ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல
ஈர ஈழம்
Wednesday, September 30, 2009
உலகத் தமிழ் மாநாட்டை புறக்கணியுங்கள்
தமிழ் ஈழ நிலத்தில் தமிழர்கள் ரத்தம் சிந்தும் இந்த வேளையில் தமிழக முதல்வர் அறிவித்துள்ள கோவை முழுமையாகப் புறக்க வேண்டும் என உலக தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கை:
'பெற்ற தாய் கிண்ணிப் பிச்சை எடுக்க தம்பி கும்பகோணத்தில் கோதானம் செய்தானாம்....' அதைத்தான் முதல்வர் கருணாநிதி இப்போது செய்ய நினைக்கிறார்.
வன்னிப் பெருநிலப்பரப்பில் ஆறாக ஓடிய தமிழ் மக்களின் குருதி காயுமுன்னர்- அவர்கள் சொரிந்த கண்ணீர் வற்று முன்னர்- முதல்வர் கருணாநிதி ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாட்டை நடத்தப் போவதாக அறிவித்திருப்பது கடைந்தெடுத்த இரண்டகமாகும்!.
இந்த மாநாடு தமிழ்மொழிக்கு சீரும் சிறப்பும் எழுச்சியும் ஏற்றமும் தர நடத்தப்படவில்லை. தனது ஆட்சிக் காலத்தில் ஒருமுறையேனும் உலகத் தமிழ் மாநாடு இடம்பெறவில்லை என்ற குறையைத் தீர்க்கவே முதல்வர் கருணாநிதி இந்த மாநாட்டை நடத்துகிறார். இன்னொரு காரணம் தன் மீது சுமத்தப்பட்டுள்ள வரலாற்றுப் பழியைத் துடைத்துக் கொள்ள உலகத் தமிழ் மாநாடு கைகொடுக்கும் என நினைக்கிறார்.
உலகத் தமிழரை ஏமாற்ற...
தமிழகத்தில், தமிழ் ஆட்சி மொழியாகப் பெயரளவில் மட்டும் இருக்கிறது. பள்ளிக் கூடங்களில் தமிழ் கற்பிக்கும் மொழியாக இல்லை. அரசு அலுவலகங்களில் தமிழ் இல்லை. நீதிமன்றங்களில் தமிழ் இல்லை. வழிபாட்டில் தமிழ் இல்லை. அங்காடிகளின் பெயரில் தமிழ் இல்லை.
இந்திய நாடாளுமன்றத்தில் அமைச்சர் அழகிரி தமிழில் பேசுவதற்கு அனுமதியில்லை. இப்படி எங்கும் எதிலும் தமிழ் இல்லை என்ற கண்றாவிக் காட்சியே தமிழகத்தில் உள்ளது. இந்த அழகில் முதல்வர் கருணாநிதி உலகத் தமிழ்நாடு நடத்த நினைப்பது உலகத் தமிழரை ஏமாற்றும் எத்தனமாகும்.
'வீழ்வது நாமானாலும் வாழ்வது தமிழாகட்டும்' என எதுகை மோனையில் பேசும் முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தைச் சேர்ந்த பலருக்குத் தமிழில் பெயரில்லை. அழகிரி, ஸ்டாலின், கலாநிதி, தயாநிதி, உதயநிதி, அறிவுநிதி எல்லாமே கலப்புமொழிப் பெயர்கள்.
முதல்வர் கருணாநிதியின் பேரர்களுக்குச் சொந்தமான ‘சன்’ தொலைக்காட்சியில் தமிங்கிலம் கோலோச்சுகிறது. தூய தமிழுக்கு அதில் மருந்துக்கும் இடம் இல்லை. தமிழினப் பகைவர்கள்தான் அதில் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளார்கள்.
மரணரப் படுக்கையில் தமிழினம்...
ஆண்டுக்கணக்காக சிங்கள ராணுவம் மேற்கொண்ட இனவழிப்புப் போரில் ஒரு இலக்கம் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். முள்ளி வாய்க்காலில் நடந்த இறுதிக்கட்டப் போரில் மட்டும் 25,000 மக்கள் கொலை செய்யப்பட்டார்கள்.
ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்துத் தரப்பினரும் உணவு, மருந்து இன்றி பல மாதங்கள் பதுங்கு குழிகளுக்குள் அடைந்து கிடந்தனர். சீனா, பாகிஸ்தான் [^], உருசியா உள்ளிட்ட நாடுகளின் வானூர்திகள் மருத்துவமனைகள் மீதும் பள்ளிகள் மீதும் வீசிய குண்டுகளில் அப்பாவித் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். போரில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் மருத்துவம் பெற்று வந்தபோது மீண்டும் குண்டு வீசப்பட்டு கொல்லப்பட்டார்கள்.
முள்ளிவாய்க்காலில் தமிழ்மக்கள் வகைதொகையின்றி எதிரியின் பல்குழல் பீரங்கித் தாக்குதலில் பொட்டுப் பூச்சிகள் போல் கொல்லப்பட்ட போது முதல்வர் கருணாநிதி டெல்லியில் முகாமிட்டு மகனுக்கும் பேரனுக்கும் அமைச்சர் பதவிக்காகப் பேரம் பேசிய இரண்டகத்தை வரலாறு நிச்சயம் மன்னிக்காது.
போரில் தப்பிய மூன்று லட்சம் மக்கள் முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் ஆடு மாடுகள் போல் அவர்களது விருப்பத்துக்கு மாறாக- சட்டதிட்டங்களுக்கு முரணாக- திறந்தவெளிச் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளார்கள். துப்பாக்கி ஏந்திய சிங்கள ராணுவத்தினர் காவலுக்கு நிற்கிறார்கள். மக்களது நடமாடும் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தவணை முறையில் செத்துக் கொண்டிருக்கிறார்கள்.
'விலங்குகளை அடைத்து வைத்துள்ளது போல, அப்பாவித் தமிழர்களை முகாம்கள் என்ற பெயரில் வனவிலங்குக் கொட்டகைகளில் அடைத்து வைத்துள்ளனர்' என்று அமெரிக்காவைச் சேர்ந்த மனிதவுரிமை ஆர்வலர் மருத்துவர் எலின் சந்தர் வேதனை தெரிவித்திருக்கிறார். அந்த யூத இனப் பெண்ணுக்கு இருக்கும் கவலை முதல்வர் கருணாநிதிக்கு இல்லை. இந்திய அரசு எலின் சந்தருக்கு முதலில் விசா வழங்கிவிட்டுப் பின்னர் மறுத்துவிட்டது!
இந்தியத் தலைவர்கள் அடிக்கடி இலங்கை சென்று திரும்பியது போரை நிறுத்துவதற்காக அல்ல என்றும் தமிழ் மக்களைக் கொன்று குவித்து இனப்படுகொலை புரிந்த சிங்கள பயங்கரவாத அரசைப் பாராட்டுவதற்காகத்தான் என்றும் 'மை டெலிகிராப்' நாளிதழில் உலகின் தலைசிறந்த ஊடகவியலாளர்களில் ஒருவரும் மனித உரிமை ஆர்வலருமான ரிச்சர்ட் டிக்சன் எழுதியுள்ளார். மேலும் இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு இந்தியா ஆக்கமும் ஊக்கமும் அளித்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
திறந்த வெளிச் சிறைச்சாலைகளில்...
திறந்தவெளிச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களுக்குப் போதிய உணவில்லை, தண்ணீர் இல்லை, மருந்து இல்லை. கழிப்பறை வசதி இல்லை. சின்னச் சின்ன கூடாரங்களில் வானமே கூரையாகவும் கட்டாந்தரையே பாயாகவும் படுத்து உறங்கி எழுகிறார்கள். தொடக்கத்தில் சமைத்த உணவு வழங்கப்பட்டது. இப்போது அரிசி, மா இரண்டையும் கொடுத்து சமைத்துச் சாப்பிடச் சொல்கிறார்கள்.
சமைப்பதற்கு விறகு வேண்டும். விறகு விற்றவர்கள் மீது சிங்கள ராணுவம் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
இந்த வதை முகாம்களில் நடைபெறும் சித்திரவதைகளைப் பார்வையிட ஐ.நா. உட்படப் பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதியில்லை. 'இந்து' ராம் தவிர ஏனைய ஊடகவியலாளர்களுக்கு அனுமதியில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதியில்லை. தென் தமிழீழத்தில் செயல்பட்டுவந்த செஞ்சிலுவைச் சங்க அலுவலகங்கள் இலங்கை அரசின் கட்டளைக்கு இணங்க மூடப்பட்டுவிட்டன.
புலம்பெயர் தமிழர்கள் வணங்காமண் மூலம் அனுப்பிவைக்கப்பட்ட 884 டன் உணவு, உடை, மருந்து இன்றுவரை முகாம்களில் சிறைவைக்கப்பட்டுள்ள அந்த மக்களைச் சென்றடையவில்லை.
குற்றம்சாட்டுகிறோம்...
எமது உறவுகளின் அவலத்துக்கும் அல்லல்களுக்கும் இலங்கை அரசுக்கு ஆயுதம், போர்க் கப்பல்கள், ராடார், பயிற்சி, புலனாய்வு, நிதி போன்றவற்றை வழங்கி தமிழ் மக்களுக்கு எதிரான போரை திரைக்குப் பின்னால் இருந்து இந்திய அரசுதான் நடத்தியது என நாம் வெளிப்படையாகக் குற்றம் சாட்டுகிறோம். அதற்குத் திமுக அரசு துணை போனது எனக் குற்றம் சாட்டுகிறோம். காங்கிரஸ் தலைவி சோனியா, இந்திய பிரதமர் மன்மோகன் சிங் [^], தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோரது கைகளில் ஈழத் தமிழர்கள் கொட்டிய குருதிக் கறை படிந்துள்ளது எனக் குற்றச் சாட்டுகிறோம்!
ஐ.நாவின் மனித உரிமை அவையில் ஸ்ரீலங்கா அரசு மனித உரிமை மீறல்கள் போர்க் குற்றங்கள் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று மேற்குலக நாடுகள் கொண்டுவந்த தீர்மானத்தை எதிர்த்து காங்கிரஸ்- திமுக கூட்டணி அரசு வாக்களித்தது தமிழ்மக்களுக்குச் செய்த இரண்டகம் எனக் குற்றம் சாட்டுகிறோம்!
தமிழினப் படுகொலையை கன கச்சிதமாக நிறைவேற்றிய மகிந்த ராஜபச்சே அரசுக்கு சர்வதேச நிதியம் கடன் கொடுப்பதை மேற்குலக நாடுகள் எதிர்த்தபோது 'நீங்கள் கொடுக்காவிட்டால் நாங்கள் கொடுப்போம்' என இந்தியா சொன்னது வெட்கக் கேடானது எனக் குற்றம் சாட்டுகிறோம்!.
முதல்வர் கருணாநிதி அரங்கேற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகல், உண்ணா நோன்பு, மனிதச் சங்கிலி, பொதுக் கூட்டங்கள், சட்டசபைத் தீர்மானங்கள், தந்திகள், கடிதங்கள் எல்லாமே வெறும் நாடகம் என குற்றம் சாட்டுகிறோம்!.
"இலங்கைத் தமிழர்கள் பெற வேண்டிய ஈழத்தை பெற்றுத் தருவதற்கு முயற்சி செய்வோம்” என அப்போலோ மருத்துவமனையில் படுத்தபடியே முதல்வர் விட்ட அறிக்கை ஒரு ஏமாற்று வித்தை எனக் குற்றம் சாட்டுகிறோம்!
இன மானமா? பதவியா? என வந்தபோது பதவிதான் முக்கியம் என முதல்வர் கருணாநிதி முடிவெடுத்தார் எனக் குற்றம் சாட்டுகிறோம்!.
தமிழீழம் பற்றி முதல்வர் கருணாநிதி அடிக்காத குட்டிக் கரணமே இல்லை எனலாம். 1985ம் ஆண்டு மதுரையில் தமிழீழ ஆதரவாளர் அமைப்பு நடத்திய மதுரை மாநாட்டில் வாஜ்பாய் உட்பட பல அரசியல் தலைவர்கள் கலந்து கொண்ட மாநாட்டில இலங்கைத் தமிழர்களின் மூலாதார முழக்கமான தமிழ் ஈழத்திற்கு ஆதரவு அளிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றினார்.
ஒரு நாள் பார்த்து தமிழீழம் கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன் என்பார். அடுத்த நாள் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்க ஆதரவு இல்லை, ஆதரவை எப்போதோ திமுக விலக்கிக் கொண்டுவிட்டது என்பார். ஒரு நாள் பிரபாகரன் எனது நண்பர் என்பார். மறு நாள் அவர் ஒரு பயங்கரவாதி, சர்வாதிகாரி, சகோதர யுத்தம் செய்தவர் என வசை பாடுவார்.
இன்று "இனித் தமிழ் ஈழம் பற்றிப் பேசி பயனில்லை, மாறாக தமிழர்களுக்கு சம உரிமை, தமிழுக்கு சம தகுதி, தமிழர் வாழும் பகுதிகளுக்கு அதிகாரப்பகிர்வு போன்ற கோரிக்கைகளையே வலியுறுத்த வேண்டும். தவிரவும் மனித உரிமை மீறல் குற்றங்களுக்காக பன்னாட்டு அளவில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே மீது விசாரணை வேண்டும் என்பன போன்ற வேண்டுகோள்களை முன்வைக்காமல், சிங்களவர்களுக்கு ஆத்திரமூட்டும் படி எதுவும் பேசாமல், சிங்கள பெளத்த துறவிகள் கூட நம் மீது கோப அக்னியை வீசக் கூடியவர்களாகவே இருக்கிறார்கள், தமிழர்களுக்கு எந்தவித சேதாரமும் ஏற்படாத வகையில் நீக்குபோக்குடன் நம்முடைய கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்" என்று முதல்வர் பேசியுள்ளார். பேசியது சந்துமுனை அல்ல தமிழக சட்டமன்றம்!.
மூன்று மணி நேரம் உண்ணாநோன்பு நோற்று 'ராஜபக்சே போர் நிறுத்தத்தை அறிவித்துவிட்டார்' என்று சொல்லி உண்ணா நோன்பை முடித்து சாதனை படைத்தவர் கருணாநிதி ஒருவர்தான்.
அவரிடம் 'இன்று காலையில் கூட விடுதலைப் புலிகள் மீது கன ரக ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடைபெற்றதாக செய்திகள் வந்திருக்கிறதே?' என்று செய்தியாளர்கள் கேட்டபோது 'மழை விட்டும் தூவானம் விடவில்லை' என்று பதில் உரைத்தது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்!.
தமிழ்நாட்டுக்கு அகதிகளாக ஓடிவந்த ஈழத் தமிழர்களை செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் ஆண்டுக்கணக்காக அடைத்து வைத்து அழகுபார்க்கும் ஒரே முதல்வர் கருணாநிதிதான்!.
இந்திய அரசினாலும் தமிழக அரசினாலும் ஈழத் தமிழ் அகதிகள் மிகக் கேவலமாக நடத்தப்படுகிறார்கள். திபெத் ஏதிலிகளை வீடுகளில் குடிவைத்துவிட்டு தமிழ் அகதிகளை மாட்டுத் தொழுவங்களில் அடைத்து வைத்திருக்கிறது இந்திய அரசு!.
தமிழீழ மக்களுக்காகக் குரல் கொடுத்த தமிழ் உணர்வாளர்கள் இயக்குநர் சீமான், கொளத்தூர் மணி, தஞ்சை மணியரசன், நாஞ்சில் சம்பத், கோவை ராமகிருஷ்ணன் போன்றோரை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தது அதிகார வெறியல்லவா?.
வெந்த புண்ணில் வேலைச் சொருகுகிறார்...
வெந்த புண்ணில் வேலைச் சொருகுவதில் முதல்வர் கருணாநிதி கெட்டிக்காரர். "இலங்கையில் இப்போது சுமூக நிலை ஏற்பட்ட விட்டப் பிறகும் கூட அந்தச் சிக்கலைக் கிளறிவிட்டுக் கொண்டிருப்பவர்களை எனக்குத் தெரியும்" என முதல்வர் கருணாநிதி கூறியிருப்பது தமிழர்கள் அனைவரையும் வேதனை அடையச் செய்துள்ளது.
ஒரு லட்சம் தமிழர்கள் படுகொலை, மூன்று லட்சம் மக்கள் முள்வேலி வதை முகாம்களுக்குள் முடக்கப்பட்டு உணவு, குடிநீர் மருந்தில்லாமல் நாளும் செத்துக் கொண்டிருக்கிறார்களே.. அதற்குப் பெயர் இயல்பு நிலையா?.
தமிழர்களுக்குத் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை எதுவும் இல்லை என்று கூறித் தமிழர் தாயகத்தில் பெளத்த விகாரைகளைக் கட்டி சிங்களவர்களைக் குடியேற்றி சிங்கள மயப்படுத்துவதற்குப் பெயர் இயல்பு நிலையா? எது இயல்பு நிலை?
கொண்ட கொள்கையில் சறுக்குவது என்று முடிவெடுத்து விட்டால் நொண்டிச் சாக்குகளும் சப்பைக் கட்டுகளும் வண்டி வண்டியாய் வரத்தான் செய்யும்!
தமிழீழ மக்கள் விடுதலை பெற்று பாதுகாப்போடும் மானத்தோடும் மகிழ்ச்சியோடும் வாழும் நிலை ஏற்படும் வரை முதல்வர் கருணாநிதி நடத்த இருக்கும் உலகத் தமிழ் மாநாட்டை தமிழ் உணர்வாளர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ்ச் சான்றோர்கள், கலைஞர்கள், பொதுமக்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என அன்போடு வேண்டிக் கொள்கிறோம்.
Tuesday, September 29, 2009
சோனியாவின் மருமகன் குத்ரோட்சியென்றால் இராஜீவ் காந்திக்கு சோனியா வைப்பாட்டியா?
இந்தியாவின் வல்லரசுக்கனவு ஆற்றில் மிதந்த குந்தியின் மகன் தானா?
இத்தாலிய தொழிலதிபர் குட்ரோச்சியை பிடிக்க மேற்கொண்ட எல்லா முயற்சிகளும் தோல்வி அடைந்து விட்டதாக, மத்திய அரசு கைவிரித்துள்ளது. அதனால், அவருக்கு எதிரான போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கை வாபஸ் பெறுவதாக சுப்ரீம் கோர்ட்டில் நேற்று அரசு தெரிவித்தது.
சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த போபர்ஸ் நிறுவனத்திடம் இருந்து பீரங்கிகள் வாங்க, 1986ம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டது. 1,500 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தில், 64 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.இது தொடர்பாக ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டு, இந்துஜா சகோதரர்கள், இத்தாலிய தொழிலதிபர் குட்ரோச்சி உட்பட எட்டு பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இதில், மூன்று பேர் மரணம் அடைந்து விட்டனர். இந்த வழக்கை, 1990ம் ஆண்டுக்குப் பின் சி.பி.ஐ., விசாரித்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குட்ரோச்சி, பல ஆண்டுகளாக இந்தியாவில் தங்கியிருந்தார். ஆனால், வழக்கை சி.பி.ஐ., விசாரிக்கத் துவங்கியதும் தன் மனைவியுடன் வெளிநாட்டிற்கு தப்பி விட்டார்.
கடந்த 2006ம் ஆண்டு ஜனவரி 23ம் தேதி அர்ஜென்டினாவில் சிக்கினார். அவரை நாடு கடத்திக் கொண்டுவர சி.பி.ஐ., எவ்வளவோ முயற்சித் தது; இருந்தும் பலனில்லை. இதற்கிடையில், 2003ம் ஆண்டில், குட்ரோச்சி மற்றும் அவரின் மனைவி பெயரில், லண்டன் வங்கிகளில் இரண்டு கணக்குகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தக் கணக்குகளில் ஏராளமான பணம் இருப்பதும் தெரிந்தது.உடன் இந்தக் கணக்குகளை முடக்கி வைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இருப்பினும், இந்த கணக்குகளின் முடக்கத்தை ரத்து செய்யும்படி, 2006ம் ஆண்டில் மத்திய அரசு கேட்டுக் கொண்டது. இதனால், கணக்கில் இருந்த பணத்தை குட்ரோச்சி உடனே எடுத்து விட்டார்.
அதேநேரத்தில், 2005ல், போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கில் தீர்ப்பளித்த டில்லி ஐகோர்ட், "இந்துஜா சகோதரர்கள் இரண்டு பேர், ஸ்ரீசந்த் மற்றும் கோபிசந்த்' ஆகிய நான்கு பேரும் குற்றமற்றவர்கள் என, தீர்ப்பளித்தது.இந்த வழக்கில் ஊழல் நடந்ததற்கு சிறு ஆதாரங்கள் கூட இல்லை என, தெரிவித்தது. இதனால், இந்த தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய வேண்டாம் என, அட்டர்னி ஜெனரல் ஆலோசனை வழங்கினார். அதனால், சி.பி.ஐ., அப்பீல் செய்யவில்லை.இதையடுத்து, வக்கீல் அஜய் அகர்வால் என்பவர், 2005 மே மாதம் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அதில், டில்லி ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பு சட்ட விரோதம் எனக் கூறியிருந்தார். இதன்பின், குட்ரோச்சியின் லண்டன் வங்கி கணக்கு முடக்கத்தை ரத்து செய்ய மத்திய அரசும், சி.பி.ஐ.,யும் பரிந்துரை செய்ததை எதிர்த்து 2006ல் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
ஊழல் இல்லை: இந்நிலையில், அஜய் அகர்வால் தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் சதாசிவம் மற்றும் சவுகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன், மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம் கூறியதாவது: போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குட்ரோச்சியை பிடித்துக் கொண்டுவர, மேற்கொண்ட முயற்சிகள் எல்லாம் தோல்வி அடைந்து விட்டன. அதனால், குட்ரோச்சிக்கு எதிரான வழக்கை முடித்துவிட சி.பி.ஐ., தீர்மானித்துள்ளது. போபர்ஸ் பீரங்கி பேரத்தில் ஊழல் எதுவும் நடக்கவில்லை என, டில்லி ஐகோர்ட் அளித்த தீர்ப்பையும், வழக்கின் வேறு பல அம்சங்களையும் கவனத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளது.சர்வதேச போலீஸ் மூலம் எச்சரிக்கை நோட்டீஸ் விடுத்தும், குட்ரோச்சியை பிடிக்க சி.பி.ஐ., தீவிரமாக முயன்றது. ஆனால், முடியவில்லை.
அகர்வால் தாக்கல் செய்த மனுவால் எந்த பயனும் ஏற்படவில்லை.போபர்ஸ் பீரங்கி பேரம் 1986ல் நிகழ்ந்தது. இதற்கான கடைசி பணம் 1990ம் ஆண்டில் வழக்கப்பட்டு விட்டது. இந்த வழக்கு செயல்பாட்டில் உள்ளதா, இல்லையா என, சுப்ரீம் கோர்ட்டே முன்னர் கேள்வி எழுப்பியுள்ளது. குட்ரோச்சிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவது என, சி.பி.ஐ., எடுத்த முடிவுக்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்துள்ளது. இவ்வாறு கோபால் சுப்பிரமணியம் கூறினார். ஆனால், மத்திய அரசின் இந்த நிலைக்கு வக்கீல் அஜய் அகர்வால் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: இந்த நாட்டின், "மருமகனை'ப் போல குட்ரோச்சியை மத்திய அரசு நடத்துகிறது. போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கில் மற்றவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், குட்ரோச்சி மட்டுமே குற்றவாளி.ஆனால், சி.பி.ஐ.,யும், மத்திய அரசும் இந்த வழக்கை முடிவுக்கு கொண்டுவர தீர்மானித்துள்ளன. குட்ரோச்சியை காப்பாற்ற அரசு முற்படுகிறது. அவரை பிடித்துக் கொண்டு வருவதில் சி.பி.ஐ., அக்கறை காட்டவில்லை. என்னுடைய மனுவை கோர்ட் தொடர்ந்து விசாரிக்க வேண்டும்.இவ்வாறு அஜய் கூறினார்.ஆனால், "மருமகன்' என்ற விமர்சனத்தை அரசு வக்கீல் ஆட்சேபித்தார். இத்தீர்ப்பு மூலம் இனி இவ்வழக்கில் தொடர்பு சிறிதும் இல்லாத மனிதராக குட்ரோச்சி சுதந்திரமாக உலா வர வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
இத்தாலிய தொழிலதிபர் குட்ரோச்சியை பிடிக்க மேற்கொண்ட எல்லா முயற்சிகளும் தோல்வி அடைந்து விட்டதாக, மத்திய அரசு கைவிரித்துள்ளது. அதனால், அவருக்கு எதிரான போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கை வாபஸ் பெறுவதாக சுப்ரீம் கோர்ட்டில் நேற்று அரசு தெரிவித்தது.
சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த போபர்ஸ் நிறுவனத்திடம் இருந்து பீரங்கிகள் வாங்க, 1986ம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டது. 1,500 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தில், 64 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.இது தொடர்பாக ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டு, இந்துஜா சகோதரர்கள், இத்தாலிய தொழிலதிபர் குட்ரோச்சி உட்பட எட்டு பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இதில், மூன்று பேர் மரணம் அடைந்து விட்டனர். இந்த வழக்கை, 1990ம் ஆண்டுக்குப் பின் சி.பி.ஐ., விசாரித்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குட்ரோச்சி, பல ஆண்டுகளாக இந்தியாவில் தங்கியிருந்தார். ஆனால், வழக்கை சி.பி.ஐ., விசாரிக்கத் துவங்கியதும் தன் மனைவியுடன் வெளிநாட்டிற்கு தப்பி விட்டார்.
கடந்த 2006ம் ஆண்டு ஜனவரி 23ம் தேதி அர்ஜென்டினாவில் சிக்கினார். அவரை நாடு கடத்திக் கொண்டுவர சி.பி.ஐ., எவ்வளவோ முயற்சித் தது; இருந்தும் பலனில்லை. இதற்கிடையில், 2003ம் ஆண்டில், குட்ரோச்சி மற்றும் அவரின் மனைவி பெயரில், லண்டன் வங்கிகளில் இரண்டு கணக்குகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தக் கணக்குகளில் ஏராளமான பணம் இருப்பதும் தெரிந்தது.உடன் இந்தக் கணக்குகளை முடக்கி வைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இருப்பினும், இந்த கணக்குகளின் முடக்கத்தை ரத்து செய்யும்படி, 2006ம் ஆண்டில் மத்திய அரசு கேட்டுக் கொண்டது. இதனால், கணக்கில் இருந்த பணத்தை குட்ரோச்சி உடனே எடுத்து விட்டார்.
அதேநேரத்தில், 2005ல், போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கில் தீர்ப்பளித்த டில்லி ஐகோர்ட், "இந்துஜா சகோதரர்கள் இரண்டு பேர், ஸ்ரீசந்த் மற்றும் கோபிசந்த்' ஆகிய நான்கு பேரும் குற்றமற்றவர்கள் என, தீர்ப்பளித்தது.இந்த வழக்கில் ஊழல் நடந்ததற்கு சிறு ஆதாரங்கள் கூட இல்லை என, தெரிவித்தது. இதனால், இந்த தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய வேண்டாம் என, அட்டர்னி ஜெனரல் ஆலோசனை வழங்கினார். அதனால், சி.பி.ஐ., அப்பீல் செய்யவில்லை.இதையடுத்து, வக்கீல் அஜய் அகர்வால் என்பவர், 2005 மே மாதம் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அதில், டில்லி ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பு சட்ட விரோதம் எனக் கூறியிருந்தார். இதன்பின், குட்ரோச்சியின் லண்டன் வங்கி கணக்கு முடக்கத்தை ரத்து செய்ய மத்திய அரசும், சி.பி.ஐ.,யும் பரிந்துரை செய்ததை எதிர்த்து 2006ல் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
ஊழல் இல்லை: இந்நிலையில், அஜய் அகர்வால் தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் சதாசிவம் மற்றும் சவுகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன், மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம் கூறியதாவது: போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குட்ரோச்சியை பிடித்துக் கொண்டுவர, மேற்கொண்ட முயற்சிகள் எல்லாம் தோல்வி அடைந்து விட்டன. அதனால், குட்ரோச்சிக்கு எதிரான வழக்கை முடித்துவிட சி.பி.ஐ., தீர்மானித்துள்ளது. போபர்ஸ் பீரங்கி பேரத்தில் ஊழல் எதுவும் நடக்கவில்லை என, டில்லி ஐகோர்ட் அளித்த தீர்ப்பையும், வழக்கின் வேறு பல அம்சங்களையும் கவனத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளது.சர்வதேச போலீஸ் மூலம் எச்சரிக்கை நோட்டீஸ் விடுத்தும், குட்ரோச்சியை பிடிக்க சி.பி.ஐ., தீவிரமாக முயன்றது. ஆனால், முடியவில்லை.
அகர்வால் தாக்கல் செய்த மனுவால் எந்த பயனும் ஏற்படவில்லை.போபர்ஸ் பீரங்கி பேரம் 1986ல் நிகழ்ந்தது. இதற்கான கடைசி பணம் 1990ம் ஆண்டில் வழக்கப்பட்டு விட்டது. இந்த வழக்கு செயல்பாட்டில் உள்ளதா, இல்லையா என, சுப்ரீம் கோர்ட்டே முன்னர் கேள்வி எழுப்பியுள்ளது. குட்ரோச்சிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவது என, சி.பி.ஐ., எடுத்த முடிவுக்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்துள்ளது. இவ்வாறு கோபால் சுப்பிரமணியம் கூறினார். ஆனால், மத்திய அரசின் இந்த நிலைக்கு வக்கீல் அஜய் அகர்வால் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: இந்த நாட்டின், "மருமகனை'ப் போல குட்ரோச்சியை மத்திய அரசு நடத்துகிறது. போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கில் மற்றவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், குட்ரோச்சி மட்டுமே குற்றவாளி.ஆனால், சி.பி.ஐ.,யும், மத்திய அரசும் இந்த வழக்கை முடிவுக்கு கொண்டுவர தீர்மானித்துள்ளன. குட்ரோச்சியை காப்பாற்ற அரசு முற்படுகிறது. அவரை பிடித்துக் கொண்டு வருவதில் சி.பி.ஐ., அக்கறை காட்டவில்லை. என்னுடைய மனுவை கோர்ட் தொடர்ந்து விசாரிக்க வேண்டும்.இவ்வாறு அஜய் கூறினார்.ஆனால், "மருமகன்' என்ற விமர்சனத்தை அரசு வக்கீல் ஆட்சேபித்தார். இத்தீர்ப்பு மூலம் இனி இவ்வழக்கில் தொடர்பு சிறிதும் இல்லாத மனிதராக குட்ரோச்சி சுதந்திரமாக உலா வர வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
தொல்காப்பியனும் தொலை நோக்குத் தமிழனும்
கருணாநிதிக்கு "முதல் தொல்காப்பியர் விருது' வழங்க வேண்டும் என தமிழறிஞர் தமிழண்ணல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை விவரம்:
தமிழ் செம்மொழி என அறிவிக்கப்படும் முன்பே தொல்காப்பிய பூங்கா வெளியிட்டது. கணக்காயர் ச.சோ.பாரதியார், க.வெள்ளைவாரணர், சி.இலக்குவனார், வ.சுப. மாணிக்கனார், ச.பாலசுந்தரனார் போன்ற பலர் தொல்காப்பியமே மூச்சாக வாழ்ந்தவர்கள்.
தொல்காப்பியத்தைப் பரப்ப வேண்டும், பாமரனும் அறியச் செய்ய வேண்டும், ஆய்வாளர்கள் அப் பழந்தமிழ் நூலைப் படித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர்கள் கனவு கண்டனர்.
அவர்கள் கனவை நனவாக்கியவர் முதல்வர் கருணாநிதி. முதல்வர் கருணாநிதிக்கு இந்த விருதை வழங்குவது அவர்களுக்கே வழங்கப்படுவதைப் போன்றதாகும்.
தமிழை செம்மொழி என மத்திய அரசை அறிவிக்கச் செய்து, உலகினர் பலரும் "தமிழ் ஒரு செம்மொழி- செவ்வியல் மொழி' என உணரவைத்தவர் முதல்வர். செவ்விலக்கியம் சார்ந்த சங்கத் தமிழ், குறளோவியம், தொல்காப்பியம் மூன்றனுக்கும், எளியோரும் அறியும் வகையில் நூல்கள் எழுதியவர். அரசியல் தலைவராயினும் தாம் ஓர் எழுத்தாளர், படைப்பாளி, கவிஞர் என்பதிலேயே பெருமை கொள்பவர். தமிழ் மொழி, இலக்கிய வளர்ச்சிக்கு எனத் தனி அமைச்சு துறை கண்டவர். பிற மொழியினர் நினைக்காத ஒரு சிறப்பு அது. இடைக்காலச் சோழர் காலமே, தமிழ் புத்துயிர் பெற்று மறுமலர்ச்சி கண்ட காலம். இன்று மீண்டும் தமிழருக்கு ஒரு மறுமலர்ச்சி ஏற்படச் செய்யவல்ல, எல்லாத் தகுதிகளையும் பெற்றுள்ள மூத்த தமிழறிஞர் முதல்வர் கருணாநிதி.
எனவே, அவருக்கு 9-வது உலகத் தமிழ் மாநாட்டில் இந்த விருது வழங்கப்பட வேண்டும் என தமிழண்ணல் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தொலை நோக்குத் தமிழர் கருத்துக்கள்
ஏற்கெனவே ‘நமக்கு நாமே’ திட்டத்தின்கீழ் இந்த தறுதலைக்குப் பெரியார் விருது வழங்கியாயிற்று. இனி தொல்காப்பியர் விருதுதான் பாக்கி.பாவம் தொல்காப்பியர். இப்படி விருதா விருதுகளை வாங்கிக் குவிக்கும் இவர்களுக்கு துளிகூட வெட்கமே கிடையாதா?
By எழிலுருவன்
9/30/2009 9:29:00 AM
"தமிழின துரோகி, எட்டப்பன், கைக்கூலி, நீரோ மன்னன், கோயபல்ஸ், ஈனப் பிறவி" போன்ற விருதுகள் கொடுக்கலாம். "எட்டப்பன்" என்ற வார்த்தை மறைந்து போய் "கருணா" என்று நிலைத்து நிற்கப் போகிறது. பொன் மனச் செம்மல் எம்.ஜி.ஆர் தமிழினத்திற்கு செய்த உதவிகளை தினமணியும், தினத்தந்தியும் தொடர்ந்து வெளியிடுகின்றன. சில ஆண்டுகள் கழித்து இந்த துரோகி செய்த துரோகத்தனத்தையும் எல்லா பத்திரிக்கைகளும் வெளியிடும். நம் சந்ததியினர் அவற்றை படிப்பார்கள்.
By நவீன் சென்னை
9/30/2009 8:47:00 AM
Theruttu payalukku Devarin Adiyal veruthu kodungo!
By raja
9/30/2009 8:26:00 AM
தயவு செஞ்சு சின்ன சின்ன விருதுலாம் இவனுக்கு கொடுத்து தமிழ் இன தலைவர, தெலுங்கன் கருணாவை கேவலபடுத்தாடீங்க.அவருக்கு நோபல் பரிசு யாராவது சிபாரிசு செய்யுங்கப்பா.ஆனா எனது துறையில கொடுப்பாங்க?
By அச்சரபாக்கம் மா.பா.
9/30/2009 6:31:00 AM
கிழிக்கிறான் உண்மைத் தமிழன் கலங்காது காக்கா பிடிக்கிறான் கருப்புக்கண்ணாடி கழட்டாத கயவன்
கொடுமையிலும் கொடுமையாக தமிழக முதல்வரே தான் கொடுக்க வேண்டிய விருதுகளில் ஒன்றை தானே உரிமையாக கையைவிட்டு எடுத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய 'உளியின் ஓசை'க்காக சிறந்த உரையாடல் ஆசிரியர் விருதாம்..
அவருடைய விளம்பர வெறியும், பதவி ஆசையும், கூச்ச நாச்சமில்லாத படுத்துக்கொண்டே பாராட்டை கேட்கும் மனோபாவமும் உலகமறிந்த விஷயம் என்றாலும், இவ்வளவு பக்குவப்பட்ட வயதிலும் இன்னமும் அப்படியே இருக்கிறாரே என்பதை நினைத்தால்தான் மனம் பகீரென்கிறது.
இன்னும் அடுத்தடுத்த வருடங்களில் எதையெல்லாம் தான் எடுத்துக் கொண்டு மிச்சத்தை தமிழ்ப் படைப்பாளிகளுக்கு எச்சில் இலை போல் அள்ளி வீசப் போகிறாரோ தெரியவில்லை.
முதல்வராகப் பதவி வகிப்பவர் இது போன்ற அரசு விருதுகளுக்கான போட்டிகளில் கலந்து கொள்ளாமல் தவிர்த்துவிட்டுச் செல்வதுதான் அந்தப் பதவிக்கு பெருமை சேர்க்கும் விஷயம். இங்கேதான் அந்தப் பெருமை சேர்ப்புகளையே குப்பைத் தொட்டிக்குக் கொண்டு போய் போட்டுவிட்டார்களே.. யார் கேட்பது..?
உண்மையில் 'உளியின் ஓசை' படைப்பு பரிசுக்குரியதா? சிறந்த உரையாடல் பரிசுப் போட்டியில் 'நான் கடவுளும்', 'பொம்மலாட்டமும்', 'அஞ்சாதே'யும், 'பூ'வும், 'சுப்ரமண்யபுரமும்' வரிந்து கட்டிக் கொண்டு வரிசையில் நிற்கின்றன. அவற்றைவிடவா ஐயா அற்புதமாக எழுதிக் குவித்துவிட்டார். கொடுமையடா சாமி..
'நான் கடவுளுக்கு' நிச்சயம் கொடுத்திருக்கலாம். அத்திரைப்படத்தின் வசனங்கள் தமிழ்த் திரையுலகத்துக்கு கிடைத்த புதுமை. பாவம் ஜெயமோகன்.. சாருநிவேதிதாவுக்கு பதிவு போடும் வேலையைக் கொடுக்க ஆசை, ஆசையாகத் தயாராகக் காத்திருந்தார். ஆப்படித்துவிட்டார் கோபாலபுரத்து ஐயா. சாருவுக்கு ஒரு வேலை மிச்சம்..
இந்த கேலிக்கூத்தான இரண்டு வருட பரிசு அறிவுப்புகளின் பின்னணிக்கு என்ன காரணம்? தான் ரிட்டையர்டுமெண்ட் பெற உள்ள இதே காலக்கட்டத்திலேயே கடைசியாக ஒரு முறை இரண்டு பெரும் நடிகர்களுக்கு நடுவில் அமர்ந்துவிடத் துடித்த ஒரு அல்பத்தனத்திற்கு அரசு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பது மகா கேவலமானது.
ஏன்? இப்படி? யாரும் யோசிக்க மாட்டார்களா? என்றெல்லாம் தேர்வுக் கமிட்டியினரிடம் விசாரித்ததில் அவர்களிடம் அரசு அதிகாரிகள் தெரிவித்த விஷயங்கள் ஒன்றுதானாம்..
“தலைவர் மனசு குளிர்ற மாதிரி செலக்ட் பண்ணுங்க. வீணா அவரை அப்செட்டாக்காதீங்க” என்று மட்டும் தேர்வுக் கமிட்டியினரின் காதில் ஓதப்பட்டதாம். அதன் விளைவினால்தான் ஐயா விருப்பப்படியே டாப் லிஸ்ட் தயார் செய்யப்பட்டதாம்.
ஐயாவின் மனம் குளிர வைக்க அடுத்த விழா ரெடி..
இதற்குப் பேசாமல் அவரும், அவருடைய குடும்பத்தினருமே பரிசுக்குரியவர்களின் பெயரை டிக் செய்து "வீட்ல வந்து பரிசை வாங்கிட்டு சமத்தா கால்ல விழுந்துட்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்திட்டு போய்ச் சேருங்க"ன்னு அறிக்கையே விட்ரலாம்.
எதையும் தாங்கும் தமிழன், நிச்சயம் இதையும் தாங்குவான்..!
Read more: http://truetamilans.blogspot.com/2009/09/blog-post_29.html#ixzz0SY5yDLZo
சாத்தான் வேதமோதினால் கருணாநிதி வாய் மொழியாக வரும்....
சாத்தானின் வாய்களெல்லாம் பல்லாக
காஞ்சீபுரத்தில் நேற்று நடைபெறற அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவில் மூடன் கருணாநிதி பேசியதாவது:
அகதிகளாக உள்ள இலங்கை தமிழர்கள்
அவற்றில் தம்பி ஸ்டாலின் முன்மொழிந்து வழிமொழியப்பட்டு 8-வது தீர்மனமாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தேயே முக்கிய தீர்மானமாக கருதுகிறேன்.
அது இலங்கை தமிழ் மக்களை பற்றிய தீர்மானம். இலங்கை தமிழர் இங்கு நம் நாட்டில் அகதியாக உள்ளனர். இலங்கையிலும் அங்கு வசிக்கும் மக்கள் அகதிகளாக்கப்பட்டு கூடாரத்தில் துன்பங்களை ஏற்றுக்கொண்டு அவதிப்படுகிறார்கள். ஆனால் நான் அவர்களை சொல்லவில்லை. அவர்கள் வேறு நாட்டில் வசிக்கிறார்கள். அவர்கள் கூடாரத்தில் இருந்து விடுவித்துக்கொள்ள வேண்டும். சொந்த இடத்திற்கே அவர்கள் போக வேண்டும் என்று நாம் வலியுறுத்துகிறோம். இந்திய அரசுடன் சேர்ந்து கொண்டும் குரல் கொடுக்கிறோம். அதை வலியுறுத்தி கொண்டும் வருகிறோம்.
தமிழகத்தில் 1 லட்சம் அகதிகள்…
அதே நேரத்தில் தமிழகத்தில் கடந்த 10, 20 ஆண்டுகளாக இலங்கையில் இருந்து அகதிகளாக வந்து குடியேறிய மக்களின் கதி என்ன? என்பதுதான் எட்டாவது தீர்மானம் ஆகும்.
அதில் நாம் அமைத்த வாக்கியங்களை தீர்மானம் நிறைவேற்றும் போது யாரும் கவனிக்காமல் இருந்தால் கவனம் ஊட்டுகிறேன். 1984 முதல் தமிழகத்திற்கு இலங்கையில் இருந்து அகதிகளாக வந்த மக்களை தமிழக அரசு 17 இடங்களில் உள்ள முகாம்களில் தங்க வைத்துள்ளது. தற்போது 115 முகாம்களில் 73 ஆயிரத்து 572 இலங்கை தமிழர் அகதிகள் தங்கியுள்ளனர். இது மட்டுமின்றி 38 ஆயிரம் இலங்கை தமிழர்கள் முகாம்களில் தாங்காமல் பல்வேறு இடங்களில் சொந்த பொறுப்பில் தங்கியுள்ளனர். மொத்தத்தில் தமிழகத்தில் 1 லட்சம் இலங்கை தமிழ் அகதிகள் தங்கியுள்ளனர். 1984 முதல் உள்ள புள்ளி விவரம் இது.
உதவித் தொகை உயர்வு
தி.மு.க. பொறுப்பு ஏற்றவுடன் 1.2.2006 முதல் மத்திய மாநில அரசுகள் இணைந்து அகதிகளுக்கு வழங்கி வரும் உதவி தொகை உயர்ந்தப்பட்டுள்ளது. அகதி குடும்ப தலைவருக்கு வழங்கப்பட்டு வந்த 200 ரூபாயில் இருந்து 400 ரூபாய் என்றும், வயது வந்தவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவி தொகை 144 ரூபாயில் இருந்து 288 ரூபாயாகவும், முதல் குழந்தைக்கு 90 ரூபாயில் இருந்து 180 ரூபாய் ஆகவும் மற்ற குழந்தைகளுக்கு 45-லிருந்து 90 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படுகிறது. அவர்களுக்கு கிலோ அரிசி 57 காசுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அகதிகள் குழந்தைகள் மேல் நிலை வகுப்பு வரை இலவச கல்வி பயில ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மேல் படிப்பு படிக்கவும் வாய்ப்பு தரப்படுகிறது.
இந்த தீர்மானம் என்ன சொல்லுகிறது? இலங்கை தமிழ் அகதிகளை இந்திய குடியுரிமை சட்டம் மற்றும் ஏனைய சட்டங்களுக்கு உட்பட்டு இங்கு குடியமர்த்த செய்ய வேண்டும்.
மறுகுடி அமர்த்தும் சட்டமாக மத்திய அரசுடன் கலந்து பேசி வழிவகை செய்துகொள்ள வேண்டும். அவர்கள் தமிழகத்திலே வாழ்வாதாரத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வராக, தி.மு.க. தலைவராக இந்த முப்பெரும் விழா வாயிலாக நான் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என்று என்னையே நான் கேட்டுக்கொள்ளும் தீர்மானம்.
என்னை நான் கேட்டுக்கொண்டதால் இந்த தீர்மானம் நிறைவேறாவிட்டால் என்னை விட ஏமாளி யாரும் இல்லை. இந்த தீர்மானம் நிறைவேறுவதற்கு மத்திய அரசை வலியுறுத்த இருக்கிறோம். இதை சட்ட ரீதியாக, அமைதியாக பெற இருக்கிறோம். மத்தியில் உள்ளவர்கள் இந்த தீர்மானம் நிறைவேற உதவ வேண்டும், என்றார்.
கோவை உலக தமிழர் மாநாடு
உலக தமிழர் மாநாட்டை நடத்த வேண்டும் என்று முடிவு செய்து ஜனவரி இறுதியில் இந்த மாநாட்டை கோவையில் நடத்தலாம் என்று முடிவு செய்து அந்த மாநாடு சீரோடும் சிறப்போடும் நடைபெறும். ஏனென்றால் இந்த மாநாடு தமிழ் செம்மொழி மாநாடு என்று நடைபெற இருக்கும் மாநாடு. அந்த மாநாட்டிற்கு அச்சாரமாக அந்த மாநாட்டிற்கு நீங்கள் எல்லாம் வர வேண்டும் என்று உங்களுக்கு எல்லாம் அழைப்பு விடுக்கிறேன்.
காஞ்சீபுரத்தில் கூடியிருக்கும் கழக தோழர்கள் மாத்திரம் அல்ல. தமிழக மக்கள் ஆகிய நீங்கள் கோவைக்கும் வருவீர்கள். இந்த மாநாட்டை தமிழகத்தின் முதல்-அமைச்சர் என்ற முறையில் கழக தலைவர் என்ற முறையில் இங்கு வீற்றிருக்கும் தலைவர்கள் அன்பால் ஈர்க்கப்பட்டவன் என்ற முறையில் உறுதியாக சொல்கிறேன். கோவையில் மாநாடு நடைபெறும் அது செம்மொழி மாநாடாக நடைபெறும். அப்படி முடியாத நிலை ஏற்படாது. தமிழ் என்ற அந்த 3 எழுத்து சொல்லுக்கு என்னை உரியவனாக ஆக்கிக்கொண்டு அன்று முதல் இன்று வரை அதற்காகவே என்னை ஒப்படைத்துக்கொண்டு இருக்கிறேன்.
எஞ்சியிருக்கும் மூத்த தலைவர்கள் நாங்கள் இருவர்தான்!
நான் இளமை பருவத்தில் எழுதிய ஒரு கட்டுரையை படித்து விட்டு அண்ணா அவர்கள் நன்றாக படி, கட்டுரை பிறகு எழுதலாம் என்று சொன்னதாக அடிகளாளர் இங்கு குறிப்பிட்டார். அதற்கு பொருள் கட்டுரை உனக்கு எழுத வராது என்பது அல்ல. கட்டுரை எழுதி எழுதி படிப்பை கெடுத்து கொள்ளாதே என்று பொருள் தான் அதற்கு. அண்ணா சொன்ன அத்தகைய கருத்துகளில் பின்பற்றாத கருத்து நான் கேட்காத அறிவுரை அது ஒன்று தான்.
அதன் விளைவுகளை பிறகு உணர்ந்தேன் என்றாலும் கூட பெரியார் கல்லூரியில் படித்தேன். அங்கு படித்த பிறகு வேறு எந்த கல்லூரியில் படித்தால் என்ன? படிக்காமல் இருந்தால் என்ன? எனக்கு அளிக்கப்பட்ட விருதுகளுக்கு உள்ள பெருமைகளை எல்லாம் பேராசிரியர் எழுதி படித்தார்.
அதை அவரே எழுதி இங்கு படித்தபோது ஏற்பட்ட உணர்ச்சி உத்வேகம், மெய் சிலிப்பு வர்ணிக்க முடியாது ஏனென்றால் அண்ணா நூற்றாண்டு விழாவில் எஞ்சியிருக்கும் மூத்த தலைவர் நாங்கள் இரண்டு பேர் தான். மற்றவர்கள் எல்லாம் காலமாகி விட்டனர். எங்களை இன்னும் காலம் அழைக்கவில்லை. உங்களுக்காக பணியாற்ற விட்டு வைத்து இருக்கிறது.
கண்கலங்கினேன்…
அதனால் தான் பேராசிரியர் எழுதி உணர்வோடு தூய்மையான எண்ணத்தோடு வாசித்த போது நான் கண் கலங்கினேன். மெய் சிலிர்த்து போனேன். எப்படி இங்கு நன்றி கூறி பேசுவது என்ற திண்டாட்டத்திற்கு கூட ஆளானேன். உங்களை எல்லாம் ஏமாற்றக்கூடாது என்று தான் இவ்வளவு நேரம் பேசினேன். இன்னும் பேச வேண்டும். எனக்கும் ஆசை இருக்கிறது. ஆனால் இந்த விருது பெற எனக்கு இருக்கும் தகுதி என்ன? நீங்கள் தந்த தகுதி தான். பெரியார் தந்த தகுதி, அண்ணா தந்த தகுதி தான். எப்படி அண்ணாவின் இதயத்தை இரவலாக பெற்றேனோ அதை போல அந்த தகுதியை பெற்று தான் இந்த விருதை பெற்று இருக்கிறேன்.
சர்வாதிகாரியல்ல…
இங்கு பேசிய பலர் என்னை பாராட்டினார்கள். நீங்களும் அதை ஏற்றுக்கொண்டு அதை வாழ்த்தி இருக்கிறீர்கள். நீங்கள் ஒவ்வொரு முறையும் என்னை வாழ்க வாழ்க என்று சொல்லும் போது நான் அண்ணாவை தான், பெரியாரை தான் நினைத்துக்கொள்கிறேன்.
நான் ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவன். நான் இப்போது அதிகாரம் பெற்றிருந்தாலும், என்னை சர்வாதிகாரியாக எண்ணிக்கொள்ள மாட்டேன். இந்த பதவி, இந்த வாய்ப்பை வைத்து மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை தான் நான் செய்துகொண்டு இருக்கிறேன். இது இளமையில் ஏற்பட்ட உணர்வு. 86 வயதிலும் அதே உணர்வு தான் உள்ளது
இன்னும் என்ன சுருட்ட தமிழாராச்சி மகாநாடு ? கருணையே இல்லாத காட்டுமிராண்டி கருணாநிதி
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக சிறிலங்க அரசு நடத்திய இனப் படுகொலைப் போரில் தங்களின் குடும்பம், இல்லம், சொந்தங்கள், சொத்துப் பத்துகள், நிலம், தொழில் என்று அனைத்தையும் இழந்து, எந்த வன்னி மண்ணில் ஒராண்டுக்கு முன்னர் வரை வளமாக வாழ்ந்தனரோ அதே பூமியில் இன்று முகாம்களில் அடைப்பட்டுக் கிடக்கும் ஈழத் தமிழர்கள் அனுபவித்துவரும் கொடுமைகள், எங்கே அவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்டுவிடுவரோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இறுதிப் போரில் சிறிலங்க இராணுவமும், விமானப் படையும் நடத்திய கொடூரத் தாக்குதலி்ல் உயிரிழந்த பல பத்தாயிரக்கணக்கான மக்கள் போக, குண்டடிபட்டு, கை, கால் இழந்து, மருத்துவ சிகிச்சை ஏதுமின்றி, சிங்கள இராணுவத்திடம் சிக்கிய சற்றேறக்குறைய 3 இலட்சம் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள 33 முகாம்களில் கடந்த வாரத்தில் பெய்த அடை மழையால் ஏற்பட்ட வெள்ளம் அவர்களை பெரும் அவதிக்கு ஆளாக்கியுள்ளது .
எங்கு பார்த்தாலும் தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது. பல இடங்களில் இடுப்பளவிற்கு நீர் பெருக்கு, எங்கும் தண்ணீர் சூழ்ந்ததால், அங்கு பூமியில் குழி வெட்டி ஏற்படுத்தப்பட்ட கழிவுக் குழிகள் சிதைந்து அதில் தேங்கியிருந்த கழிவுகள் வெள்ள நீருடன் கலந்து சுற்றுச் சூழலை கெடுத்துள்ளது, சமைக்க அளிக்கப்பட்ட விரகுகள் மழையில் நனைந்து ஈரமானதால் கொடுத்த கொஞ்ச நஞ்ச உணவுகளை சமைத்து உண்ண வழியில்லை, மழையால் அந்தச் செம்மண் பூமி சேறானதால் அந்தப் பகுதிக்கு வாகனங்களில் தூய குடி நீர் கூட கிடைக்காமல் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள இம்மக்கள் நரக வேதனையில் தள்ளப்பட்டுள்ளார்கள் என்று வந்த வந்துக் கொண்டிருக்கும் செய்திகள் கவலையை ஏற்படுத்தியுள்ளன.
இப்படிப்பட்ட நிலை ஏற்படும் என்றும், வட கிழக்கு பருவமழை பொழியும் காலத்தில் தாழ்வான பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த முகாம்களில் வெள்ள நீர் தேங்கும் நிலை ஏற்படும் என்றும், அதன் காரணமாக, ஏற்கனவே மோசமான சுகாதார சூழல் உள்ள அப்பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்படும் என்று அந்த முகாம்களுக்கு சென்று வந்தவர்கள் அபாய எச்சரிக்கை விடுத்தனர்.
பாதுகாப்பு வலயப் பகுதியில் தஞ்சமடைந்துள்ள முன்றரை இலட்சம் மக்களைக் காப்பாற்றுங்கள் என்று உலக நாடுகளுக்கு புலம் பெயர்ந்த தமிழர்களும், மனித உரிமை அமைப்புகளும் அபாய அறிவிக்கை செய்தும் போரை நிறுத்தி மக்களைக் காக்க எந்த நடவடிக்கையும் உலக நாடுகளும் ஐ.நா.வும் எடுக்காததால் இறுதிக் கட்டப் போரில் ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான மக்கள் சிறிலங்கப் படைகளால் கொல்லப்பட்டது மட்டுமின்றி, அந்த அடையாளங்களும் அழிக்கப்பட்டுவிட்டன. இந்த நிலையில், மிகக் கொடுமையான சூழலில், போதுமான அடிப்படைத் தேவைகளும், வசதிகளும் இல்லாத முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை இயற்கையால் ஏற்படும் அந்த ஆபத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று மனித உரிமை கருத்தரங்குகளில் பேசப்பட்டும், அதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்ட சூழலில், சற்றும் எதிர்பாராத வகையில் திடீரென்று மழை பெய்து அவர்களின் துயரத்தைப் பண்மடங்காகியுள்ளது.
போர் முடிந்துவிட்டது, விடுதலைப் புலிகளை முற்றிலுமாக அழித்துவிட்டோம், இதற்கு மேல் அவர்களால் துளிர் விட முடியாது என்று கொழும்புவில் இருந்து கொண்டு வீர வசனம் பேசிம் சிறிலங்க அரச தலைவர்கள், முகாம்களில் அடைக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான எந்த வசதியையும் ஏற்படுத்தித் தரவில்லை. அதற்கான நிதிப் பலமும் சிறிலங்க அரசிற்கு இல்லை.
ஈழத் தமிழர்களை அழித்தொழிக்க உலக நாடுகளிடமும், பன்னாட்டு நிதி அமைப்புகளிடமும் வாங்கிய கடன்கள் அனைத்தையும் இராணுவத்திற்கு செலவிட்டுவிட்டு, போரில் இறந்து போன இராணுவ வீரர்களுக்கு அளிக்க வேண்டிய மாத ஊதியத்தைக் கூட தர வக்கற்ற நிலையில், இறந்த போன வீரர்கள் பல்லாயிரக்கணக்கானோரை காணாமல் போனவர்கள் பட்டியலில் வைத்து சிங்கள மக்களை ஏமாற்றிவரும் சிறிலங்க அரசு, முகாம்களில் உள்ள மக்களை ஐ.நா.வின் அகதிகள் அமைப்பிடம் ஒப்படைக்காமல், தனது கட்டுப்பாட்டிலேயே வைத்து விசாரணை என்ற பெயரில் அவர்களைப் பிரித்து, துன்புறுத்தி கொன்று வருகிறது. இதனை உலகம் அறிந்து கொள்ளாமல் தடுக்க முகாம்களுக்கு பத்திரிக்கையாளர்களை அனுபதிக்க மறுத்து வருகிறது. அதன் இப்படிப்பட்ட நடவடிக்கைகளுக்கு இந்தியா, சீனா போன்ற தெற்காசிய வல்லரசுகள் துணை போய்க்கொண்டிருக்கின்றன.
முகாமிலுள்ள மக்களை தங்களிடம் ஒப்படைக்காத நிலையிலும், அவர்களுக்குத் தேவையான இருப்பிட வசதிகளை (கூடாரங்கள், சமையல் பாத்திரங்கள் போன்றவற்றை) ஐ.நா.வின் அகதிகள் அமைப்புதான் வழங்கி வருகிறது. இந்த மூன்று இலட்சம் மக்களுக்கும் தேவையான உணவும் ஐ.நா.வின் உலக உணவும் திட்டத்தின் கீழ்தான் வழங்கப்படுகிறது. ஆனால் அவர்களை நேரடியாக அம்மக்களிடம் விநியோகிக்க அனுமதிக்காமல், சிறிலங்க இராணுவமே பெற்றுக் கொண்டு விநியோகித்து வருகிறது (ஐ.நா.வின் இந்தத் திட்டத்திற்கும் போதுமான நிதி உலக நாடுகள் இடமிருந்து வராததால், தங்கள் திட்டத்தின் கீழ் வழங்கிவரும் உணவு அளவை பாதியாகக் குறைக்கும் நிலை ஏறபட்டுள்ளது என்று இவ்வமைப்பு கூறியுள்ளது). உண்மை இவ்வாறிக்க, மழையினால் முகாம்களில் உள்ள மக்களுக்கு ஏற்பட்டுள்ள அவதிகளுக்கு ஐ.நா.தான் காரணம் என்று கூசாமல் கூறியுள்ளார் சிறிலங்க பாதுகாப்புத் துறைச் செயலர் கோத்தபய ராஜபக்ச! “தமிழர்கள் எங்கள் மக்கள், அவர்களை எப்படிப் பாதுகாப்பது என்று எங்களுக்குத் தெரியும், இப்போதே அவர்கள் வாழ்ந்த இடங்களில் குடியமர்த்த முற்பட்டால் அங்கு புதைத்து வைக்கப்பட்டிருக்கும் கண்ணி வெடிகளில் சிக்கி அவர்கள் உயிரிழக்க நேர்ந்தால் யார் பொறுப்பு? நாங்களல்லவா?” என்று கருணைக் கடலாகப் பேட்டி அளித்துவிட்டு, அவர்களைக் காப்பாற்ற வக்கற்று, எல்லாவற்றையும் ஐ.நா.தான் செய்கிறது, எனவே அவர்களே பொறுப்பு என்று கூறுவது எவ்வளவு வெட்கம் கொட்டப் பேச்சு. ஆனால் வெட்கம், கருணை, மனிதாபிமானம் என்பதெல்லாம் இந்த பெளத்த - சிங்கள இனவெறியாளர்களிடம் தேடினால் எங்கிருந்து கிடைக்கும்!
மூன்று இலட்சம் மக்களுக்கு ஒரு வேளை உணவு மட்டுமே கொடுத்துவிட்டு, குடிக்க தண்ணீர் பெறவும், கழிவறைக்கு செல்வதற்காகவும் அவர்களை நாள் முழுவதும் வரிசையில் நிற்க வைத்து நாளும் அலைக்கழித்துவரும் இந்த வெறியர் இன்று கூறுகிறார் ‘அவர்களிடையே பதுங்கியுள்ள புலிகளைத் தேடுகிறோம், எல்லா புலிகளையும் தேடி கண்டு பிடிக்கும் வரை மீள் குடியமர்த்த முடியாது. அவர்களை இப்போதே வெளியில் விட்டால் வன்னிக் காடுகளில் புதைத்து வைத்துள்ள ஆயுதங்களை எடுத்து மீண்டு்ம் போரைத் துவக்கி விடுவார்கள்’.
“விடுதலைப் புலிகளே இல்லை, எல்லோரையும் ஒழித்துவிட்டோம். புலிகளின் படியி்ல் இருந்து தமிழர்களை மீட்டு விட்டோம்” என்று சிங்களப் படைத் தளபதி சரத் பொன்சேகாவும், நாடாளுமன்றத்தில் ராஜபக்சவும் வீராவேசத்தோடு முழங்கினார்களே? இப்போது மீண்டும் புலிகளைத் தேடுவது எதற்கு?
கோத்தபய கூறியதில் இருந்து ஒரு உண்மை வெளிவந்துள்ளது. முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள மக்களில் இருந்த பல ஆயிரக்கணக்கான (24,000 பேர் என்று கூறுகிறார்கள்) இளம் வயதினரை தனியாக பிரித்து அவர்களைப் புலிகள் என்று முத்திரையிட்டு, சித்தரவதை செய்து வருகின்றனர். அந்தப் பகுதிகளுக்கு யாரையும் நுழைய விடாமல் பலத்த பாதுகாப்பு போட்டுள்ளது சிறிலங்க இராணுவம்.
இவர்கள் மட்டுமின்றி, மேலும் 3,000 இளம் பெண்களை அவர்களின் குடும்பத்தாரிடமிருந்து பிரித்து கடத்தி சென்றுள்ளனர். அவர்களின் கதி என்ன என்பது இன்றுவரை தெரியவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன. மீதமுள்ள மக்களையும் நாளுக்கு ஒரு வேளை உணவு மட்டுமே கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக கொல்கின்றனர். இப்படிப்பட்ட வதைகளையெல்லாம் இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியின் நாஜி முகாம்களில் நடத்தப்பட்டதை வரலாறு படித்தவர்கள் அறிந்திருப்பர். அதையே இன்று ஈழத் தமிழர்கள் மீது செயல்படுத்துகிறது சிறிலங்க அரசு.
இதையெல்லாம் இந்தியாவும், சீனாவும், பாகிஸ்தானு்ம் ஏற்றுக் கொள்ளலாம், ஏனென்றால் இந்த மூன்று நாடுகளுமே தமிழினப் படுகொலைக்கு எல்லா விதத்திலும் உதவின. ஆனால் மற்ற உலக நாடுகள் ஏன் மெளனம் சாதிக்கின்றன என்பதுதான் புரியவில்லை.
இறுதிக் கட்டப் போரில் பல பத்தாயிரக்கணக்கான அப்பாவி மக்களை படுகொலை செய்ததை அறிந்து அதிர்ச்சியுற்ற உலக நாடுகள், அதற்காக பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிய உலக நாடுகள், இன்று முகாம்களில் 3 இலட்சம் மக்களை முட்கம்பி வேலிகளுக்குள் சிறைப்படுத்தியிருப்பதை ஏன் கண்டும் காணாமல் இருக்கின்றன. இது மனித உரிமை மீறலில்லையா? தன்னால் காப்பாற்றப்பட வேண்டிய மக்களை முகாம்களில் அடைத்து வைத்து ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே உணவு கொடுத்து கொல்கிறதே சிறிலங்க அரசு, இது அவர்களை காப்பாற்றம் பொறுப்பை திட்டமிட்டே தவிர்க்கும் குற்றம் அல்லவா?
போர் முடிந்துவிட்டது என்று அறிவித்தப் பின்னரும் அப்பகுதிக்கு பத்திரிக்கையாளர்களையும் மற்ற ஊடகங்களையும் அனுமதிக்காததை அம்னெஸ்டி மட்டுமே கண்டிக்கிறதே, ஐ.நா. ஏன் வாய் திறக்கவில்லை? அந்த மக்கள் அனுபவித்துவரும் கொடுமைகளை ஏன் ஐ.நா. பாதுகாப்புப் பேரவை விவாதிக்கவில்லை?
இது மிக ஆபத்தான மெளனம். இந்த மெளனம் இன்னும் சில மாதங்களுக்குத் தொடர்ந்தால் இந்த மூன்று இலட்சம் மக்களும் கொஞ்சம் கொஞ்சமாக சிறிலங்க அரசப் படைகளாலும், அங்கு நிலவும் படுமோசமான சூழலால் ஏற்படப்போகும் தொற்று நோய்களாலும் அழிந்து போவார்கள்.
அப்படி ஒன்று நிகழுமானால், இந்த உலகில் ஐ.நா.வும் (ஏற்கனவே அது ‘கைப்பாவை’ என்று அந்தஸ்த்துடன்தான் உள்ளது), அதன் மனித உரிமை அமைப்புகளும், அதன் அமைவிற்கு அடிப்படையான தார்மீக நெறிமுறைகளுக்கும் எந்த மரியாதையுமின்றி போய்விடும்.
இறுதிக் கட்டப் போரில் கொல்லப்பட்டவர்களை கண்டு கொள்ளாமல் விட்டதுபோல, இன்றுவரை உயிருடன் இருக்கும் இம்மக்களையாவது காத்து தங்கள் தார்மீக கடமைகளை உலக நாடுகள் நிறைவேற்றட்டும்.
இங்குள்ள தலைவர்களும் அங்கு சுமூக நிலை நிலவுகிறது என்று விவரம் தெரியாமல் பேசுவதைத் தவிர்த்துவிட்டு, மனிதாபிமான அடிப்படையிலாவது அவர்களை காப்பாற்றுமாறு குரல் கொடுக்கட்டும்.
Friday, September 25, 2009
சுருட்டல் மன்னன் கருணாநிதி
ஐயா கலைஞர் அவர்களே…
இதோ உங்கள் சொத்து..பட்டியல்..எங்களுக்கு தெரிந்த வரை தனக்கு தானே எழுதிக் கொண்ட நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் பக்கம் 80 ல் கூறியிருப்பதை பார்க்கலாம்.
*1944 ம் ஆண்டு எனக்கும், பத்மாவதிக்கும் திருமணம் நடைபெற்றது. ஓராண்டு காலம் வரையில் வாழ்க்கையின் சுவைபடலம் பேரானந்தமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. எனக்கு நிரந்தர வேலை எதுவும் இல்லை. இதனால், மனஅமைதி குறைய தலைப்பட்டது. இப்படியே வேலை இல்லாமல் திரிந்து கொண்டிருந்தால், வாழும் காலம் எப்படி போய் முடிவது? என்ற கேள்விகள் எல்லா பக்கங்களிலிருந்தும் கிளம்பின. ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் வேலை தேடி அலைந்தேன். வாழ்வதற்கு என்ன வழி என்று தீவிரமாக யோசிக்க தொடங்கினேன். அதன் விளைவு நாடக நடிகனாக ஆனேன்.
இவ்வாறு தனது புத்தகத்தில் எழுதியிருக்கிறார் கருணாநிதி.
கருணாநிதியின்
பக்கம் 81,82 ல்…………..
*விழுப்புரத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தோம். அங்கு அறைகுறையாக உணவு கிடைக்கும். குளிப்பது என்பது அங்கு மிகவும் பெரிய பிரச்சனை. நாங்கள் குடியிருந்த இடத்திலிருந்து குளிக்க வேண்டுமென்றால், 1 கிமீட்டர் தூரமாவது செல்ல வேண்டும். வயலுக்கு தண்ணீர் பாய்ச்சப்படும் இடங்களில் தான் எங்களது குளியல். அந்த குழாய் தான் எங்களுக்கு குற்றால அருவி. குடிநீர் எல்லாம். குளித்து விட்டு வீட்டுக்கு கிளம்புவோம். கடுமையான வெயில் கொளுத்தும். சிறிய துண்டை இடையில் கட்டிக் கொண்டு, துவைத்த சட்டையை தோளில் உலரப் போட்டுக் கொண்டு சவுக்கார சோப்பினால் வெண்மையாக மாற்றப்பட்ட வேட்டியை, இரு கைகளாலும் தலைக்கு மேலே குடை போல பிடித்துக் கொண்டு அதனை உலர வைத்தவாறு வீட்டிற்கு வந்து உலர்ந்த பின் அவற்றை அணிந்து கொண்டு பிற்பகல் உணவிற்கு தவமிருப்போம்.
இதற்கடுத்து, 92,93 ம் பக்கங்களில்…………….
* பெரியாரின் ஈரோட்டு குடியரசு பத்திரிகை அலுவலகத்தில் துணை ஆசிரியராக பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மாதம் சம்பளம் 40 ரூபாய். அதிலும் பிற்பகலும், இரவும் பெரியார் வீட்டில் சாப்பிடுவதற்காக இருபது ரூபாய் பிடித்துக் கொள்வார்கள். காலை, மாலை சிற்றுண்டிக்காக மாதம் 10 ரூபாய் போய் விடும். எனது இதர செலவுகள் ஐந்து ரூபாய். மீதம் 5 ரூபாயை தான் என்னை நம்பி அண்டி வந்த அருமை மனைவி பதமாவதிக்கு மாதந்தோறும் திருவாரூக்கு மணியார்டர் செய்வேன்.
பக்கம் 92,93 ல்…………………………
* பெரிய அளவில் வைத்திய உதவிகளை எனது தந்தையாருக்கு செய்ய வசதியான நிலையில் குடும்பம் இல்லை. என் தந்தை இறந்து விட்டார்.
இப்படி கருணாநிதி எழுதிவைத்துள்ளார்.
இன்றைக்கு கருணாநிதி குடும்பத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
1.கருணாநிதியின் கோபாலபுரம் வீடு
2. முரசொலி மாறனின் வீடு-கோபாலபுரம்
3. கிருஷ்ணன் கோவில் அருகில்-உறவினர்களின் வீடு
4. முரசொலி செல்வம், செல்வி வீடு- கோபாலபுரம் ( கருணாநிதியால் கொடுக்கப்பட்டது)
5. மு.க.முத்து வீடு-கோபாலபுரம்
6. ஸ்வர்ணம் வீடு- கோபாலபுரம்
7. அமிர்தம் வீடு- கோபாலபுரம்
8. எழிலரசி வீடு ( முரசொலி செல்வத்தின் மகள்) -கோபாலபுரம்
9.ஆலிவர் சாலையில் ராஜாத்தி அம்மாள் வீடு
10. மு.க.ஸ்டாலின் வீடு- வேளச்சேரி
11. உதயாநிதி பொழுது போக்கு வீடு- ஸ்னோபவுலிங்- நுங்கம்பாக்கம்
12. உதயநிதி தீம்பார்க்- (மாமல்லபுரம் அருகில்)
13. பில்லியர்ட்ஸ் மையம் ( வேளச்சேரி)
14. கலாநிதி மாறன் வீடு (அடையாறு போட்கிளப் ரோடு)
15. தயாநிதி மாறன் வீடு
16. டிஸ்கோ- குவாலிட்டி இன் அருணா, அமைந்தகரை
17. கொட்டி வாக்கத்தில் மாறனின் பண்ணை வீடு
18. டிஸ்கோ- எத்திராஜ் காலேஜ் எதிரில்
19. டெலிபோன் எக்சேஞ்ச் கட்டிடம் -நீலாங்கரை
20. எம்.எஸ் இன்டஸ்ட்ரீஸ்- ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி போரூர் அருகில்
21. முரசொலி கட்டிடம்- அண்ணாசாலை
22. சுமங்கலி கேபிள் கட்டிடம்- கோடம்பாக்கம் மேம்பாலம்
23. ராஜா அண்ணாமலை புரம் எம். ஆர்.சி நகரில் சன் தொலைக்காட்சிக்காக 32 கிரவுண்ட் நிலம்
25. சன்டிவியின் புதிய அப்-லிங்க் ஸ்டேசன்( கோடம்பாக்கம்)- மாதவன் நாயர் காலணி
26. இந்தியா சிமெண்ட்ஸ் பங்கு, சிமிண்ட் விலையை உயர்த்துவதற்காக
27. கோரமண்டல் சிமிண்ட் ஏற்படுத்தப்பட்டது
28. கூன் ஹுண்டாய்- அம்பத்தூர்- அண்ணாநகர்-அண்ணாசாலை
29. அந்தமான் தீவின் நிலங்கள்
30.அஸ்ஸாம் மாநிலத்தில் டீ, காபி தோட்டங்கள்
31. அம்பானியின் உரத்தொழிற்சாலையில் பங்கு
32. மேற்குவங்காளத்தில் தோல் தொழிற்சாலை
33. ஸ்டெர்லிங் சிவசங்கரனுடன் கூட்டு தொழில்
34. ஆந்திரா பார்டர் சிமெண்ட் ஏற்படுத்தப்பட்டது
35. பெண்டோபர் நிறுவனத்துடன் கூட்டு
36. கேரளாவில் மாமன், மாப்பிள்ளை நிறுவனத்துடன் காப்பி, மற்றும் ரப்பர் தோட்டங்கள்
37. செல்வம் வீடு
38. முக.ஸ்டாலின் சொத்துக்கள்
39. கருணாநிதி சொத்துக்கள்- திருவாரூர், காட்டூர், திருகுவளை.
40.முக.அழகிரி- மதுரை, திண்டுக்கல், கொடைக்கானல், மேலூர் சொத்துக்கள், மதுரை நகரின் வீடியே பார்லர்கள், கடைகள், ஸ்கேன் சென்டர்கள் உள்ளிட்ட பண்ணை வீடுகள்
41. செல்வம் வீடு-பெங்களுர்
42. உதயா டிவி இணைப்பு- பெங்களூர்
43. பூங்சி டிரஸ்ஸஸ்- பீட்டர்ஸ் சாலை
44.முக.தமிழரசன்- ரெயின்போ பிரிண்டர்ஸ், இந்திரா கார்டன்- சென்னை பீட்டர்ஸ் சாலை.
45. முக.தமிழரசன்- அந்தியூரில் உள்ள சொத்துக்கள்
46. தலைப்பாக்கடடு பிரியாணி சென்டர்- தி.நகர், ஜி.என்.செட்டி சாலை, சென்னை.
47. கோவையில் உள்ள டிபார்ட்மெண்டல் ஸ்டோர்
48. மல்லிகா மாறனின் உறவினர்களின் பெயரில் கும்பகோணம், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் சென்னையில் சொத்துக்கள்.
இங்கு அழகிரி, கனிமொழியின் சொத்துக்கள் சேர்க்கப்படவில்லை.
திருவாரூரில் இருந்து கட்டிய வேட்டியும், தோளில் போட்ட துண்டுடன் , சென்னை நகருக்கு கள்ள ரயில் ஏறிவந்த கருணாநிதி குடும்பம் இன்று இந்திய பணக்காரர்கள் பட்டியலில்.
Thursday, September 17, 2009
இறுதி ஐந்து நாட்களில் மட்டும் 20 ஆயிரம் தமிழர்கள் பலி: நேரடி சாட்சி
சிறிலங்கா அரச படையினர் நடத்திய இறுதி வலிந்த தாக்குதல்களின் கடைசி ஐந்து நாட்களில் மட்டும் 20 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ் பொதுமக்கள் உயிரிழந்தனர் என்று போரின் நேரடி சாட்சியான தமிழ்வாணி ஞானகுமார் கூறியுள்ளார்.
பிரித்தானியாவைச் சேர்ந்த இவர், போரின்போது வன்னிக்குள் சிக்கிக்கொண்டிருந்தார். நான்கு மாதங்கள் கழித்து பிரித்தானியா திரும்பியுள்ள அவரை 'த கார்டியன்' நாளேடு நேர்கண்டு வெளியிட்டுள்ளது.
அதன் தமிழ் வடிவம் வருமாறு:
தன் குழந்தையை இறுக்க அணைத்தபடி ஒரு இளம் தாய் வீதியோரமாக நின்றுகொண்டிருக்கிறாள். அந்தக் குழந்தை இறந்துவிட்டது.
அந்தத் தாய் ஒரு முடிவு எடுப்பதற்குத் தவித்துக் கொண்டிருக்கிறார் என்பதை தமிழ்வாணி ஞானகுமார் பார்த்தார். அவர்களைச் சுற்றிலும், வீதியெங்கும் சிதறிக் கிடக்கும் மனித உடலங்களுக்கு மத்தியில் ஆயிரக்கணக்கான மக்கள் தம்மைப் பாதுகாத்துக்கொள்ள ஒரு வழி தேடி நடந்து கொண்டிருக்கிறார்கள்.
"வீதி ஓரமாக ஒரு தாய் தனது குழந்தையை இறுகப்பிடித்தபடி நின்றுகொண்டிருந்தார். குழந்தை இறந்து போயிருந்தது. அந்தக் குழுந்தையை தாயால் எடுத்துவர முடியாது. அதை அப்படியே விட்டுவிட்டு வரவும் அந்தத் தாய் விரும்பவில்லை. என்ன செய்வது என்று அவளுக்குத் தெரியவில்லை. லட்சக்கணக்கான மக்கள் விரைவாக வெளியேறியபடியும் ஒவ்வொருவரையும் வெளியேற்றியபடியும் இருந்த அந்த நிலையில், இறுதியில், வீதியோரமாக அந்தக் குழந்தையைப் போட்டுவிட்டு அவளும் வெளியேறிச் சென்றாள். அந்த உடலத்தை அங்கு விட்டுவிட்டுத்தான் அவள் வரவேண்டியிருந்தது. அவளுக்கு வேறு தெரிவுகள் எதுவும் இல்லை.
"அப்போது நான் சிந்தித்தேன், இந்த மக்கள் என்ன தவறு செய்தார்கள்? ஏன் அவர்கள் இப்படிப்பட்ட துன்பங்களைச் சுமக்கிறார்கள்? அனைத்துலக சமூகம் ஏன் அவர்களுக்காகப் பேச மறுக்கிறது? நான் இப்போதும் அந்தக் கேள்விகளைக் கேட்கிறேன்."
நான்கு மாதங்கள் கழித்து தனது சொந்த இடமான எசெக்ஸ், சிங்போர்ட்டில் உள்ள வீட்டில் குடும்பத்தினருடன் இளமஞ்சள் நிற சொகுசு கதிரையில் அமர்ந்தபடி மிக மோசமான இலங்கையின் இறுதிப் போரின்போது அங்கே நடந்தது என்பதை விபரிக்கிறார்.
அந்த நான்கு மாதங்களும், பிரித்தானியாவின் 25 வயதான அந்த இளம் பட்டதாரி, இலங்கையின் வடக்கில் உள்ள 3 இலட்சம் மக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாமில் முட்கம்பி வேலிகளுக்கு நடுவே தடுத்து வைக்கப்பட்டிருந்தார். கடந்த வாரம் அவர் விடுதலை செய்யப்பட்டிருந்தார். இந்த நாளேட்டுக்கும் அதில் சிறிய பங்கிருக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் லண்டன் திரும்பியிருந்தார்.
இலங்கையின் வடக்கு-கிழக்கில் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த பகுதியில் இருந்த மருத்துவமனைகளில் இருந்து அவர் கடைசியாக வெளி உலகுடன் பேசி இருந்தார். இறுதியில் விடுதலைப் புலிகளை ஒடுங்கிய நிலப் பிரதேசத்திற்குள் நெருக்கிச் சென்ற அரச படையினர், லட்சக்கணக்கான தமிழ் மக்களை அகதிகளாகப் பிடித்துச் சென்றனர். அந்தப் பேரவலத்திற்குள் தமிழ்வாணி இருந்துள்ளார். எறிகணைக் குண்டு மருத்துவமனை மீது வீழ்ந்து வெடித்து பலரைப் பலிவாங்கியது. "அந்தத் தருணம் நரகம் போன்றது" என்கிறார் தமிழ்வாணி.
காயமடைந்தவர்களுக் மருத்துவ உதவிகளையும் போர் நடைபெறும் இடங்களுக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்பது பற்றி அங்கிருந்து அவர் வெளி உலகிற்குத் தகவல்களையும் சொல்லி வந்த, அங்கிருந்த சிறிய மருத்துவக் குழுவில் ஒருவராக தமிழ்வாணி இருந்துள்ளார். அவரைச் சுற்றி ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்துகொண்டிருந்தபோது தனது உயிரை இழக்காமல் தமிழ்வாணி ஒருவாறு பாதுகாத்துக் கொண்டார்.
மண்ணிற்குள் தோண்டப்பட்ட பதுங்கு குழிகளுக்குள் இரவுகளில் காலத்தைக் கழித்துள்ளார். பகல் பொழுதுகளில், இடம்மாறிக் கொண்டிருந்த மருத்துவமனைகளில் பணியாற்றிக் கொண்டிருந்தார். கசாப்புக் கடைக்காரனின் கத்தியைக் கொண்டும் தண்ணீர் கலக்கப்பட்ட மயக்க மருந்தைக் கொண்டு மருத்துவர்கள் சத்திர சிகிச்சை மேற்கொள்ள முயன்று கொண்டிருந்த சமயத்தில், வீழும் எறிகணைகளாலும் குண்டுகளாலும் அங்கு பலர் காயமடைந்தும் இறந்தும் கொண்டிருந்தனர்.
ஏற்பட்ட இழப்புக்கள் குறித்து இப்போது அவர் தெரிவிக்கும் தகவல்கள், பொதுமக்களின் ஒரு துளி இரத்தம் கூடச் சிந்தாமல் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் வெற்றி கொள்ளப்பட்டதாக அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்திருப்பதற்கு எதிரான வலுவான ஆதாரங்களாக இருக்கின்றன.
தமிழ்வாணி 1984 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். அவரும் அவரது குடும்பத்தினரும் 1994 ஆம் ஆண்டில் பிரித்தானியாவிற்கு நகர்ந்தனர். கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் நாள் வரைக்கும் அவர் அங்கு திரும்பிச் சென்றிருக்கவில்லை. கிறீன்விச் பல்கலைக்கழகத்தில் உயிரி மருத்துவ பட்டப் படிப்பை அவர் முடித்திருக்கிறார்.
ஆனாலும், அவரது திருமண வாழ்க்கை இயல்பானதாக அமையவில்லை. அதனால் அதனை முறித்து விடுவதற்கான நேரம் வந்துவிட்டது என அவர் தீர்மானித்தார். தான் எங்கு செல்கிறார் என்ற விபரத்தை யாரிடமும் தெரிவிக்காமல் அவர் வீட்டை விட்டுப் புறப்பட்டார்.
கொழும்பை வந்தடைந்த அவர் அங்கிருந்து புறப்பட்டு தனது உறவினர்களுடன் வசிப்பதற்காக வன்னிக்குச் சென்றார். அவருக்கு ஒரு சகோதரரும் இரு சகோதரிகளும் லண்டனில் இருக்கிறார்கள்.
வன்னியில் ஆபத்துக்கான சில அறிகுறிகள் தெரிந்தன. ஆனாலும் 2008 ஆம் ஆண்டு ஜூலையில்தான் சண்டைகள் மிக மோசமாகின. அரசுடன் பேச்சுக்களை நடத்தலாம் என புலிகள் தொடர்ந்து எண்ணி வந்தனர். அதைத்தான் அவர்கள் கடந்த காலங்களிலும் செய்தனர். ஆனால், புலிகளை அடியோடு அழித்துவிடுவது என்ற திட்டத்தை அரசு கொண்டிருந்தது.
இந்தச் சண்டையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கத்துடன் அங்கேயே தங்கி இருப்பது என தமிழ்வாணி தீர்மானித்தார்.
அரசின் தரைப் படையினர் அவர்களை எட்டுவதற்கு முன்னர் அப்பகுதி முழுவதும் தொடர்ச்சியான வானூர்தி குண்டு வீச்சுக்கள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால், ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் கனரக எறிகனைகளில் ஆக்ரோசமான தாக்குதல்கள் தொடங்கின. அது மக்களை தமது இடங்களைவிட்டு நகரும்படி நிர்ப்பந்தித்தது.
"மழை பெய்துகொண்டிருந்தது. அத்துடன்........ வீதி முழுவதும் தண்ணீருடன் சேர்ந்து இரத்தமும் உடலங்களும் ஆறாய் ஓடியதைப் பார்க்க முடிந்தது. அந்த உடலங்கள் அங்கேயே விட்டுச் செல்லப்பட்டிருந்தன. யார் இறந்தார்கள் யார் உயிரோடு இருக்கிறார்கள் என்பதை யாராலும் அடையாளப்படுத்த முடியவில்லை. உடலங்கள் அத்தனையும் தரையில் அப்படியே அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. முதல் தடவையாக நான் உடலங்களையும் அழுதுகொண்டும் கத்திக்கொண்டும் இருந்த காயப்பட்ட மக்களையும் நான் பார்த்தேன்."
மக்கள் எங்கு நிற்கிறார்களோ அங்கே உடனடியாக ஒரு பதுங்கு குழிகளை உருவாக்கினார்கள். குறைந்தபட்சம் ஒரு மனிதன் நின்றுகொண்டிருக்கக் கூடியளவு மண்ணில் துளை தோண்டிக்கொண்டார்கள். பனை மரங்களை வெட்டி அந்தக் குழிகளின் மேலே அடுக்கினார்கள். அதற்கு மேலேயும் அருகிலேயும் மண் மூட்டைகளை அடுக்கினார்கள்.
அரச படையினர் முன்னேறத் தொடங்கியதும் சுமார் 3 லட்சம் மக்களும் இடம்பெயரவேண்டி ஏற்பட்டது. தமிழ்வாணி அங்கிருந்த மருத்துவமனைக்கு உதவிகள் புரிவதற்காகச் சென்றார். முன்னாள் ஆரம்பப் பாடசாலை ஒன்றிற்கு அது இடம்மாறி இருந்தது. முதலுதவிகளை வழங்குவது மற்றும் காயங்களுக்குக் கட்டுப்போடுவது போன்ற பணிகளில் ஈடுபடுவது அவரது நோக்கமாக இருந்தது.
தமிழ்வாணியின் பட்டப் படிப்பு இதற்கான எதனையும் அவருக்குச் சொல்லிக் கொடுத்திருக்கவில்லை. நேரடியாக அவற்றைச் செய்வதன் மூலமே அவர் அவற்றைக் கற்றுக்கொண்டார். சண்டை கடுமையானதும், அந்த இரண்டு அறைகளை மட்டுமே கொண்ட தற்காலிக மருத்துவமனையில் ஒவ்வொரு நாளும் 500 பேருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
"அவர்களுக்கு மருந்துப் பொருட்களின் பற்றாக்குறை இருந்தது. ஆனால் எப்படியோ அவர்கள் சில உயிர்களைக் காப்பாற்றினார்கள். கடைசி இரண்டு வாரங்களும் அதற்கு மேலும் எல்லாவற்றிற்குமே பற்றாக்குறை இருந்தது."
ஏற்றிய இரத்தமும் சேர்ந்து வெளியேறிக் கொண்டிருக்க, நோயாளியிடம் இருந்து என்ன கிடைக்கிறதோ அதைக் கொண்டு காயத்திற்குக் கட்டுப்போட வேண்டிய நிலையில் அவர் இருந்துள்ளார். அவர்களின் நரம்புகளில் திரும்பவும் இரத்தம் ஏற்றுவதற்கு முன்னர் அவர் அதனைச் செய்ய வேண்டி இருந்தது. மயக்க மருந்து பற்றாக்குறையாகிக் கொண்டிருந்த நிலையில் அதனுடன் சுட்டாறிய தண்ணீரைக் கலந்து கொடுத்தார்கள்.
"ஆறு வயதுச் சிறுவனுக்கு சத்திர சிகிச்சை செய்யும்போது நான் பார்த்தேன். அவர்கள் அவனது ஒரு காலையும் கையையும் எடுக்க வேண்டி இருந்தது. ஆனால் அவர்களிடம் அதற்கான சரியான உபகரணங்கள் இருக்கவில்லை. இறைச்சி வெட்டுவதற்குப் பயன்படும் கத்தி மட்டுமே அவர்களிடம் இருந்தது. அதனைப் பயன்படுத்தி, அந்தச் சிறுவன் கதறக் கதற அவனது காலையும் கையையும் வெட்டி எடுத்தார்கள்.
படையினர் நெருங்கி வந்தபோது நிலைமை இன்னும் மோசமானது.
"எறிகணைக் குண்டுகளிடம் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மக்கள் ஓடினார்கள் ஓடினார்கள் ஓடிக்கொண்டே இருந்தார்கள். ஆனாலும் அவர்களால் முடியவில்லை. ஒரு கட்டத்தில் நாங்கள் எல்லோருமே இறந்துவிடப் போகின்றோம் என்ற எண்ணம் எங்களுக்கு ஏற்பட்டது. தொடர்ந்தும் அங்கு உயிருடன் இருப்பதற்கான வழிகள் ஏதும் இருக்கிவில்லை. நான் இங்கே இப்போது உயிருடன் இருப்பேன் என்று நினைத்திருக்கவே இல்லை. நான் சொல்லிக் கொண்டேன், சரி, நான் சாகப்போகிறேன், இதுதான் இறுதி முடிவு என்று.
"ஒரு நாள் நான் சத்திர சிகிச்சைக் கூடத்திற்குள் இருந்தேன். அடுத்த அறை குண்டுத் தாக்குதலுக்கு உள்ளானது. அந்த அறையில் மருத்துவர்களின் கண்காணிப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல நோயாளிகள் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் அந்தக் குண்டுவீச்சில் இறந்துபோனார்கள். அவர்கள் (அரச படையினர்) மீண்டும் எறிகணைத் தாக்குதல்களை மருத்துவமனை மீது நடத்தினார்கள். இதில் ஒரு மருத்துவர் இறந்துபோனார்."
அந்த மருத்துவமனையில் ஓய்வு ஒழிச்சலே இருக்கவில்லை. தனது குழந்தையை அணைத்தபடி காயமடைந்த நிலையில் கொண்டு வரப்பட்ட ஒரு தாயை தமிழ்வாணியால் என்றுமே மறக்கமுடியாது.
"தனது குழந்தையை அவர் மடியில் வைத்திருந்தார். அந்தக் குழந்தை இறந்திருந்தது. ஆனால் அந்தத் தாய்க்கு அது தெரியாது. குழந்தை இறந்தது பற்றி இப்போது அவரிடம் சொல்ல வேண்டாம், ஏனெனில் விடயம் தெரிந்தால் தாய் அழுது, கூப்பாடு போடுவார் அத்துடன்.... நாங்கள் அந்தத் தாயை முதலில் காப்பாற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் சொன்னார்கள். அதனால் நாங்கள் அந்தத் தாயிடம் கூறினோம், சரி நீங்கள் உங்கள் குழந்தையை எங்களிடம் தாருங்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் சென்று மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ளுங்கள் என்று. சிகிச்சை முடிந்த பின்னரே அவரிடம் நாங்கள் குழந்தை இறந்துபோய் விட்டது என்ற உண்மையைச் சொன்னோம். என்னால் இப்போது இலகுவாகச் சொல்லிவிட முடிகின்றது. ஆனால், அந்தத் தருணத்தில் நான் பெரும் வேதனையை அனுபவித்தேன். அது ஒரு அப்பாவிக் குழந்தை. அது இறந்தது கூடத் தெரியாத தாய். குழந்தை தூங்கிக் கொண்டிருக்கிறது என நினைத்துக் கொண்டிருந்தாள் அந்தத் தாய்."
"இது போன்ற பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன. ஒரு சமயம் தாய் இறந்து போயிருந்தார். அது தெரியாமலேயே அவரது குழந்தை அவர் மார்பில் பால் குடித்துக் கொண்டிருந்தது."
சண்டை இன்னும் இன்னும் நெருக்கமாக வந்தபோது, கைகளில் என்ன கிடைத்ததோ அவற்றையே அவர்கள் உண்டார்கள். தூங்க முடிந்தவர்கள் கிடைத்த இடங்களில் தூங்கினார்கள்.
"எப்போதும் ஓடுவதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும். நீங்கள் ஓய்வாக இருந்து தூங்குவதற்குச் செல்ல முடியாது. எந்த நிமிடத்திலும் அந்த இடத்தைவிட்டு அகல்வதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும்."
மே மாதம் 13 ஆம் நாள் மருத்துவமனை குண்டுத் தாக்குதல்களுக்கு உள்ளானபோது அங்கிருந்த 50 பேர் கொல்லப்பட்டனர். அதன் பின்னர் தமிழ்வாணிக்கு அங்கு வேலை இருக்கவில்லை.
"எங்களுடைய பதுங்குகுழிக்கு அடுத்ததாக இருந்த குழியின் மீது குண்டுகள் வீழ்ந்து வெடித்தன. அதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்தனர். மூன்று பேர் காயமடைந்தனர்.
"நான் அவர்களைப் பார்த்தேன்.......... திடீரென மக்கள் கதறி அழும் சத்தம் கேட்டது. நான் நினைத்தேன் இது எங்கோ எமக்கு மிக அருகில் என்று. ஆனால் நான் அந்த இடத்தை கற்பனை பண்ணிக்கூடப் பார்க்கவில்லை. அந்த இடம் முழுவதும் இரத்தக் கறையாகக் கிடந்தது. உடலங்கள் எல்லா இடங்களிலும் துண்டுதுண்டாகச் சிதறிக் கிடந்தன. என்னுடைய சகோதரன் சொன்னான், எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு இந்த இடத்தைவிட்டு நாங்கள் உடனடியாக விலகிச் செல்ல வேண்டும் என்று."
கடைசி ஐந்து நாட்களில் மட்டும் சுமார் 20 ஆயிரம் பேர் இறந்திருக்கலாம் என தமிழ்வாணி கூறுகின்றனர். ஆனால், உயிரிழந்தவர்களின் உண்மையான, சரியான எண்ணிக்கையைக் கணக்கிட முடியாது என ஐக்கிய நாடுகள் சபை கூறுகின்றது. ஆனால், சாட்சிகளிடம் இருந்து தாம் பெற்றுக்கொண்ட கணக்குகளின்படி தமிழ்வாணி கூறுவது சரியானதுதான் எனத் தெரிவிக்கிறது உலகத் தமிழர் பேரவை.
கடைசி குண்டுத் தாக்குதல்களின் பின்னர், படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்த லட்சக்கணக்கான மக்களுடன் சேர்ந்து தமிழ்வாணியும் வந்திருந்தார். அவர் உடனடியாக அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டார்.
"நாங்கள் நகர்வதற்கு தொடங்கினோம். சுமார் ஒரு மணிநேரம் அல்லது அதற்கும் மேல் நடந்ததன் பின்னர் சிறிலங்காப் படையினரை நாங்கள் கண்டோம். வாருங்கள், நீங்கள் இப்போது பாதுகாப்பாக இருக்கிறீர்கள், உங்களுக்கு உணவும் தண்ணீரும் தரப்படும் என்று அவர்கள் சொன்னார்கள். எங்கும் உடலங்கள் சிதறிக் கிடந்தன. துண்டு துண்டுகளாகவும் சிதறிக் கிடந்தன. அவற்றுக் நடுவே நாங்கள் நடந்து வந்தோம். அங்கேதான் தனது இறந்துபோன குழந்தையை என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து நின்ற தாயை தமிழ்வாணி கண்டார்.
உடலங்களை அடக்கம் செய்வதற்கு எவருக்கும் நேரம் இருக்கவில்லை. சிலர் அவற்றை பதுங்கு குழிகளுக்குள் தள்ளிவிட்டு அதன் மேல் கொஞ்சம் மண்ணை அள்ளிப் போட்டு மறைத்தார்கள். அதுதான் அவர்களால் செய்ய முடிந்த மிகச் சிறந்த விடயமாக அப்போது இருந்தது.
அந்த இரவு அவர்கள் அனைவரும் பாடசாலை ஒன்றில் தூங்கினார்கள். அதன் பின்னர் பேருந்துகளில் வவுனியா நகரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கிருந்து அவரது தாயாருடன் பேசினார். "என்னை இங்கிருந்து வெளியே எடுங்கள் அம்மா என்று நான் சொன்னேன். அந்த இடத்தைவிட்டு வெளியேறிவிடவேண்டும் என்றிருந்தது எனக்கு. அத்துடன் என் தொலைபேசி தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது."
படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் தமிழ்வாணி வந்த முதல் நாளில் எந்த உணவும் அவர்களுக்குக் கிடையாது. அத்துடன் அவருடன் இருந்தவர்களின் தொடர்புகளையும் அவர் இழந்துவிட்டிருந்தார். மேலும் பலருடன் சேர்ந்து ஒரு கூடாரத்திற்குள் அவர் உறங்கினார்.
போர்ப் பகுதிகளைவிட்டு பிரிந்து முகாம்களுக்கு வந்தால் அதன் நிலைமை அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.
"நீங்கள் எங்கே போனாலும் அங்கு பெரியதொரு வரிசை நின்று கொண்டிருக்கும். உங்களுக்கு என்ன வேண்டும் என்றாலும் வரிசையில் நின்றாக வேண்டும். அது எவ்வளவு அருவருப்பாக இருந்தது என்பதை என்னால் விளக்க முடியவில்லை. எங்கு பார்த்தாலும் நுளம்பும் சுகாதாரமற்ற நிலையும்..... மக்களுக்கு எல்லா வகையான வருத்தங்களும் வந்தன.
"மக்கள் தமது சொந்தங்களை இழந்தனர்...... பலர் குடும்பங்களில் இருந்து பிரித்தெடுத்துச் செல்லப்பட்டனர்...... அத்துடன் மக்கள் மிகச் சோர்வடைந்தார்கள்."
கொலைகளும் பாலியல் வன்புணர்ச்சிகளும் அங்கு நிகழத் தொடங்கின. மக்கள் காணாமல் போனார்கள். சிலர் தற்கொலை செய்துகொண்டார்கள். ஒரு ஆசிரியை மரத்தில் தூக்குப்போட்டுத் தொங்கிக் கொண்டிருந்தபடி கண்டுபிடிக்கப்பட்டார்.
படைத்துறை புலனாய்வாளர்கள் முகாம்களைச் சுற்றிச் சுற்றி வந்தார்கள். முன்னாள் போராளிகளைக் கண்டறிவதற்காக.
"அது ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலை. நீங்கள் சுதந்திரமாக நடக்கலாம். ஆனால் சிறைகளுக்கு உள்ளேயே நீங்கள் இருக்கிறீர்கள். அதை விட்டு வெளியே செல்ல நீங்கள் அனுமதிக்கப்பட மாட்டீர்கள். உங்களால் முடியாது. காவலர்கள் எல்லா இடங்களிலும் நின்றிருப்பார்கள். அத்துடன் சோதனை நிலையங்களும் இருக்கும்."
தமிழ்வாணி முகாமுக்கு வந்து சில நாட்கள் கழித்து அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபைக்கான தூதரகம் ஊடாக பிரித்தானிய தூதரகம் அவரைத் தொடர்பு கொண்டது. அவரது பெற்றோரும் 'த கார்டியன்' நாளேடும் மேற்கொண்ட நடவடிக்கைகளை அடுத்து இது நிகழ்ந்தது.
அதன் பின்னர் அவர் சன நெரிசலால் தவித்த, மெனிக் முகாமின் இரண்டாம் வட்டாரத்தில் இருந்து முதலாம் வட்டாரத்திற்கு மாற்றப்பட்டார். இந்தப் பகுதியே வெளியிருந்து வருகை தருபவர்களுக்கு அரசால் காண்பிக்கப்படும் பகுதி.
"ஐக்கிய நாடுகள் சபைக்கான பொதுச் செயலாளர் பான் கீ மூன் அங்கு வரும்போது நான் அங்கே இருந்தேன். அவர் அங்கே ஒரு 10 நிமிடங்கள்தான் இருந்திருப்பார். உடனடியாகவே திரும்பிச் சென்றுவிட்டார். முகாமுக்குள் அவர் ஏன் செல்லவில்லை? ஏன் மக்களைச் சந்தித்து கொஞ்ச நேரத்தைச் செலவிட்டு அவர்களின் பிரச்சினைகள் என்னவென்று கேட்கவில்லை? நான் நினைக்கிறேன் அவருக்கு அந்தப் பொறுப்பு இருந்தது என்று. அத்துடன், மக்களும் அவரிடம் இருந்து சிலவற்றை எதிர்பார்த்தார்கள். அவர்கள் அவரிடம் இருந்து நிறையவே எதிர்பார்த்தார்கள். ஆனால், அவர் 10 நிமிடங்கள் மட்டுமே அங்கு இருந்தார். அவ்வளவுதான்."
தமிழ்வாணி சில நாட்கள் முகாமில் தங்கி இருக்க வேண்டும் என்றும் அதன் பின்னர் அவர் விடுவிக்கப்படுவார் என்றும் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். "அதன் பின்னர் 48 மணிநேரம் மூன்று நாட்களாக மாறியது. பின்னர் வாரங்களாக மாதங்களாக அது மாறியது. அப்போது நான் நினைத்தேன், சரி இனி இது நடக்கப் போவதில்லை என்று." அவர் அங்கு என்ன செய்து கொண்டிருந்தார் என்பது பற்றியும் மருத்துவமனையில் என்ன செய்துகொண்டிருந்தார் என்பது பற்றியும் ஐந்து தடவைகள் அவர் அதிகாரிகளால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
கடந்த வாரத்தில் அவரை அழைத்த அதிகாரிகள் அவர் வீட்டிற்குச் செல்லாம் எனத் தெரிவித்திருந்தனர். அரச தலைவரின் சகோதரர் பசில் ராஜபக்சவைச் சந்திப்பதற்காக அவர் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
"சரி, இந்த நாட்டில் பல்வேறு விடயங்களுக்கு மத்தியில் நீர் பயணித்து வந்திருக்கிறீர். இப்போது நீர் விடுதலை செய்யப்படுகிறீர், நீர் சென்று உம்முடைய குடும்பத்துடன் இணைந்து கொள்ளலாம். மகிழ்ச்சியாக இருக்கலாம். அதற்காக அவர் மன்னிப்பு எதுவும் கேட்கவில்லை." அதன் பின்னர் அவர் பிரித்தானிய தூதரக அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டார்.
நடந்த விபரங்கள் பற்றி அவர் பேசும் விதம் சில சமயங்களில் அவரது உணர்வுகளைக் காட்டிக்கொடுக்கிறது. அவரது முடி பின்புறமாக இறுக்கக் கட்டப்பட்டுள்ளது. பிரித்தானியாவை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் மிக அழகான முடியை அவர் கொண்டிருந்தார். ஆனால் அவையெல்லாம் முகாம் வாழ்க்கையில் இழக்கப்பட்டு விட்டதாக அவர் கூறுகின்றார். இப்போது என்ன செய்வது என்பது தொடர்பில் நிச்சயமில்லாத நிலையில் அவர் இருக்கிறார். அனேகமாக மருத்துவத் துறையில் ஏதாவது செய்யக்கூடும்.
"மக்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்ய முடிந்தது குறித்து நான் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகின்றேன். நான் பிரித்தானியாவில் இருக்கின்றேன் என்பது உண்மையல்ல என்று இப்போதும் எண்ணிக்கொண்டிருக்கிறேன்....... நான் உயிருடன் இருப்பேன் என்றோ பிரித்தானியாவுக்குத் திரும்பி வருவேன் என்றோ நான் எண்ணி இருக்கவே இல்லை. முகாமில் இருக்கும்போது கூட அப்படி எண்ணவில்லை.
Subscribe to:
Posts (Atom)