ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Thursday, July 30, 2009


பதவிக்காகப் "பிச்சை" ஏந்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு


தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டது என்பதற்கப்பால் அதற்கும் சிங்களப் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய பிரதிநிதிகளுக்கும் வேறு வேறுபாடு கிடையாது. தமிழ் மக்களுக்காக "பாடுபட்டு" ஒன்றையும் சாதித்ததும் இல்லை. அதனைத் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று கூட யாரும் அங்கீகரித்ததும் இல்லை. அப்போது தமிழ் மக்களின் அரசியல் சமூக வாழ்க்கையில் இவர்களின் பங்களிப்பு தான் என்ன?

எவ்வகையில் தேடிப்பார்த்தாலும் கிடைப்பது என்னவோ பூச்சியம் தான். இவர்களால் சாதிக்கப்பட்டதும் சாதிக்கக் கூடியதும் எதுவுமேயில்லை. மாறாக சிங்களை பேரினவாதிகளின் அத்தனை அடக்கு முறைகளையும் மூடி மறைக்கும் ஜனநாயக விளையாட்டிற்கும் விளம்பரத்திற்கும் மறை முகமாக உதவி செய்தார்கள்,செய்துகொண்டிருக்கின்றார்கள். சிறிலங்காவில் இத்தனை காட்டுமிராண்டித் தனமான படுகொலைகளும் அராஜகங்களும் நிகழ்ந்து விட்ட பின்னரும் உலக நாடுகளை ஏமாற்றும் ஜனநாயக கண்கட்டி விளையாட்டில் சிங்கள அரசைத் தூக்கிப்பிடிக்கும் அபாயகரமான தமிழினத் துரோகிகளாகவே இவர்கள் நடந்து கொண்டிருக்கின்றார்கள்.

வெளிப்படையான துரோக முத்திரையுடன் சிங்களப் பாசிச அரசுடன் இணைந்து இயங்கிக் கொண்டிருக்கும் ஈபிடிபி டக்ளஸ், பிள்ளையான்,கருணா போன்றவர்களையும் அவர்களின் நடவடிக்கைகளையும் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவ நடவடிக்கையாகப் பார்க்க சர்வதேச சமூகம் ஒன்றும் முட்டாள்களாலானது அல்ல. தமிழ் மக்கள் விரோத சந்தர்ப்பவாத சக்திகளாகவே அவர்களை வகைப்படுத்தி வைத்திருக்கின்றது. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்னும் தெரிவு வரும் போது ஓரளவிற்கேனும் தமிழ் மக்கள் சார்பு பிரதிநிதித்துவமாகவே பார்க்கப்படும் சாத்தியம் உண்டு.

இந்த சாத்தியம் பற்றித் தெரிந்திருப்பதாலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறிலங்கா அரசு நடாத்தும் எந்தத் தேர்தலிலும் பங்களிப்பது என்பது பாதிக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களுக்கான துரோகமாகின்றது.ஜனநாயகம் மறுக்கப்பட்ட இன அழிப்பு அராஜகம் நிகழ்த்தப்பட்ட ஒரு இனத்தின் பேரால் அத்தகைய கொடுமையை நிகழ்த்திய ஒரு அரசுடன் இணைந்து போவதென்பது வரலாற்றுத் துரோகமாகின்றது.

சந்தர்ப்பவசத்தால் இவர்கள் நடக்கவிருக்கும் தேர்தல்களில் வெற்றி பெற்றாலும் சாதிக்கப் போவது எதுவுமில்லை. முள்ளிவாய்க்காலிலும் வன்னியிலும் நடந்து முடிந்த பெரும் இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்த இவர்களின் பாராளுமன்றப்பிரதிநிதிகளாலேயே ஒரு துரும்பத்தானும் எடுத்துப் போட முடியவில்லை. இவர்களின் சொல்லை யாரும் சட்டை செய்யாத இழிநிலையில் தான் சிங்களப் பேரினவாதத்தின் "ஜனநாயகம்" செயற்படுகின்றது. இதை இவர்களும் தீர்க்கமாக அறிந்து வைத்திருக்கின்றனர்.

புதுடில்லிக்கான இவர்களின் படையெடுப்பிலும் தோல்வியுடனேயே இவர்கள் திரும்பியிருந்தனர்.அதாவது ஜனநாயகம் மறுக்கப்பட்ட ஒரு சூழ் நிலையில் இவர்களின் சிறிலங்கா அரசு சார்ந்த பிரதிநிதித்துவம் சிறிலங்கா இனவாத அரசின் படு பாதக காட்டுமிராண்டிச் செயல்களை மறைக்கும் முயற்சிகளில் துணை போவதைத் தவிர்த்து தமிழ் மக்களுக்காகச் செய்யக் கூடியது எதுவுமேயில்லை.

ஆனால் தேர்தலைப் பகிரங்கமாகப் பகிஸ்கரிப்பதன் மூலம் சிறிலங்கா ஜனநாயகத்தில் தமிழர்களை இணைத்துக் கொள்ள "அவசர ஜனநாயக" வேலைத்திட்டங்கள் அவசியம் என்பதை சர்வதேச சமூகம் உணர்ந்து கொள்வதுடன் அதற்கு வேண்டிய இறுக்கத்தை சிறிலங்கா அரசு மீது பிரயோகிக்கும் என்பதையும் இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

புலிகள் அழிக்கப்பட்ட நிலையில் தமிழ் மக்களுக்கான காத்திரமான ஜனநாயகக் கட்டமைப்புகளை நிறுவ வேண்டும் என்பதில் சர்வதேச சமூகம் உறுதியுடன் இருக்கின்றது. இதை உடைக்கும் நோக்கிலேயே சிறிலங்கா சிங்களத் தேசியவாத அரசு "ஜனநாயக விளையாட்டாக" மாவட்ட, மாகாண. பிரதேச சபைத் தேர்தல் விளையாட்டை நடாத்த முன்வந்திருக்கின்றது. அதற்கு துணை போவதுடன் தமிழ் மக்களையும் பலிக்கடாவாக்கும் இவர்களின் குறுகிய சிந்தனைப் போக்கை துரோகமாகக் காண்கின்றோம்.

இவர்களின் இந்த முனைப்பிற்கு இவர்களின் பதவி ஆசையும் கிடைக்கும் சம்பளப்பணமுமே காரணமேயொழிய உண்மையான மக்கள் மீதான அக்கறையோ தமிழ்த் தேசியத்தினை காபந்து செய்யும் நோக்கமோ அடங்கியிருக்கவில்லை என்பது தமிழ் மக்களுக்கான துரதிர்ஷ்டமே.

தேர்தல்களை புறமொதுக்கி ஒத்துழையாமை கோஷத்தை முன்வைத்து உலக நாடுகளின் கவனத்தை முட்கம்பி முகாம்களுக்குள் அடைபட்டிருக்கும் மக்கள் மீதும் இடம் பெயர்ந்து அல்லலுறும் மக்களின் மீள்குடியேற்றத்தையும் தூண்டி துரிதப்படுத்துவதே இப்போது இவர்கள் செய்ய வேண்டிய ஜனநாயகக் கடமையாகும்.

இப்பிரதேச சபைப்பிரதி நிதித்துவம் என்பது ஆயுட் கால பதவியல்ல. மக்களுக்கான நலன்களை இவர்கள் முன்னெடுக்கும் போது அந்த நன்றியை மக்கள் எளிதில் மறந்து விடமாட்டார்கள். அடுத்த தடவை இவர்களைத் தங்கள் ஏகபோகப்பிரதிநிதிகளாக அனுப்பி வைப்பார்கள் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

அதை விடுத்து சிங்கள இனவாத அரசு துக்கிவீசும் எலும்புத் துண்டுகளுக்காக ஆலாய்ப்பறக்கும் இவர்களின் துரோகத் தனத்தை தமிழ் மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
அதே நேரம் இவர்களின் தேர்தல் நிதி வேண்டி புலம்பெயர் நாடுகளில் யாசிக்கும் அமைப்புக்களை அந்நாடுகளின் சட்டங்களூடாகத் தண்டிக்க வேண்டும். அவற்றினை விளம்பரமாகவோ அறிவித்தலாகவோ வெளியிடும் ஊடகங்களையும் சட்டத்தின் பிடியில் எடுத்துச்செல்லும் சாத்தியம் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.

அன்பான புலம்பெயர் தமிழீழ மக்களே, இத்தகைய பிரசார உத்திகள் தங்கள் சொந்த வயிறு வளர்க்கும் சிறுமையின் வெளிப்பாடுகளே அன்றி இடர்பட்டு துயரடைந்து எதிர்காலமே இழந்து நிற்கும் எம்மக்களுக்கான முன்னெடுப்புகள் அல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இத்தகைய புல்லுரிவிகளை இனங்காணுவதுடன் இவர்களின் பசப்பு வார்த்தைகளில் மயங்கவும் வேண்டாம். இத்தகைய பணம் பறிக்கும் கூட்டத்தை நீங்கள் வாழும் தேசங்களில் உள்ள சட்டங்களின் மூலம் தடுத்துக் கொள்ள வேண்டும்.

தமிழ் மக்களுக்கான இதயசுத்தியுடன் தொழிற்படும் ஒரு சக்தியைக் கண்டடையும் வரை இத்தகைய வேஷதாரிகளை இனங்கண்டு புறமொதுக்க வேண்டும்.

//
ஒரு சுதந்திரமான நேர்மையான தேர்தல் நடைபெறுவதற்க்கான வாய்ப்பு மிகக் குறைவாகக் காணப்பட்டாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களை வெற்றிவாகை சூட வைப்பதன் மூலமே தமிழர் தேசியம், தமிழர் தாயகம், தமிழரின் தன்னாட்சி உரிமை ஆகிய அரசியல் வேட்கைகளை உலக நாடுகளுக்கு எண்பித்துக் காட்டலாம்.

மகிந்தா ராஜபக்ச அரசியல் களத்தில் பெற நினைக்கும் வெற்றியைக் கனவாக்கலாம். இவற்றைச் செய்யும் பொறுப்பு பேரளவு புலம்பெயர் தமிழர்களின் கைகளிலேயே உள்ளது. வெறும் வாய்ச்சொல் அருளுவதோடு நின்றுவிடாது புலம்பெயர் தமிழர்கள் பொருளுதவியும் செய்யவேண்டும். இதற்கான முயற்சியை நாம் மேற்கொண்டுள்ளோம்.

உங்கள் அன்பளிப்பைப் பணமாகக் கீழ்க்கண்ட முகவரிக்கு 06-08-2009 முன்னதாக அனுப்பி வைக்கவும். அல்லது கீழ்க்கண்ட காப்பகக் கணக்குக்கு வரவு வைக்கவும்.

TCWA,
56 Littles Road
Scarborough, ON. M1B 5C5

அல்லது கீழ்க்கண்ட காப்பகக் கணக்குக்கு வரவு வைக்கவும்.

TD Canada Trust
Branch No. 1033
Account No.0663 – 5214579

மேலும் கீழ்க்கண்ட அங்காடிகளிடம் ஒரு உறையுள் உங்கள் பெயர் தொ.பே. கீழ்க்கண்ட அங்காடிகளிடம் ஒரு உறையுள் உங்கள் பெயர் தொ.பே. எண், தொகை ஆகியவற்றைக் குறித்து பணத்தைக் கையளிக்கவும்.

1) Babu Catering and Take Out, 4800 Sheppard Avenue East #201 Scarborough
2) Uthayas Super Market, 5010 Steels Ave. West # 14 Etobicoke (Kipling and Steels)
3) Vijaya’s Silk, 27 Dundas Street East, Mississauga.
4) SP Importers, 2853 Lawrence Ave E in Scarborough.

காலம் போதாமல் இருப்பதால் நேரடியாக தமிழ்த் தேசியக் கூட்டணியின் கீழ்க்கண்ட காப்பகக் கணக்குக்கு உங்கள் உற்றார் உறவினர் மூலம் வரவு வைக்கலாம். அல்லது எண் 36, மாட்டின் வீதி, யாழ்ப்பாணம் முகவரியில் உள்ள அவர்களின் தலைமை அலுவலகத்தில் கையளிக்க ஏற்பாடு செய்யலாம்.

S. X. Kulanayagam
N.I.C No. 452661659V
Account No. 1097586
Bank of Ceylon, Hospital Road Branch//



குறிப்பு: இதுவொரு சட்டத்திற்குப் புறம்பான அடாவடி பணம் சேர்க்கும் யுக்தி. இவர்களையும் இதற்கு விளம்பரம் செய்யும் "புதினம்" என்ற இணையத்தளத்தையும் கனடாவில் வாழும் தமிழ் சகோதரர்கள் சட்டத்தின் முன் எடுத்துச் செல்ல வேண்டும்.

மனிதாபிமானத்தின் ஊடாக புல்லுருவிகளைத் தடுத்து நிறுத்த முடியாதபோது அந்நாடுகளின் சட்டத்தின் துணையை நாடுவதில் தவறொன்றுமில்லை.

Wednesday, July 29, 2009


பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்


இலங்கையில் இனப்பிரச்சினை ஒன்று இருக்கின்றதா? இல்லையா? என்பதில் பல நாடுகள் தடுமாறிக்கொண்டிருக்கின்றன. அல்லது தம் தம் தேவைகளுக்கேற்ப இனப்பிரச்சினையென்று ஒன்று இருக்கின்றது.. இல்லவே இல்லை என்று நாடகமாடிக்கொண்டிருக்கின்றன. இதில் முதன்மை இடம் இந்தியாவிற்குத் தான். வெறுமே புகைந்து கொண்டிருந்த இனப்பிரச்சினையை ஊதிப்பெரிதாக்கி இறுதியில் இத்தனை இலட்சம் மக்களின் அழிவிற்கும் துணை போனது இந்தியாவின் இத்தகைய கபடத்தனமே. இயக்கங்களை ஆதரித்து ஆயுதங்களும் பயிற்சியும் கொடுத்து ஊக்கப்படுத்தியதும் ஈற்றில் தடைசெய்யப்பட்ட நாசகார இரசாயன ஆயுதங்களை சிங்கள அரசிற்குக் கொடுத்து வகை தொகையின்றி ஈழத்தமிழ் மக்களைக் கொன்று குவித்ததும் இந்தியாவின் தன்னலம் ஒன்றே குறிக்கோளான இத்தகைய கபடத்தனத்தாலே ஆகும்.

தன் நலனுக்கு அனுகூலமாகும் போது அது "சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரம்" என்பதுவும்
சிறிலங்கா அரசை மிரட்ட "சோற்றுப்பொதிகளை" வீசுவதும் இந்தியாவின் "ஜனநாயகமாக" நினைத்துக் கொண்டிருக்கின்றது.

இதுவரை தம் இன்னுயிரை இழந்த ஈழத்தமிழர்கள் அனைவரின் உயிரிழப்பிற்கும் இந்தியாவே காரணம் என்பதை காலம் கடந்தாயினும் பாமர ஈழத்தமிழனும் புரிந்து வைத்திருக்கின்றான். இனியும் இந்தியாவின் "சோற்றுப்பொதிகளை" நம்பி ஏமாறுவதற்கு யாரும் தயாராகவில்லை. இந்தியா என்ற மனச்சாட்சியற்ற எதிரியை மன்னிக்கவும் யாரும் தயாராகவில்லை.

இத்தனை இழப்பையும் வேதனையையும் ஈழத்தமிழருக்கு கொடுத்த இந்தியா இப்போது சோற்றுப்பொதி நாடகமாக சர்வதேச சமூகத்துடன் சேர்ந்து இயங்கப் போவதாக நாடகமாடுகின்றது.

'விடுதலைப் புலிகளுக்கு பிற்பட்ட காலகட்டத்தில்' சிறிலங்கா அரசின் மீதான புதுடில்லியின் அரசியல் பிடி தளர்ந்துபோய் இருப்தையே காணக்கூடியதாக இருப்பதாகவும் , இழந்துபோன செல்வாக்கை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கு அனைத்துலக சமூகத்துடன் இணைந்து செயற்பட வேண்டிய நிலையில் இந்தியா இருப்பதாகவும்' இந்தியாவின் முன்னாள் இராஜதந்திரியான எம். பத்ரகுமார் கூறியிருக்கின்றார்.


"சீனாவின் மூலோபாயத்தை முறியடிப்பதற்கான பொதுவான அக்கறையில் இந்தியா அமெரிக்காவுடன் இணைந்திருக்கின்றது. ராஜபக்சவின் போருக்கு உறுதியான ஆதரவை வழங்கிய பின்னர் 'அரசியல் தீர்வை' வலியுறுத்தும் பராக் ஒபாமா நிர்வாகத்துடன் நெருங்கிச் செயற்பட வேண்டியதாக டில்லி உள்ளது" என்று இந்தியாவின் வெளிப்படையான தேவையையும் பட்டவர்த்தனமாக ஒப்புக்கொள்கின்றார்.

ஈழத்தமிழர்களுக்கான "சோற்றுப்பொதிகளை" தயார் செய்வதற்கான இந்தியாவின் தேவைகள் இவ்வாறுதான் பெருகிச் செல்கின்றன.

இதனை படிப்பறிவற்ற ஈழத்துப்பாமரனும் விளங்கிக்கொண்ட அளவில் புலிகளின் "பின்னாள்" தலைவர்கள் என்று தம்மைப் பிரகடனப்படுத்தியவர்கள் புரிந்து கொள்ளவில்லை. புரிந்து கொள்ளவில்லை என்பதை விட கால் பிடித்து பிழைப்பதில் "சுகம்" கண்டு கொண்டுள்ளார்கள் என்று தான் எண்ண வேண்டியிருக்கின்றது.

புலிகளின் "பின்னாள்" தலைவராக தன்னை வரித்துக்கொண்டிருக்கும் செல்வராஜா பத்மநாதன் அந்த "சுகத்தில் முதுகு சொறிந்து கொள்ளும் " அவலத்தை இந்திய நாளேடு ஒன்றிற்கு அளித்த பேட்டியில் வெளிப்படுத்தியிருக்கின்றார்.

ஈழத் தமிழர்கள், அவர்களின் வேட்கையான தனியான தாயகத்தைப் பெற்றுக்கொள்வதற்கு இந்தியா உதவும் என தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் இந்தியாவில் இருந்து வெளிவரும் 'டெக்கான் குரோனிக்கல்'அளித்துள்ள பேட்டியில் நம்பிக்கை வெளியிட்டிருக்கின்றார்.

"ஒதுக்கப்பட்ட மக்கள் சார்பாக நின்று அவர்களுக்கு விடுதலையைப் பெற்றுக்கொடுப்பதில் இந்தியா கடந்த காலத்தில் முக்கிய பங்காற்றியிருக்கின்றது. உலகம் முழுவதில் உள்ள ஈழத் தமிழர்களும் தமது விடுதலையைப் பெற்றுக்கொடுப்பதற்கு இந்தியா உதவும் என நம்புகின்றார்கள்"


பம்மாத்து அரசியலையும் புலிகள் சேர்த்து வைத்த மக்கள் சொத்துகளைப் பங்கு போட்டுக்கொள்ளவும் கால அவகாசம் தேடுவதை விட்டு உருப்படியாக ஏதாவது செய்தால் மக்கள் நன்றியாவது பாராட்டுவார்கள்.


"இந்தியாவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் தமிழ் இனவாதிகளுக்குமே இன்று அரசியல் தீர்வு தேவைப்படுகின்றதே தவிர தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு தேவை இல்லை. அவர்கள் அரசியல் தீர்வைக் கேட்கவும் இல்லை. அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவால் முன்வைக்கப்படும் அரசியல் தீர்வு யோசனைகளைக் குப்பைக்கூடைக்குள் வீசிவிடவேண்டும்"
எனவும் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை தேசப்பற்றுள்ள தேசிய முன்னணியின் தலைவர் குணதாச அமரசேகர வலியுறுத்தி யிருக்கின்றார்.

இது ஈழத்தமிழர் இருப்பையே கேள்விக்குறியாக்கும் சிங்களவர் எண்ணம். அதேபோல சிங்களப் பெரும்பான்மை வாதிகளினதும் சிங்கள அரசினதும் தீர்வுத் திட்டம் இவ்வாறு இருக்கக் கூடும் என்றும் எம். பத்ரகுமார் எதிர்வு கூறியிருக்கின்றார்.

"தமிழர்களின் பிரச்சினைக்கான இறுதித் தீர்வுத் திட்டம் ஒன்று ராஜபக்சவிடம் இருக்கின்றது. தமிழர்களின் தாயகத்தில் சிங்களவர்களைத் திட்டமிட்ட முறையில் குடியமர்த்துவதுடன் சம்பந்தப்பட்ட திட்டமே இது. இதன் மூலம் அடுத்த தசாப்தத்தில் இந்தப் பிராந்தியத்தின் குடித்தொகை அடர்த்தி தமிழர்களுக்குப் பாதகமான முறையில் மாற்றப்பட்டுவிடும். கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் பிரச்சினையை இவ்வாறுதான் சிறிலங்கா அரசு தீர்த்துவைத்தது"

"தமிழர்கள் இந்தியாவை நோக்கி பெருமளவில் வெளியேறுவதை சிங்க அரசுகள் தமது அரச கொள்கையாக எதிர்காலத்தில் ஊக்குவிக்கும்"
என எதிர்பார்ப்பை வெளிப்படுத்தும் பத்ரகுமார், "தமிழர்களும் இவ்வாறு இந்தியாவுக்கு குடிபெயர்ந்து செல்வதை விரும்பலாம். இதுதான் சிங்கள அரசு விரும்பும் 'தமிழர் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வாக அமையும்'

இது ஒரு வகையில் "சோற்றுப்பொதி" வீசும் இந்தியாவின் அபிலாஷைகளுக்காக அவர் வரித்துக் கொடுக்கும் காரணங்களாக இருக்கக் கூடுமெனினும் சிங்கள ஏகாதிபத்தியக் கனவும் அதே திசையில் பயணிக்கும் என்பதையும் மறுப்பதற்கில்லை.

"ஒதுக்கப்பட்ட மக்கள் சார்பாக நின்று அவர்களுக்கு விடுதலையைப் பெற்றுக்கொடுப்பதில் இந்தியா கடந்த காலத்தில் முக்கிய பங்காற்றியிருக்கின்றது. உலகம் முழுவதில் உள்ள ஈழத் தமிழர்களும் தமது விடுதலையைப் பெற்றுக்கொடுப்பதற்கு இந்தியா உதவும் என நம்புகின்றார்கள்" எனத் தெரிவித்த செல்வராஜா பத்மநாதன், "இந்தியா எம்மைப் புரிந்துகொள்ள வேண்டும்" எனவும் கேட்டுக்கொண்டார்.

உலக அரசியலின் போக்கையும் இந்தியாவின் சுயநலன்களையும் புரிந்து கொள்ளாது எவ்வளவு தூரம் அவரின் அறியாமை வெளிப்பட்டிருக்கின்றது.(இதில் இராஜதந்திரம் பொதிந்திருப்பதாக யாராவது பம்ம முன்வரக்கூடும். இந்திய சுயநல பச்சோந்தித்தனத்தின் முன்னால் உங்கள் இந்திய மனதை மாற்றும் இராஜதந்திரம் செல்லாக்காசுதான்)விட்டில் பூச்சித்தனத்துடன் மீண்டும் மீண்டும் விளக்கில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் சுய இச்சை. இவர்கள் தான் ஈழத்தமிழினத்தின் நம்பிக்கை நட்சத்திரங்களாம். கொடுக்கப்பட்ட பலி போதாது என்று மஞ்சளும் குங்குமமும் பூசி பலியாடுகளைத் தயார்ப்படுத்தும் பூசாரித்தனம். தமிழ் மக்கள் இவர்களை இனங்கண்டு புறமொதுக்க வேண்டும்.

"தற்போது நாம் செயற்குழு ஒன்றை அமைத்துள்ளோம். அந்தக் குழு நாடு கடந்த தமிழீழ அரசு ஒன்றை அமைப்பது தொடர்பாக ஆராய்ந்து வருகின்றது. கடந்த அரை நூற்றாண்டு காலமாக எமது மக்களின் கனவாக இருந்துவரும் தமிழீழத்தை அடைவதற்கான செயற்திட்டம் ஒன்றை இந்தக் குழு தயாரித்து வருகின்றது" - செல்வராஜா பத்மநாதன்

இனப்படுகொலை முடிந்து மூன்று மாதங்களும் உருண்டோடிவிட்டது.இப்பொழுது தான் செயற்குழு அமைத்திருக்கின்றார்களாம். முகாம்களில் புண்ணாகிப்போன மனங்களுடன் அடைபட்டுக்கிடக்கும் மக்கள் குறித்து ஒரு துரும்பையும் தூக்கிப்போடவில்லை. சர்வதேச சமூகத்துடன் சேர்ந்து எந்தச் செயற்பாட்டிலும் ஈடு படவில்லை. உதவி அமைப்புகளின் உதவிகள் அந்த அல்லல்ப்படும் மக்களிடம் சென்று சேர எந்த நடவடிக்கையும் இல்லை.

வன்னியில் அகப்பட்டிருந்த தங்கள் தலைவரையே காக்க முடியாது தப்பியோடிய தனி நபர்கள்

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்
தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.

என்ற பெயரில் மாமனிதர் பட்டங்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். அதே குதிரை அதே குண்டுச்சட்டி. அப்போது மாவிலாறில் செத்துத் தொலைந்தவர்கள் எல்லாம் மண்ணாங்கட்டிகளா ? சிங்களத்தின் இருண்ட சிறைகளில் இன்றும் தினம் தினம் கற்பிழந்தும் கடும் சித்திரவதைகளில் அழுந்திக்கிடக்கும் அவர்களெல்லாம் யார்?

புலிகளோடு இருந்ததனால் புலிகளுக்கு வால் பிடித்ததனால் .. அவர்கள் என்ன தீண்டத்தகாதவர்களா?

கோட்டுச் சூட்டுடன் பிளைற்றில் பறந்து பறந்து மக்களால் புலிகளுக்கு வழங்கப்பட்ட சொத்தைக் காபந்து பண்ணத்துடிக்கும் இவர்கள் ஏன் அவர்களைப்பற்றிச் சிந்திக்கவில்லை.

புலிகளின் பினாமிகள் பெயரில் இதுவரை நடாத்தப்பட்டு வந்த புடவைக்கடைகள்,சோற்றுக்கடைகள், பலசரக்குக் கடைகள் எங்கும் எல்லாம் திடீர் திடீரென்று மலிவோ மலிவு விற்பனையுடன் திடீர் திடீரென்று (பாங்ரப்ஸியென்று ) மூடப்படுகின்றது. கிடைத்ததைச் சுருட்டிக்கொண்டு ஓடுகின்றார்களா? யாரிடம் கணக்குக் கேட்பது?

மக்கள் ஒன்றும் மண்ணாங்கட்டிகள் அல்ல.. அவர்கள் தங்கள் தலைமையைக் கண்டெடுப்பார்கள். அவ்வாறு தான் வரலாறு எழுதப்படுகின்றது.

குறிப்பு: பாங் ரப்ஸி அடிக்கப்படும் புலிப்பினாமிகளின் விபரம் விரைவில் வெளிவிடப்படும். தகவல்கள் தெரிந்தவர்கள் அனுப்பி வைக்கலாம்..ஆதாரத்துடன்...

Monday, July 27, 2009


இந்தியா என்பது முட்டாள்கள் மட்டுமே வாழும் உலகமா?



இந்தியா என்பது பற்றி உங்களுக்கு ஏதாவது கருத்திருக்க முடியும்.ஆனால் இந்தியா என்பதன் "தார்மீக வலு" சமீப நாட்களாக உடைபட்டு வருகின்றது என்று தான் தோன்றுகின்றது. இந்தியா தோன்றி 62 ஆண்டுகளுள் அதன் "பிரமாண்டம்" அதிகம் சேதம் அடைந்திருக்கின்றது. இந்தியா என்பது அகிம்சையை அன்பை போதிக்கும் கருணையின் ஊற்றுக்களான மதத்தைத் தோற்றுவித்த மண் என்ற பெருமையில் மிதந்த ஒரு நாடு. அதுவே அதற்கிருந்த மதிப்பும் மரியாதையும். சோவியத்தைப்போல் வர்க்கப் புரட்சியாலோ அமெரிக்காவைப் போல பிரமாண்ட வலிமையாலோ அறியப்பட்டதல்ல.

இன்று இந்தியாவின் உள் அடக்கப்பட்டிருந்த பல வேற்றுமையின் "முகங்கள்" வெளிப்படத் தொடங்கியிருக்கின்றன. அதன் வெளிப்பாடாக இந்தியாவின் முகம் குரூரத்தைப் போர்த்திக் கொள்ளத் துவங்கியிருக்கின்றது. கயர்லாஞ்சியில் பிரியங்கா போன்ற அடக்கப்பட்டவர்களை ஆதிக்க சாதி வெறியர்கள் செய்த பாலியல் வல்லுறவு, மணிப்பூரில் ‘ இந்திய இராணுவமே எங்களையும் பாலியல் பலாத்காரம் செய்’ என தாய்மார்கள் நடத்திய நிர்வாண போராட்டடங்கள்,காஷ்மீரில் தினம் தினம் கொல்லப்படும் குழந்தைகள் சிறுவர்கள் பெண்கள் அப்பாவிகள், ஈழத்தில் உயிர்குடித்த இந்திய ஆயுதங்கள் என்று எங்கும் குரூரத்தின் இரத்தம் தெறிக்கின்றது.

இலஞ்சம் இலாவண்யம் மட்டுமே அறிந்த அரசியல்வாதிகளின் கைகளில் அகப்பட்டு இந்தியா சின்னாபின்னமாகின்றது என்றால் பக்தி என்ற பெயரில் முட்டாள் தனம் செய்யும் பக்தர்களின் கூட்டமும் அதன் ஆன்மாவைக் கொன்று போடுகின்றது.

அண்மையில் சூரியகிரகணப்போதில் பிரமாண்ட இட்லிகள் கடலில் பக்தியின் பெயரால் கரைக்கப்பட்டது என்றால் கொதிக்கும் எண்ணெய்ச்சட்டியில் வெறும் கைகளால் வடை சுட்ட கோமாளித் தனம் அரங்கேறியிருக்கின்றது.

அவுஸ்திரேலியாவில் இந்திய மாணவர்களின் "காட்டுமிராண்டித்தனம்" பேசப்பட்டு தாக்கப்பட்டதற்கு இது இன்னும் வலு சேர்க்கின்றது. தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை என்பார்கள். பிளைற் ஏறி கடல் கடந்தால் மட்டும் இந்த"சாகச" மனநிலை மாறிவிடுமா? என்ன?

இந்தியா என்பது முரடர்களும் வாழும் பூமி என்பது தான் புதிய தெளிவு.

இனி நடந்தது என்ன?


போளூர் அருகே பக்தர்கள் கொதிக்கும் எண்ணெய் சட்டியில் கையால் வடை சுட்டனர். அதை சாப்பிட்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதால், ஒரு வடை 1,500 ரூபாய்க்கு ஏலம் போனது. போளூர் அடுத்து துரிஞ்சிக்குப்பம் கிராமத்தின் கீழ் குளக்கரை ஆதிபராசக்தி அம்மன் கோவிலில், ஒன்பதாம் ஆண்டு ஆடிப்பூர விழா நேற்று முன்தினம் நடந்தது. பக்தர்கள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தும், சிறப்பு பூஜையும் நடத்தினர். பலர் முதுகில் அலகு குத்தி தேர் இழுத்தனர். 108 பால் குடங்களுடன் பெண்கள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். பக்தர்களின் மார்பு மீது உரலை வைத்து அதில் கொம்பு மஞ்சள் போட்டு இருவர் உலக்கையால் இடித்து தூளாக்கினர். முள்மீதும் நடந்து சென்றும் தங்கள் நேர்த்தி கடனை பக்தர்கள் செலுத்தினர்.


தொடர்ந்து கொதிக்கும் எண்ணெயில் வடை சுட்டு அதை மூன்று பக்தர்கள் தங்கள் கையால் எடுத்தனர். இந்த வடையை சாப்பிட்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதனால், வடை வாங்க பக்தர்கள் மத்தியில் பெரும் போட்டி உருவானது. அதையடுத்து, வடை ஏலம் விடப்பட்டது. அதிகபட்சமாக ஒரு வடை 1,500 ரூபாய் வரை ஏலம் போனது. போளூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Wednesday, July 22, 2009


சூரிய கிரகணமும் இரண்டு கதைகளும்

சூரிய கிரகணத்தை இன்று இந்தியாவின் பல இடங்களிலும் பார்க்கக் கூடியதாய் இருந்தது. அதையிட்ட ஆய்வுகளிலும் விஞ்ஞானிகள் மும்முரமாய் ஈடு பட்டிருந்தனர். காலம் எவ்வளவுதான் முன்னோக்கிப் போய்க்கொண்டிருந்தாலும் நம்மவர்கள் அதையெல்லாம் கண்டு கொள்ளாத மாஜாஜால உலகிலேயே வாழ்க்கை நடாத்திக் கொண்டிருக்கின்றனர்.\

ஊழல் பெரிச்சாளிகளால் கோட்டையில் உட்கார்ந்து ஆட்சி செய்ய நம்ம இடத்தில் தான் முடியும். குறைந்த பட்ச மனித விழுமியங்களைக் கூட காப்பாற்ற முயலாத மக்கள் உண்டென்றால் அது நாமாகவே இருக்கும். இதோ இரண்டு கதைகள். உலகம் எங்கேயோ போய்க்கொண்டிருக்கின்றது. நாம் அடுப்பங்கரையைச் சுத்தியிருந்து இட்லி சாப்பிடுவதற்காகவே உயிர் வாழ்கின்றோம்.




கதை1:இந்திய விமானப்படையுடன் இணைந்து, வானியல் இயற்பியலாளர்கள் குழு ஒன்று இன்று நடந்த சூரிய கிரகணத்தை விமானப்படை விமானம் மூலம் பறந்து சென்று ஆய்வு செய்துள்ளது.

இந்த ஆய்வுக்காக ஒரு போர் விமானம் மற்றும் ஒரு சாதாரண பயணிகள் விமானம் மூலம் ஆய்வு நடந்தது.

இந்த ஆய்வின்போது மிராஜ் 2000 ரக போர் விமானமும், ஏஎன் 32 ரக போக்குவரத்து விமானமும் பயன்படுத்தப்பட்டது.

இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணத்தை அவர்கள் விமானத்தில் பயணித்தபடி படம் எடுத்துள்ளனர். மேலும் சில சோதனைகளையும் அவர்கள் விமானத்தில் பறந்தபடி செய்துள்ளனர்.

குவாலியரில் உள்ள விமானப்படைத் தளத்திலிரு்நது மிராஜ் விமானம் கிளம்பியது. பயணிகள் விமானம், ஆக்ராவிலிருந்து கிளம்பி கஜூராஹோ வரை சென்றது.

இந்த ஆய்வில் சுயேச்சை ஆய்வு அமைப்பான விக்யான் பிரசார் மற்றும் மத்திய அரசின் அறிவியல், தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர்.

மேலும் சூரிய கிரகணத்தைப் படம் பிடிக்கும் நிகழ்வில் விக்யான் பிரசார், உதய்ப்பூரைச் சேர்ந்த சோலார் அப்சர்வேட்டரி, பெங்களூரைச் சேர்ந்த இந்திய விண்வெளி இயற்பியல் கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பங்கேற்றனர்.



கதை 2:கடந்த 7ம் தேதி சந்திர கிரகணம் நடந்தது. இன்று முழு சூரிய கிரகணம் நடந்தது. அடுத்த மாதம் 6ம் தேதி இன்னொரு சந்திர கிரகணம் வருகிறது.
கடந்த 7ம் தேதி சந்திர கிரகணம் நடந்தது. இன்று முழு சூரிய கிரகணம் நடந்தது. அடுத்த மாதம் 6ம் தேதி இன்னொரு சந்திர கிரகணம் வருகிறது.

இப்படி அடுத்தடுத்து கிரகணங்கள் நிகழ்வதால் சுனாமி போன்ற இயற்கைப் பேரிடர்கள் சம்பவிக்கும் என ஜோசியக்காரர்கள் பீதியைக் கிளப்பி விட்டுள்ளனர்.

இதையடுத்து கோவை மல்லிப்பூ இட்லி நிறுவனம் என்ற நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், ஜோதிடர்களின் ஆலோசனையைக் கேட்டு, சென்னை மெரீனா கடற்கரையில் நவதானியங்களால் ஆன பிரமாண்ட இட்லியை வைத்து பூஜை செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி இந்த பிரமாண்ட இட்லி தயாரிக்கப்பட்டு இன்று காரில் ஏற்றி கடற்கரைக்குக் கொண்டு வந்தனர்.

கலங்கரை விளக்கம் அருகே இட்லியை இறக்கி கடற்கரையில் வைத்து பூஜைகள் தொடங்கின.

இந்தப் பரிகார பூஜையில், தமிழ்நாடு வணிகர் பேரவைத் தலைவர் வெள்ளையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வேத மந்திரங்கள் முழங்க பூஜை அமர்க்களமாக நடந்தது. பின்னர் இட்லியை படகில் ஏற்றி கொண்டு போய் கரைத்தனர்.

பிரமாண்ட இட்லி என்பதால் வழக்கமான சட்டியில் வைத்து கேஸ் அடுப்பி்ல் வேக வைக்காமல், விறகு அடுப்பி்ல வைத்து அவித்தனராம்.

கிட்டத்தட்ட ஒரு மாத கஷ்டத்திற்குப் பின்னர் இந்த ராட்சத இட்லி உருவானதாம்.

இந்த இட்லியை உருவாக்கியவர் பெயர் இனியவன். இவர் கடந்த ஜனவரி மாதம் கிட்டத்தட்ட 90 கிலோ எடையுடன் கூடிய 3 இட்லிகளைத் தயாரித்து லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றவராம்.

உலகம் எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறது, நாம் இன்னும் இட்லியிலேயே இருக்கிறோம்..

Tuesday, July 21, 2009


"கைடு" பத்மநாதன்


"புலிகளின் தாகம் தமிழீழத் தாகம்" கேட்ட போதெல்லாம் மயிர்க்கால்கள் சிலிர்த்து சிலும்பி நின்ற எபக்ட்டை யாராலும் தந்திருக்க முடியாது. அப்படியொரு "கிரேஸ்". வன்னியில் புலிகளும் அப்படித்தான் போராடிக்கொண்டிருந்தார்கள் என்று நினைத்திருந்தேன்.ஆனால் இப்போது தான் தெரிகின்றது வழி தெரியாத ஒரு "போராட்டத்தில்" தான் மாய்ந்து போயிருக்கின்றார்கள் என்று.

அதனால் தான் இப்போது "கைடு" பத்மநாதன் வழி காட்ட வெளிக்கிட்டிருக்கின்றார். தேசம் கடந்த அரசாங்கம் சொதப்பிப்போன பின்பு சேர்த்து வைத்த சொத்துக்களை கொள்ளை கொண்டு போக ஒரு புது அவதாரம்.

செத்துப்போன 50 ஆயிரம் மக்களின் சாம்பல் மேட்டில் புதிய "வழிகாட்டி" உதயம். இன்னும் எத்தனை ஆயிரம் மனித உயிர்களைக் குடிக்க இந்த நாடகம். போகும் இடம் தெரியாத வழிப்போக்கர்கள்...

அடித்து வைத்த சொத்தைக் காபந்து பண்ண எடுக்கும் முயற்சிதான் இந்த "கைடு" வேலை என்றே தோன்றுகின்றது. யாராவது "கொள்கை"யுள்ளவர்கள் கேள்வி கேட்க சந்தர்ப்பம் வாய்த்திருக்கின்றது.

"கைடு" பத்மநாதன் நமக்கும் ஒரு பொட்டலம் அனுப்பி வைக்கின்றது... நமக்குத் தான்..நம்மையல்ல...(புலிகளின் தாகம் பொட்டலம் கட்டுவது என்று பேசிக்கொள்கின்றார்கள்)

கருணாநிதியிடம் பிடித்த பத்து

இப்போது பதிவுலகிலே பத்துப் போடுவது தான் பிரபலம். சரி நானும் ஏதாவது பத்துப்போடுவோம் என்று போட்ட தலைப்புத்தான் அது. தலைப்பைப்பார்த்ததும் நம்ம தங்க மணி சொல்லியது."உங்களுக்கும் பத்து போட ஆசை வந்திரிச்சா"ன்னது தான்.

பாவம் அவங்க... "பத்து"ப் போட அல்ல போட்டுக்கன்னு(எலும்பு முறிவிற்கான வைத்தியம் அல்லது முறிக்கவேண்டிய எலும்புள்ள பைத்தியங்களுக்கான வைத்தியம்) இருந்திருக்கணும்...அவங்களது பதிவிரத பூஜையிலும் பக்தியிலும் அவங்களுக்கு அவ்வளவு நம்பிக்கை.

தலைப்பை எழுதி கோடு கிழித்து ஒண்ணு போட்டாச்சி...ஒன்ணும் அடைப்புக்குறிக்குள் போட்டது மட்டும் தான் . குறிக்கோளாய் எதை எழுதுவது என்பதுதான் விளங்காத புதிராய் தவித்துப் போய் விட்டேன்.

ஒண்ணுக்குப் பக்கத்தில் எழுதினேன். ஏதாவது எழுதணும்...எழுதியாகி விட்டது.எத்தனயோ இருக்கின்றது...பின் நவீனத்தின் முதன்மைத் தத்துவம்...சரிங்களா...

அடுத்து இரண்டு. அடைப்புக்குறிக்குள்..எதையாவது எழுதணும்...ஏதாவதில் ஒன்றாகிய ..எதையாவது.. அப்பாடா எழுதியாகிவிட்டது இரண்டாவது விடயம்.

மூணாவது அடைப்புக் குறியுள். வெளிப்படையாக "எப்படியாவது" என்ற என் பிரயத்தனம் நெளிந்துகொண்டிருக்கின்றது.

நாலாவது. நாளையும் நாள் இருக்கின்றது என்பதால் பெருமூச்சு..(எனக்கு மட்டும் லீவு தந்த "அவர்"க்கு நன்றி)

ஐந்தாவது.ஏதாவது எழுதணும்.. தேடல் என்பதே வாழ்க்கை ..உறைக்கின்றது. தேடல் இல்லாத மனிஷனா நான்...

ஆறாவது.அதிரடியாக் கருத்துச் சொல்லப் போறவங்களை நினைத்து பயமாய் இருக்கின்றது... என் தங்க மணியிடம்(நான் ஆணாயிருப்பதால்) சொல்லிவிட்டு "சைபர் கிரைம்"க்கு சொல்ல விழையும் அபியின் அப்பாக்களை நினைக்க கிர்ரிடுகின்றது.

ஏழாவது.கடிதம் எழுதியே பழக்கப்பட்டவர் (முரசொலியில் மட்டும்..அழுத்திச் சொல்வதற்கு காரணம் அவர் எழுதிய வேறெந்தக் கடிதத்திற்கும் இதுவரை பதிலில்லை) பதிலெழுதினால் எப்படி நம் ரீயாக்ஷன் இருக்கும்.

எட்டாவது. இப்படியும் எழுதித் தான் ஆகணுமான்னு கேள்வி எழுகின்றது...

ஒன்பதாவது. எழுத வந்து விட்டு எழுதாமல் பீலா விடுவது என்பது...

பத்தாவது. அப்படியா.. எழுதி முடித்து விட்டேனா பத்தாவதையும் ..உஷ்..அப்பாடா...




அட ..அவரு கையில பத்து வெரல்.. பிடிச்சிருக்குங்க...

வேல் தர்மாவும் தர்மமும்

பாவம் நம்ம வேல் தர்மா..ரொம்ப காலமாவே கத்திக் (கத்துக்) கிட்டிருக்காரு...யாரும் கேக்க மாட்டேங்கிராங்க... இவரு வன்னியில தோத்துட்டாரு ஆனா வாய்ஸ்ல "நிக்கி"ராரு...

இப்போ ஒரு படம் காட்டியிருக்காரு.. சோனியா vs கிலாரி கிளிண்டன் (கிளிஞ்சன்)னு தான் எழுத ஆசை..மோனிக்கான்ன கவிதைய கிளரிக் கிளிச்சவராச்சே...

அழகான பொண்ணுங்க பக்கத்துல ஒரு பைசாசத்தையும் போடணும் போல "தெரியாத முனியை விட தெரிஞ்ச பிசாசு மேல்"னு சொல்லுவாங்க அதனால கூட இருக்கலாம்.

என்னா தெரிஞ்ச பிசாசு சுவைத்து உண்டது 50 ஆயிரம் ஈழத்தமிழங்க..வலிக்குது...
அனுப்ப/அடையாளமிட

Add-Tamil