ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல
ஈர ஈழம்
Tuesday, September 29, 2009
சாத்தான் வேதமோதினால் கருணாநிதி வாய் மொழியாக வரும்....
சாத்தானின் வாய்களெல்லாம் பல்லாக
காஞ்சீபுரத்தில் நேற்று நடைபெறற அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவில் மூடன் கருணாநிதி பேசியதாவது:
அகதிகளாக உள்ள இலங்கை தமிழர்கள்
அவற்றில் தம்பி ஸ்டாலின் முன்மொழிந்து வழிமொழியப்பட்டு 8-வது தீர்மனமாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தேயே முக்கிய தீர்மானமாக கருதுகிறேன்.
அது இலங்கை தமிழ் மக்களை பற்றிய தீர்மானம். இலங்கை தமிழர் இங்கு நம் நாட்டில் அகதியாக உள்ளனர். இலங்கையிலும் அங்கு வசிக்கும் மக்கள் அகதிகளாக்கப்பட்டு கூடாரத்தில் துன்பங்களை ஏற்றுக்கொண்டு அவதிப்படுகிறார்கள். ஆனால் நான் அவர்களை சொல்லவில்லை. அவர்கள் வேறு நாட்டில் வசிக்கிறார்கள். அவர்கள் கூடாரத்தில் இருந்து விடுவித்துக்கொள்ள வேண்டும். சொந்த இடத்திற்கே அவர்கள் போக வேண்டும் என்று நாம் வலியுறுத்துகிறோம். இந்திய அரசுடன் சேர்ந்து கொண்டும் குரல் கொடுக்கிறோம். அதை வலியுறுத்தி கொண்டும் வருகிறோம்.
தமிழகத்தில் 1 லட்சம் அகதிகள்…
அதே நேரத்தில் தமிழகத்தில் கடந்த 10, 20 ஆண்டுகளாக இலங்கையில் இருந்து அகதிகளாக வந்து குடியேறிய மக்களின் கதி என்ன? என்பதுதான் எட்டாவது தீர்மானம் ஆகும்.
அதில் நாம் அமைத்த வாக்கியங்களை தீர்மானம் நிறைவேற்றும் போது யாரும் கவனிக்காமல் இருந்தால் கவனம் ஊட்டுகிறேன். 1984 முதல் தமிழகத்திற்கு இலங்கையில் இருந்து அகதிகளாக வந்த மக்களை தமிழக அரசு 17 இடங்களில் உள்ள முகாம்களில் தங்க வைத்துள்ளது. தற்போது 115 முகாம்களில் 73 ஆயிரத்து 572 இலங்கை தமிழர் அகதிகள் தங்கியுள்ளனர். இது மட்டுமின்றி 38 ஆயிரம் இலங்கை தமிழர்கள் முகாம்களில் தாங்காமல் பல்வேறு இடங்களில் சொந்த பொறுப்பில் தங்கியுள்ளனர். மொத்தத்தில் தமிழகத்தில் 1 லட்சம் இலங்கை தமிழ் அகதிகள் தங்கியுள்ளனர். 1984 முதல் உள்ள புள்ளி விவரம் இது.
உதவித் தொகை உயர்வு
தி.மு.க. பொறுப்பு ஏற்றவுடன் 1.2.2006 முதல் மத்திய மாநில அரசுகள் இணைந்து அகதிகளுக்கு வழங்கி வரும் உதவி தொகை உயர்ந்தப்பட்டுள்ளது. அகதி குடும்ப தலைவருக்கு வழங்கப்பட்டு வந்த 200 ரூபாயில் இருந்து 400 ரூபாய் என்றும், வயது வந்தவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவி தொகை 144 ரூபாயில் இருந்து 288 ரூபாயாகவும், முதல் குழந்தைக்கு 90 ரூபாயில் இருந்து 180 ரூபாய் ஆகவும் மற்ற குழந்தைகளுக்கு 45-லிருந்து 90 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படுகிறது. அவர்களுக்கு கிலோ அரிசி 57 காசுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அகதிகள் குழந்தைகள் மேல் நிலை வகுப்பு வரை இலவச கல்வி பயில ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மேல் படிப்பு படிக்கவும் வாய்ப்பு தரப்படுகிறது.
இந்த தீர்மானம் என்ன சொல்லுகிறது? இலங்கை தமிழ் அகதிகளை இந்திய குடியுரிமை சட்டம் மற்றும் ஏனைய சட்டங்களுக்கு உட்பட்டு இங்கு குடியமர்த்த செய்ய வேண்டும்.
மறுகுடி அமர்த்தும் சட்டமாக மத்திய அரசுடன் கலந்து பேசி வழிவகை செய்துகொள்ள வேண்டும். அவர்கள் தமிழகத்திலே வாழ்வாதாரத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வராக, தி.மு.க. தலைவராக இந்த முப்பெரும் விழா வாயிலாக நான் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என்று என்னையே நான் கேட்டுக்கொள்ளும் தீர்மானம்.
என்னை நான் கேட்டுக்கொண்டதால் இந்த தீர்மானம் நிறைவேறாவிட்டால் என்னை விட ஏமாளி யாரும் இல்லை. இந்த தீர்மானம் நிறைவேறுவதற்கு மத்திய அரசை வலியுறுத்த இருக்கிறோம். இதை சட்ட ரீதியாக, அமைதியாக பெற இருக்கிறோம். மத்தியில் உள்ளவர்கள் இந்த தீர்மானம் நிறைவேற உதவ வேண்டும், என்றார்.
கோவை உலக தமிழர் மாநாடு
உலக தமிழர் மாநாட்டை நடத்த வேண்டும் என்று முடிவு செய்து ஜனவரி இறுதியில் இந்த மாநாட்டை கோவையில் நடத்தலாம் என்று முடிவு செய்து அந்த மாநாடு சீரோடும் சிறப்போடும் நடைபெறும். ஏனென்றால் இந்த மாநாடு தமிழ் செம்மொழி மாநாடு என்று நடைபெற இருக்கும் மாநாடு. அந்த மாநாட்டிற்கு அச்சாரமாக அந்த மாநாட்டிற்கு நீங்கள் எல்லாம் வர வேண்டும் என்று உங்களுக்கு எல்லாம் அழைப்பு விடுக்கிறேன்.
காஞ்சீபுரத்தில் கூடியிருக்கும் கழக தோழர்கள் மாத்திரம் அல்ல. தமிழக மக்கள் ஆகிய நீங்கள் கோவைக்கும் வருவீர்கள். இந்த மாநாட்டை தமிழகத்தின் முதல்-அமைச்சர் என்ற முறையில் கழக தலைவர் என்ற முறையில் இங்கு வீற்றிருக்கும் தலைவர்கள் அன்பால் ஈர்க்கப்பட்டவன் என்ற முறையில் உறுதியாக சொல்கிறேன். கோவையில் மாநாடு நடைபெறும் அது செம்மொழி மாநாடாக நடைபெறும். அப்படி முடியாத நிலை ஏற்படாது. தமிழ் என்ற அந்த 3 எழுத்து சொல்லுக்கு என்னை உரியவனாக ஆக்கிக்கொண்டு அன்று முதல் இன்று வரை அதற்காகவே என்னை ஒப்படைத்துக்கொண்டு இருக்கிறேன்.
எஞ்சியிருக்கும் மூத்த தலைவர்கள் நாங்கள் இருவர்தான்!
நான் இளமை பருவத்தில் எழுதிய ஒரு கட்டுரையை படித்து விட்டு அண்ணா அவர்கள் நன்றாக படி, கட்டுரை பிறகு எழுதலாம் என்று சொன்னதாக அடிகளாளர் இங்கு குறிப்பிட்டார். அதற்கு பொருள் கட்டுரை உனக்கு எழுத வராது என்பது அல்ல. கட்டுரை எழுதி எழுதி படிப்பை கெடுத்து கொள்ளாதே என்று பொருள் தான் அதற்கு. அண்ணா சொன்ன அத்தகைய கருத்துகளில் பின்பற்றாத கருத்து நான் கேட்காத அறிவுரை அது ஒன்று தான்.
அதன் விளைவுகளை பிறகு உணர்ந்தேன் என்றாலும் கூட பெரியார் கல்லூரியில் படித்தேன். அங்கு படித்த பிறகு வேறு எந்த கல்லூரியில் படித்தால் என்ன? படிக்காமல் இருந்தால் என்ன? எனக்கு அளிக்கப்பட்ட விருதுகளுக்கு உள்ள பெருமைகளை எல்லாம் பேராசிரியர் எழுதி படித்தார்.
அதை அவரே எழுதி இங்கு படித்தபோது ஏற்பட்ட உணர்ச்சி உத்வேகம், மெய் சிலிப்பு வர்ணிக்க முடியாது ஏனென்றால் அண்ணா நூற்றாண்டு விழாவில் எஞ்சியிருக்கும் மூத்த தலைவர் நாங்கள் இரண்டு பேர் தான். மற்றவர்கள் எல்லாம் காலமாகி விட்டனர். எங்களை இன்னும் காலம் அழைக்கவில்லை. உங்களுக்காக பணியாற்ற விட்டு வைத்து இருக்கிறது.
கண்கலங்கினேன்…
அதனால் தான் பேராசிரியர் எழுதி உணர்வோடு தூய்மையான எண்ணத்தோடு வாசித்த போது நான் கண் கலங்கினேன். மெய் சிலிர்த்து போனேன். எப்படி இங்கு நன்றி கூறி பேசுவது என்ற திண்டாட்டத்திற்கு கூட ஆளானேன். உங்களை எல்லாம் ஏமாற்றக்கூடாது என்று தான் இவ்வளவு நேரம் பேசினேன். இன்னும் பேச வேண்டும். எனக்கும் ஆசை இருக்கிறது. ஆனால் இந்த விருது பெற எனக்கு இருக்கும் தகுதி என்ன? நீங்கள் தந்த தகுதி தான். பெரியார் தந்த தகுதி, அண்ணா தந்த தகுதி தான். எப்படி அண்ணாவின் இதயத்தை இரவலாக பெற்றேனோ அதை போல அந்த தகுதியை பெற்று தான் இந்த விருதை பெற்று இருக்கிறேன்.
சர்வாதிகாரியல்ல…
இங்கு பேசிய பலர் என்னை பாராட்டினார்கள். நீங்களும் அதை ஏற்றுக்கொண்டு அதை வாழ்த்தி இருக்கிறீர்கள். நீங்கள் ஒவ்வொரு முறையும் என்னை வாழ்க வாழ்க என்று சொல்லும் போது நான் அண்ணாவை தான், பெரியாரை தான் நினைத்துக்கொள்கிறேன்.
நான் ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவன். நான் இப்போது அதிகாரம் பெற்றிருந்தாலும், என்னை சர்வாதிகாரியாக எண்ணிக்கொள்ள மாட்டேன். இந்த பதவி, இந்த வாய்ப்பை வைத்து மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை தான் நான் செய்துகொண்டு இருக்கிறேன். இது இளமையில் ஏற்பட்ட உணர்வு. 86 வயதிலும் அதே உணர்வு தான் உள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment