குடும்பத்தினருமே பரிசுக்குரியவர்களின் பெயரை டிக் செய்து "வீட்ல வந்து பரிசை வாங்கிட்டு சமத்தா கால்ல விழுந்துட்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்திட்டு போய்ச் சேருங்க"ன்னு அறிக்கையே விட்ரலாம்.

எதையும் தாங்கும் தமிழன், நிச்சயம் இதையும் தாங்குவான்..!

Read more: http://truetamilans.blogspot.com/2009/09/blog-post_29.html#ixzz0SY5yDLZo

5 comments:

கோவி.கண்ணன் said...

மிகக் கேவலமானப் படம்.

ஒரு பெண்ணை இழிவு படுத்துவதாகப் பெண்மையைத் தான் இழிவு படுத்தியுள்ளீர்கள்.

"ஈழ ஆதரவாளர்கள் அனைவரும் இந்தப் படத்தை ரசிப்பார்கள்" என்று நினைப்பது தவறு... என்கிற கருத்தை நான் இங்கே பதிவு செய்கிறேன்.

"உங்கள் செயலுக்கு ஈழ ஆதரவாளர்களையும் சேர்த்து பொறுப்பாக்குகிறீர்கள்" என்கிற குற்ற உணர்ச்சி இல்லை என்றால் படத்தை நீங்கள் வைத்திருக்கலாம்.

இட்டாலி வடை said...

ஐயா இது நான் உருவாக்கியது அல்ல... இணையத்தில் இருந்தது தான்...

இத்தனை ஆயிரம் உயிர்களைக் கொன்று குவித்த சோனியாவை இன்னும் ஒரு பெண்ணாக நீங்கள் எண்ணிக்கொண்டிருந்தால் ... தாடகையைக் கொல்ல இராமனை ஏவிய விஸ்வாமித்திரரை எப்படி சபிக்காது இருக்கின்றீர்கள் என்று (தாடகையும் ஒரு பெண் தாணே) சொல்ல வேண்டும்... கோவியாரே...

கோவி.கண்ணன் said...

//இட்டாலி வடை said...
ஐயா இது நான் உருவாக்கியது அல்ல... இணையத்தில் இருந்தது தான்...//

நீங்கள் உருவாக்கினீர்கள் என்று நானும் சொல்லவில்லை. ஆனால் பயன்படுத்தி இருக்கிறீர்கள்.

//இத்தனை ஆயிரம் உயிர்களைக் கொன்று குவித்த சோனியாவை இன்னும் ஒரு பெண்ணாக நீங்கள் எண்ணிக்கொண்டிருந்தால் ... தாடகையைக் கொல்ல இராமனை ஏவிய விஸ்வாமித்திரரை எப்படி சபிக்காது இருக்கின்றீர்கள் என்று (தாடகையும் ஒரு பெண் தாணே) சொல்ல வேண்டும்... கோவியாரே...
//

ஒரு அநியாயத்தைச் சாட நீங்களும் அநியாயமாக ஒன்றைச் சொன்னால் அதன் பிறகு ஞாயங்கள் நீர்த்துப் போகும், நீ மட்டும் யோக்கியனா என்றக் கேள்வியில் தமது குற்றத்தை ஒப்புக் கொள்கிறோம் என்கிற ஒப்புதலும் உண்டு.

உங்கள் மீது அநியாமாக ஒருவர் குற்றச் சாட்டுச் சொல்லும் போது பொறுத்துக் கொள்ள முடியாமல் நீங்கள் துணியைத் தூக்கிக் காண்பித்துவிட்டால் உங்கள் பக்கத்து ஞாயங்களை எடுத்துச் சொல்லுபவர்களுக்கு தலைகுணிவை ஏற்படுத்திவிடும்.

இட்டாலி வடை said...

உண்மைதான் கோவியாரே ! என் மக்களின் ஓலங்கள் என் நெஞ்சைத் துளைத்துக் கொண்டிருக்க ..சில்லறை ஞாயங்களுக்குள் என்னைத் திணித்துக் கொள்ள முடியவில்லை...

மன்னிக்கவும்...

Anonymous said...

மாண்புமிகு அகதியே வெள்ளைகாரன் கூப்பிடுறான் போய் அவன் சூத்தை வழமை போல கழுவு. தட்டு கழுவி புழைப்பு ஓட்டும் பண்ணாடையே

தேசிய அலி தலைவர் பொட்டை பிரபாகரன் வருவான் திரும்ப வருவான் அதுவை இப்படி பதிவு போட்டு உன் வக்கிரங்களை தனித்து கொள்

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil